Apr 5, 2010

யார் அந்த அவர்?


"புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்புஆம் கிழமை தரும். " - குறள்

ட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். மேற்கண்ட திருக்குறளுக்கு , முனைவர் மு.வரதராசனார் அவர்கள் கூறும் விளக்கம் இது.

அவருடைய ஆறு மாதப் பெண்குழந்தையின் பெயர் “ மதிவதனி”. என்ன செய்வது ? என் அன்பைத் தெரிவிக்க என்னால் செய்ய முடிந்தது இதுதான்” , என்றார். நெகிழ்ந்து விட்டேன்.

- இந்த வரிகளைக் கொண்டுதான் ஒரு (ண்)பரை அறிமுகம் செய்திருந்தார் நமதருமைச் சகோதரி திருமதி. தேனம்மை லக்ஷ்மணன்.

“ மதிவதனி” என்ற பெயரை நானும் எனது மகளுக்குச் சூட்ட தெரிவு செய்திருந்தேன். அது தமிழ்ப்பெயர் அல்ல என்பதால் வேறு பெயர் (சாரலின்பா) சூட்டினோம்.

அவர் எந்த எண்ணத்தில் தன் மகளுக்கு மதிவதனி என்னும் பெயர் சூட்டினாரோ அதே காரணத்திற்காகத்தான் நானும் அப்பெயரைத் தெரிவு செய்திருந்தேன்.
(இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் மேலேயுள்ள குறளை ஏன் இங்கே குறிப்பிட்டுள்ளேன் என.)
ஆம்! நட்பு கொள்ள ஒத்த சிந்தனையே போதும்...!

யார் அந்த அவர்?

சென்னை கே.கே. நகரில் “ டிஸ்கவரி புக் பேலஸ்” என்னும் புத்தகக்கடையின் நிறுவனரும், முதலாளியுமான இளம் தொழில் முனைவர் திரு.வேடியப்பன் அவர்கள் தான் - அந்த அவர்.

“இதென்ன பெரிய விஷயம்..?”, எனக் கேட்பது புரிகிறது. அதற்கு பதில் இதோ....

1. இலக்கிய ஆர்வலர்களின் பாலமாகத் திகழ்கிறார். (அவருடைய வலைப்பூவை ஒருமுறை பார்வையிடுங்கள், புரியும். பதிவின் முடிவில் இணைப்பு கொடுத்துள்ளேன்)

2. வளரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்.


"சென்னையில் ஹிக்கின்ஸ் பாதாம்ஸ்., லேண்ட்மார்க் போன்ற கடைகளில் புத்தகம் வாங்குபவர்கள் ஒருமுறை இங்கும் வாங்கிப் பார்க்கலாம்- என்று தேனம்மை குறிப்பிட்டிருந்தார்.

வாசிப்பதற்கு எனக்குச் சில நூல்கள் தேவைப்பட்டன. என்னிடம் புத்தகப்பட்டியல் இருக்கிறது. எனக்காக கடைகடையாய் ஏறி இறங்கி தேடிப்பிடித்து வாங்கி, அதை யார் நமக்கு அனுப்பி வைக்கப்போகிறார்கள் என ஏங்கிக் கொண்டிருந்தேன்.

திருமதி தேனம்மைலக்ஷ்மணன் அவர்களின் பதிவைப் படித்து விட்டு சிறிது நேரத்தில், திரு. வேடியப்பன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்து எனது விருப்பத்தைச் சொன்னேன்.

தற்காகத்தானே நாங்கள் இருக்கிறோம்”, என அகமகிழ்ந்து உங்களுக்குத் தேவையான நூல்களின் பட்டியலைக் கொடுங்கள். நான் வாங்கி அனுப்பி வைக்கிறேன் என்றார். பட்டியலைச் சொன்னேன். ”நம் கடையிலேயே நீங்கள் கேட்டிருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் இருக்கிறது, ஒன்றிரண்டு நம் நண்பர்களிடம் பெற்று அனுப்பி வைக்கிறேன் அது என் பொறுப்பு”, என்றார்.


1. 401 காதல் கவிதைகள் - சுஜாதா
2.விஞ்ஞானச் சிறுகதைகள் - சுஜாதா
3.காமக் கடும்புனல் - மகுடேஷ்வரன்
4.விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
5.கன்னியாக்குமரி - ஜெயமோகன்
6.சங்கச்சித்திரங்கள் - ஜெயமோகன்
7.பாரதிதாசன் கவிதைகள் -பாரதிதாசன்
8.ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன்
9.ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் - நிலாரசிகன்
10.ஞானத்தின் பிரம்மாண்டன் - ஜக்கி வாசுதேவ்
11.ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுய சரிதை- ஓஷோ


இத்துடன் என் செல்ல மகள் சாரலின்பாவிற்கும் சில புத்தகங்கள் எல்லாம் சேகரித்து எனக்கு வேண்டிய நூல்களை (தற்போது நான் பணிபுரியும்) சிங்கப்பூருக்கும், என் மகளுக்கான நூல்களை எங்கள் வீட்டிற்கும் (தமிழ் நாடு) அனுப்பி வைத்தார்.


நண்பர்களே!


ன்னைப் போன்று அயல் நாட்டில் பணியில் இருப்பவரோ, அங்கேயே நிரந்தரமாய் வாழ்பவர்களோ உங்களுக்கும் விரும்பிய புத்தகங்கள் வாங்கும் தேவை இருப்பின் நீங்களும் திரு.வேடி அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். வாங்கிப் படித்து மகிழுங்கள். அவர் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துங்கள்....!


அவரது வலைப்பூவின் முகவரி : http://discoverytamilbooks.blogspot.com/

அவரைத் தொடர்பு கொள்ளும் முன் இங்கே சுட்டிப் பாருங்கள்.


இவை எல்லாவற்றையும் விட மிக நெருங்கிய நண்பராகி விட்டார். அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி.

...நட்புடன் சத்ரியன்

வேடியப்பன் அவர்களைத் தொடர்பு கொள்ள:-

டிஸ்கவரி புக் பேலஸ் ,
6 மகாவீர் காம்பளக்ஸ் ,
முனுசாமி சாலை (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்),
கேகே.நகர், சென்னை 78
தொடர்பு எண் :9884060274, 9940446650

24 comments:

 1. ரொம்ப சந்தோசம். ஒரு திருகுறளுக்கு என்னை உதாரணம் காட்டிவிட்டீர்களே, அதற்கு நான் இன்னும் தகுதியானவனாக இருக்க முற்சிப்பேன். எனது மகளை மதிவதனி என்று அழைக்கும் ஒவ்வொருமுறையும் தெருவில் களைகூத்தாடி தனக்குத்தானே சவுக்கால் அடித்துக்கொள்வானே அப்படியொரு உணர்வு என்னை தொற்றிக்கொள்கிறது. உங்களை போன்றவர்கள் பாராட்டும்போது இன்னும் இரண்டு அடி சேர்ந்து விழுகிறதோ எனறுதான் நினைக்கிரேன். மற்றபடி முதலாளி என்பதையெல்லாம் ஏற்க்க முடியாது.

  ReplyDelete
 2. ஆஹா, சிங்கையிலேயா இருக்கிறீர்கள்? தொடர்பு கொள்ளுங்கள்...

  prabhagar@gmail.com

  வேடியப்பன் அவர்களைப்பற்றிய தகவல் சிலிர்ப்பாய் இருக்கிறது, கண்டிப்பாய் அவரை தொடர்புகொள்கிறேன்...

  பிரபாகர்...

  ReplyDelete
 3. ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்... க‌ண்டிப்பாக‌ வெளிநாடு வாழ் ம‌க்க‌ளுக்கு உத‌வியாக‌ இருக்கும்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி

  ReplyDelete
 4. டிஸ்கவரி புக் பேலஸ் அறிமுகத்துக்கு நன்றிங்ணா...

  இந்த வெக்கேசன்ல உள்ள புகுந்து கலக்கிடுவோம்...

  அட்ட்ட்ட்ட்ரஸ் ?????????

  ReplyDelete
 5. Good friends and good books....awesome!

  ReplyDelete
 6. மிகவும் சிறந்த பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி !

  ReplyDelete
 7. நட்பையும் தகவலையும் பகிர்ந்த நல்ல பதிவு....

  ReplyDelete
 8. ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்...
  க‌ண்டிப்பாக‌ வெளிநாடு வாழ் ம‌க்க‌ளுக்கு உத‌வியாக‌ இருக்கும்...
  ப‌கிர்விற்கு ந‌ன்றி

  ReplyDelete
 9. //எனது மகளை மதிவதனி என்று அழைக்கும் ஒவ்வொருமுறையும் தெருவில் கலைக்கூத்தாடி தனக்குத்தானே சவுக்கால் அடித்துக்கொள்வானே அப்படியொரு உணர்வு என்னை தொற்றிக்கொள்கிறது. உங்களை போன்றவர்கள் பாராட்டும்போது இன்னும் இரண்டு அடி சேர்ந்து விழுகிறதோ எனறுதான் நினைக்கிறேன்.//

  வேடியப்பன்,

  இன உணர்வுள்ள எவருக்கும் “கண் முன்னே நம்மினத்தைக் காவு கொடுத்து விட்ட” குற்ற உணர்வு இருக்கத்தான் செய்யும்.

  ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும் என்னால். நாம் தமிழன் என்று சொல்லிக் கொள்கிறோமேயொழிய இனப்பற்று அற்றவர்களாகவே இருக்கிறோம். உண்மையில் இனப்பற்று இருந்திருக்குமேயானால் தமிழினம் வேறொரு உச்சத்தை அடைந்திருக்கும்.

  ReplyDelete
 10. //ஆஹா, சிங்கையிலேயா இருக்கிறீர்கள்? தொடர்பு கொள்ளுங்கள்...

  prabhagar@gmail.com

  வேடியப்பன் அவர்களைப்பற்றிய தகவல் சிலிர்ப்பாய் இருக்கிறது, கண்டிப்பாய் அவரை தொடர்புகொள்கிறேன்...//

  பிரபாகர்,

  நிச்சயம் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 11. //ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்... க‌ண்டிப்பாக‌ வெளிநாடு வாழ் ம‌க்க‌ளுக்கு உத‌வியாக‌ இருக்கும்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி//

  நாடோடி,

  உதவியாக இருக்கட்டும் என்றுதான் பதிவிட்டேன் தோழா.

  ReplyDelete
 12. //டிஸ்கவரி புக் பேலஸ் அறிமுகத்துக்கு நன்றிங்ணா...

  இந்த வெக்கேசன்ல உள்ள புகுந்து கலக்கிடுவோம்...

  அட்ட்ட்ட்ட்ரஸ் ?????????//

  வசந்த்,

  உங்களுக்குத் தேவையான தகவலை பதிவில் புதிதாக இணைத்துள்ளேன்.

  கலக்குங்க.

  ReplyDelete
 13. //Good friends and good books....awesome!//

  சித்ரா அக்காவிற்கு நன்றி.

  ReplyDelete
 14. //மிகவும் சிறந்த பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி !//

  வாங்க சங்கர்,

  அந்த உருண்டைய எவ்வளவு நாளைக்குத்தான் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பீங்க. அதைய கீழ விட்டுட்டு நீங்க மேல வாங்க சாமி.

  ReplyDelete
 15. //நட்பையும் தகவலையும் பகிர்ந்த நல்ல பதிவு....//

  தமிழ்,

  நன்றிங்க.

  ReplyDelete
 16. //ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்...
  க‌ண்டிப்பாக‌ வெளிநாடு வாழ் ம‌க்க‌ளுக்கு உத‌வியாக‌ இருக்கும்...
  ப‌கிர்விற்கு ந‌ன்றி//

  சே.குமார்,

  அனைவருக்கும் உதவியா இருக்கும்னு நம்பறேன்.

  நன்றி.

  ReplyDelete
 17. ஆம் உண்மை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்! நாட்டில் நூலகங்கள் பெருமளவில் இருந்தால் சிறைகூடங்கள் தேவையில்லை என்று அண்ணா அவர்கள் சொன்னதாக ஞாபகம். அனைத்து அனுபவங்களையும் நாமகவே அனுபவித்து தெர்ந்துகொள்ள நமக்கு வயது போதாது அதற்க்கு வடிகாலக புத்தகங்களாக புத்தகங்கள் உதவும் எனபது எனது கருத்து.

  வெளிநாடுவாழ் தமிழ் அன்பர்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!!

  ReplyDelete
 18. நான் 15 வருடங்களாக துபையில் பணிபுரிவதால் எனக்கும் உங்களைப் போன்ற ஏக்கம் உண்டு நமக்கு வேண்டிய புத்தகங்களை யார் வாங்கி அனுப்புவார் என்று. உங்கள் தகவலால் மிக்க மகிழ்சிஅடைந்தேன் நன்றி சத்திரியன்

  ReplyDelete
 19. மிகவும் பயனுள்ள பதிவு !
  டிஸ்கவரி புக் பேலஸ் அறிமுகத்திற்கு நன்றி!

  ReplyDelete
 20. நல்லத் தகவல்...மிக்க நன்றி...

  //சத்ரியன் said...
  மிகவும் சிறந்த பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி !//

  வாங்க சங்கர்,

  அந்த உருண்டைய எவ்வளவு நாளைக்குத்தான் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பீங்க. அதைய கீழ விட்டுட்டு நீங்க மேல வாங்க சாமி.
  //

  ஆமாம் நீ மட்டும் ரொம்ப நாளைக்கு உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு பாக்கலாமா?

  ReplyDelete
 21. மிகவும் பயனுள்ள தகவல் சத்ரியன்.

  நேரம்கிடைக்கும்போது பாருங்கள்
  http://fmalikka.blogspot.com/2010/04/9.html

  ReplyDelete
 22. நல்ல பகிர்வுங்க... நேத்து சொன்னதுனால பார்த்தேன்.... நட்பிற்கான மகத்துவம் இது....

  //ஆம்! நட்பு கொள்ள ஒத்த சிந்தனையே போதும்...! //

  ஓ... ஒத்த சிந்தனையிருந்தால்தான் நட்பிருக்கும் என்று அர்த்தங்களா?

  ReplyDelete
 23. மன்னிக்கவும், எனது கருத்துக்கு மறுமொழி எழுதியதை இன்றுதான் கவனித்தேன். சில காரணங்களால் கொஞ்சம் விடுப்பில் இருந்தேன். மிண்டும் இன்று முதல் ஆரம்பம், அனைத்து பதிவுகளும் அலசப்படும்

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.