Apr 8, 2010

பரிசு


பரிசுகள் பரிமாறிக் கொள்ள
காதலர்களுக்கு மட்டும்
காரணங்களே தேவைப்படுவதில்லை.

நேற்று நீ தந்து போன
கவிதைப் புத்தகத்தை
படிக்கப் பிரிக்கையில்

உள்புறம் மடங்கியிருந்த
ஒற்றைத்தாளின்
வெட்டுக்கு விலகிய முனை
சற்றே வெளியில்
நீட்டித் தெரிகிறது,

உன்
சின்னப் புன்னகையில்
மின்னலாய்த் தெரியும்
தெத்துப்பல் போல..!

36 comments:

  1. என்னுடைய புத்தகத்தின்
    எடுப்பான வெளி முனையும்
    பெண்ணவளின் பளீரெனும்
    புத்தகத்தின் தெத்துப்பல்.

    சொன்னதென்னை கவர்ந்திழுக்க
    சிந்தனையை வியக்கின்றேன்
    இன்னும்பல எழுதியெம்மை
    இன்பத்தில் ஆழ்த்திடுவீர்...

    பிரபாகர்...

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன ஒரு ரசனை!!! வியந்தேன்...கண்டேன் காதலை!!!

    ReplyDelete
  3. அருமையான‌ க‌விதை... ர‌சித்து எழுதியுள்ளீர்க‌ள்..

    ReplyDelete
  4. உங்கள் கவிதையின் நிசப்தத்தில் ஓங்கி ஒலிக்கிறது உங்களின் காதல் ரசனை . வாழ்த்துக்கள்!
    தொடருங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  5. ம்ம்ம்.... அழகான வரிகள்...

    காதல் கவிதைகளுக்கு என்றும்
    சத்ரியன் என்பதை மீண்டும்
    எடுத்துச் சொல்கிறது
    தெற்றுப்பல்...!

    அது சரி... வீட்ல எல்லாருக்கும் தெற்றுப்பல் விசயம் தெரியுமா?

    //புத்தகத்துக்குள் இருக்கும்
    மயிலிறகு குட்டிபோட்டதோ
    இல்லையோ - உன்
    கைபட்டு வந்ததால்
    என்னை கட்டிப்போட்டது...//
    இது உங்கள் கவியின் தாக்கத்தால் பின்னூட்டம் இடும்போது எழுதியது..

    ReplyDelete
  6. அட, அடடா...... தெத்து பல்லுக்கு, யாரும் சொல்லாத உவமை. nice! :-)

    ReplyDelete
  7. //பெண்ணவளின் பளீரெனும்
    புத்தகத்தின் தெத்துப்பல்.

    சொன்னதென்னை கவர்ந்திழுக்க
    சிந்தனையை வியக்கின்றேன்
    இன்னும்பல எழுதியெம்மை
    இன்பத்தில் ஆழ்த்திடுவீர்...//

    பிரபா,

    முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  8. //ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன ஒரு ரசனை!!! வியந்தேன்...கண்டேன் காதலை!!!//

    தமிழ்,

    நீங்க காதலை கண்டிருக்கீங்க.
    நான் கொண்டிருக்கிறேன்.அதான் இப்படி?

    ReplyDelete
  9. //அருமையான‌ க‌விதை... ர‌சித்து எழுதியுள்ளீர்க‌ள்..//

    நன்றி நண்பா.

    ReplyDelete
  10. //உங்கள் கவிதையின் நிசப்தத்தில் ஓங்கி ஒலிக்கிறது உங்களின் காதல் ரசனை . வாழ்த்துக்கள்!
    தொடருங்கள் மீண்டும் வருவேன்//

    சங்கர்,

    அவ்வளவு பலமாவா ஒலிக்கிறது. உங்க நிசப்தத்தை களைச்சிட்டேன் போல.

    எப்பவும் வரலாம். நன்றி.

    ReplyDelete
  11. //ம்ம்ம்.... அழகான வரிகள்...

    காதல் கவிதைகளுக்கு என்றும்
    சத்ரியன் என்பதை மீண்டும்
    எடுத்துச் சொல்கிறது
    தெற்றுப்பல்...!

    சே.குமார்,

    கவிஞர் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

    //அது சரி... வீட்ல எல்லாருக்கும் தெற்றுப்பல் விசயம் தெரியுமா?//

    இன்னும் எம்மகள் ‘சாரலின்பா’வுக்கு மட்டும் சொல்லல...!

    ReplyDelete
  12. ////புத்தகத்துக்குள் இருக்கும்
    மயிலிறகு குட்டிபோட்டதோ
    இல்லையோ - உன்
    கைபட்டு வந்ததால்
    என்னை கட்டிப்போட்டது...//
    இது உங்கள் கவியின் தாக்கத்தால் பின்னூட்டம் இடும்போது எழுதியது..//

    குமார்,

    ஆளாளுக்கு பின்னூட்டத்தின் போதே கவிதை வந்தால் ‘ரூம்’ போட்டு யோசிக்கிற எங்க பாடு படுத்துருமே சாமி.

    அழகா இருக்கு. தலையீட்டுக்கு மன்னிக்கனும். “புத்தகதினுள் பொத்தி வைத்த’’- என்று படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  13. //அட,அடடா...... தெத்து பல்லுக்கு, யாரும் சொல்லாத உவமை. nice!:-)//

    சித்ரா(அக்கா),

    ஒன்னு மட்டும் நல்லாத் தெரியுது. நிறைய கவிதை படிக்கிறீங்க. அதனாலதான் உவமையை உத்து கவனிக்கிறீங்க.

    நன்றியக்கா.

    ReplyDelete
  14. நேற்று நீ தந்து போன
    கவிதைப் புத்தகத்தை
    படிக்கப் பிரிக்கையில்\\\\\
    ஜய்யய்யோ...நீங்க சிங்கையில்
    இல்லையா? எங்கிட்டச் சொல்லாமப்
    போக எப்படி ஜய்யா மனசு வந்தது!!


    உன்
    {சின்னப்} புன்னகையில்
    மின்னலாய்த் தெரியும்
    தெத்துப்பல் போல..!\\\\\

    ஓஓஓ..சின்னப் பொண்ணா?
    பரவாயில்லை,பரவாயில்லை...

    நானும் பயந்து விட்டேன் மீண்டும்
    ஒரு காதலா!என்று!!

    ஆமா கொடுத்த எடுத்த விசயமெல்லாம்
    கருணாகரசுக்குத் தெரியாதா?

    ReplyDelete
  15. நல்லாயிருக்கு நண்பரே.

    ReplyDelete
  16. இப்பவே காதலிக்கணும் போல இருக்குயா

    ReplyDelete
  17. கல்யாணத்துக்கு அப்புறம் காதலிச்சாதான் காதல் ரசம் சொட்டும் கவிதைகள் வரும் போல இருக்கு

    வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  18. தெத்துப்பல் அழகா இருக்கு சத்ரியன்

    :)

    ReplyDelete
  19. //ஆமா கொடுத்த எடுத்த விசயமெல்லாம்
    கருணாகரசுக்குத் தெரியாதா?//

    கலா,

    அவரு எம் “மாமா” தானே.

    தெரிஞ்சாலும் தப்பில்ல.

    ReplyDelete
  20. நன்றி சரவணகுமார். நண்பர் எப்படி இருக்கார்.?

    ReplyDelete
  21. //இப்பவே காதலிக்கணும் போல இருக்குயா//

    ஜெரி,

    இப்பவே என்ன? எப்போதும் காதலிக்கனும்.

    ReplyDelete
  22. //கல்யாணத்துக்கு அப்புறம் காதலிச்சாதான் காதல் ரசம் சொட்டும் கவிதைகள் வரும் போல இருக்கு

    வாழ்த்துக்கள் நண்பா//

    விஜய்,

    உண்மை நண்பா.

    நன்றி.

    ReplyDelete
  23. //தெத்துப்பல் அழகா இருக்கு சத்ரியன்

    :)//

    நன்றிங்க நேசன்.

    ReplyDelete
  24. அட இது மாயோவின் கவிதை என நினைத்து கமெண்ட் போட்டு இருக்கேனே சத்ரியன் உங்களோடதா தெத்துப்பல்லின் கூர்மை அழகு

    ReplyDelete
  25. நன்றிங்க தேனக்கா.

    ReplyDelete
  26. அட...பாருங்களேன்
    எதுக்கு எது உவமை !

    சத்திரியா....இதைத்தான் எங்கட ஆக்கள் சொல்லுவினம் "பெடி(பொடியன்) வலு முன்னேற்றம்" எண்டு.

    ReplyDelete
  27. //சத்திரியா....இதைத்தான் எங்கட ஆக்கள் சொல்லுவினம் "பெடி(பொடியன்) வலு முன்னேற்றம்" எண்டு.//

    ஹேமா,
    இதென்ன
    எங்கட ஆக்கள்? உங்கட ஆக்கள்?

    எல்லாரும் நம்மட ஆக்கள் இல்லியா?

    உம் பேச்சி ”கா”.

    ReplyDelete
  28. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  29. எங்கட ஆக்கள் எண்டா பொதுவா யாழ் தமிழைக் குறிப்பிட்டேன் சத்ரியன்.இதுக்கெல்லாம் குறையெடுக்கலாமோ !சரி சரி நான் எப்பவும் உங்களோட நேசம்.

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.சாரல் குட்டிக்கும்கூட அன்பு முத்தங்களோடு.

    ReplyDelete
  30. மாம்ஸூ

    அருமையாக சொல்லிவிட்டாய் கிராமத்து காதலை ...

    ReplyDelete
  31. //சரி சரி நான் எப்பவும் உங்களோட நேசம்.//

    டேங்குஸ்.

    //இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.சாரல் குட்டிக்கும்கூட அன்பு முத்தங்களோடு.//

    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், சாரலின் அன்பு முத்தங்களோடு.

    ReplyDelete
  32. //மாம்ஸூ

    அருமையாக சொல்லிவிட்டாய் கிராமத்து காதலை ...//

    எப்பவும் மொதா ஆளா வந்து நிப்ப. இப்ப என்னடான்னா கடைசியா வர்ர.

    எப்படி இருக்கிறாய் மாப்பி? எம் மருமவ எப்படி இருக்கா?

    ReplyDelete
  33. மடித்து வைத்த தாளின் முனை காதலியின் தெத்துப்பல்லுக்கு உவமையா..

    வாவ் ரசனையான கற்பனை.

    ReplyDelete
  34. ஓ... தெத்துப்பல்..... அடடா.... வீட்டுக்காரம்மா இத கேட்கனுமே...

    நல்லாயிருக்குங்க....

    ReplyDelete
  35. ஹூம் உண்மையைச் சொல்றதுக்கென்ன? :-)) உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்திருப்பதால் உங்களிடமிருந்து இவ்வளவு ரசனையான கவிதை ஒன்றை நான் எதிர்பார்க்கவேயில்லை.

    கொள்ளை ரசனை.!

    ReplyDelete
  36. அன்பின் சத்ரியன் - கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது - தெற்றுப்பல் எங்கே - பரிசாகக் கிடைத்த கவிதைப் புத்தகத்தின் ஒற்றைத்தாளின் வெட்டுக்கு விலகிய முனை எங்கே - என்னதொரு கறபனை வளம்..... நல்லாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.