May 12, 2010

உன்னை எப்படி....?



எத்தனையோ முறை
எச்சரித்தப் பின்னும்
இப்படியே செய்கிறாய் நீ.

அலுவல் நேரத்தில்
வேண்டாம் என்கிறேன்.
அப்போதுதான்
அசத்தும் நடையில்
அத்துமீறி வந்து நிற்கிறாய்!

என்
வேலை போனால் உனக்கென்ன?
உன்
தேவை தீர்ந்திட வேண்டுமென்பதில்
தீவிரமாய் இருக்கிறாய்.

உன்னை
விரும்பிய பாவத்திற்கு
எனக்கு...
இன்னமும் வேண்டும்.

காதலியாய்
இருந்திருந்தால்
எப்போதோ விட்டிருப்பேன்.

கவிதையே
உன்னை எப்படி....?

52 comments:

  1. கவிதையை காதலி ஆக்க வேண்டாம் நண்பா

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  2. கண்டிப்பா “கை” விட்டுற மாட்டேன் விஜய்.

    ReplyDelete
  3. ஒரு க‌விதை
    க‌விதைக்கு
    க‌விதை எழுதுகிற‌தே!!!

    அட‌டே!!

    ஆச்சிரிய‌குறி!!!!!

    //என்
    வேலை போனால் உனக்கென்ன?//

    இப்ப‌டி எல்லாம் சொல்லி எழுதாம‌ல் விட்டாதிங்க‌ ..

    ReplyDelete
  4. காதலியாய்
    இருந்திருந்தால்
    எப்போதோ விட்டிருப்பேன்.

    கவிதையே
    உன்னை எப்படி....?

    இதெல்லாம் சரியில்லீங்க..இருங்க வீட்டுக்காரம்மாவுக்கு இதை பார்சல் பண்றேன்......(ஹப்பாடா வந்த வேலை முடிந்தது)

    ReplyDelete
  5. காதலியாய்
    இருந்திருந்தால்
    எப்போதோ விட்டிருப்பேன்\\\\\
    இது காதலியேதான்! சும்மா
    சுத்தாதப்பு


    கவிதையே

    உன்னை எப்படி\\\\\\

    அது யாருடா புதிசா ஒண்ணு!

    “அவக” மனதிலையும் எண்ணத்திலையும்
    சுற்றிச்,சுற்றி வட்டமிடுகிறார் என...
    படம் வேறு போட்டுக் காட்டணுமாக்கும்!

    ஹேமா உனக்குப் போடும் பின்னோட்டத்தைப்
    பார்த்தால்...!!??
    கொஞ்சம் தள்ளியே நில்லடி...
    கில்லாடி போலும்!

    இந்தக் காதல் மயக்கத்தில் தான்
    எந்த ஒரு நிகழ்சியிலும் ஆளைக்
    காணோமே!!

    ReplyDelete
  6. கவிதையை முடியும் போது சிந்தனை தொடங்குகிறது..

    அருமை!

    ReplyDelete
  7. சத்ரியா.....வர வர....!
    இன்னும் எத்தனை பேர் சொல்லுங்க முதல்ல !(பத்து விரல் போதுமா !)

    ReplyDelete
  8. //காதலியாய்
    இருந்திருந்தால்
    எப்போதோ விட்டிருப்பேன்.

    கவிதையே
    உன்னை எப்படி....? //

    உங்களை நம்பி காதலித்த பெண்ணை கை விட்டு இருப்பேன்னு சொல்றீங்களே இது நியாயமா?

    ReplyDelete
  9. கவிதையே காதலியாய்!

    எப்படி சாமி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! நேர்ல பாக்குறப்போ பொசுக்கு பொசுக்குன்னு இருந்துட்டு இப்படி கலக்குறீங்க!

    ரொம்ப நல்லாருக்கு!

    பிரபாகர்...

    ReplyDelete
  10. நல்லாருக்கு மாப்ள!! :-)

    ReplyDelete
  11. அதெப்படி மாம்ஸு காதலியாக இருந்தா விட்டு இருப்பீங்க

    உடனே கருணா மேடைக்கு வரவும்.

    ReplyDelete
  12. கவிதை அருமை பாஸ்

    ReplyDelete
  13. ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  14. அடக்கொடுமையே...இதுக்குமா.... நடத்துங்க....

    வழக்கத்தைவிட இன்னும் ஒருபடிமேல்...அருமை.....

    ReplyDelete
  15. the picture is awesome. kavithai is great.

    ReplyDelete
  16. கவிதையா? நம்ப முடியலையே

    ReplyDelete
  17. //காதலியாய்
    இருந்திருந்தால்
    எப்போதோ விட்டிருப்பேன்.

    கவிதையே
    உன்னை எப்படி....? //

    அது சரிதான்...
    எல்லாம் அலுவலக நேரத்தில் வரும் காதலிகள்.... அய்யோ... சாரி கவிதைகள் தானா?

    ReplyDelete
  18. அருமை

    /எத்தனையோ முறை
    எச்சரித்தப் பின்னும்
    இப்படியே செய்கிறாய் நீ.

    அலுவல் நேரத்தில்
    வேண்டாம் என்கிறேன்.
    அப்போதுதான்
    அசத்தும் நடையில்
    அத்துமீறி வந்து நிற்கிறாய்!

    என்
    வேலை போனால் உனக்கென்ன?
    உன்
    தேவை தீர்ந்திட வேண்டுமென்பதில்
    தீவிரமாய் இருக்கிறாய்.

    உன்னை
    விரும்பிய பாவத்திற்கு
    எனக்கு...
    இன்னமும் வேண்டும்.

    காதலியாய்
    இருந்திருந்தால்
    எப்போதோ விட்டிருப்பேன்.

    கவிதையே
    உன்னை எப்படி....? /

    ஒவ்வொரு வரியையும் இரசித்தேன்

    /கவிதையே
    உன்னை எப்படி....? /

    சிரமம்தான்

    /உடனே கருணா மேடைக்கு வரவும்./

    :))

    ReplyDelete
  19. //இப்ப‌டி எல்லாம் சொல்லி எழுதாம‌ல் விட்டாதிங்க‌ ..//

    ஸ்டீவன்,

    அப்டியெல்லாம் விட்ருவனா? அப்புறம் உங்களை மாதிரி நண்பர்களை யார் கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பார்கள்?

    ReplyDelete
  20. //இதெல்லாம் சரியில்லீங்க..இருங்க வீட்டுக்காரம்மாவுக்கு இதை பார்சல் பண்றேன்......(ஹப்பாடா வந்த வேலை முடிந்தது.)

    தமிழக்கா,

    நீங்க பார்சல் அனுப்பினாலும் உங்க நாத்தனார் அதையெல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க.

    ReplyDelete
  21. கலா அக்கா,

    உங்களோட ’கலா’ய்ப்புக்கே இன்னும் லட்சம் காதல் கவிதைகள் எழுதலாம்.

    ReplyDelete
  22. //காதலியாய்
    இருந்திருந்தால்
    எப்போதோ விட்டிருப்பேன்\\\\\
    இது காதலியேதான்! சும்மா
    சுத்தாதப்பு //

    நானும் சுத்தினவன் தான். ஆனா, இப்ப இல்ல.

    //
    கவிதையே
    உன்னை எப்படி\\\\\\

    அது யாருடா புதிசா ஒண்ணு! //

    பொறுங்க பொறுங்க...! எண்ணிக்கையெல்லாம் எதுவும் கூடிடலை. நீங்களா எதுவும் சேத்து விட்றாதீங்க. (யப்பா......)

    ReplyDelete
  23. //ஹேமா உனக்குப் போடும் பின்னோட்டத்தைப்
    பார்த்தால்...!!??
    கொஞ்சம் தள்ளியே நில்லடி...
    கில்லாடி போலும்!//

    பாவம் அந்த அத்தை. அவங்களை ஏன் வம்புக்கு இழுத்து விடறீங்க.

    ReplyDelete
  24. //கவிதையை முடியும் போது சிந்தனை தொடங்குகிறது..

    அருமை!//

    நன்றிங்க குணா அண்ணா.

    ReplyDelete
  25. //சத்ரியா.....வர வர....!//

    ஹேமா.... வருக! வருக!

    //இன்னும் எத்தனை பேர் சொல்லுங்க முதல்ல !(பத்து விரல் போதுமா !)//

    எண்ணிச் சொல்ல எனக்கும் ஆசைதான்! என் கை விரல்கள் மட்டும் போதாது. நீங்க வேணும்னா ஒரு கை குடுக்கறீங்களா?

    (எங்கே... கலாவைக் காணல.? கலா ஓடியாங்க..ஓடியாங்க.)

    ReplyDelete
  26. //உங்களை நம்பி காதலித்த பெண்ணை கை விட்டு இருப்பேன்னு சொல்றீங்களே இது நியாயமா?//

    ஆஹா.... சங்கவி,

    இதுக்கெல்லாம் பஞ்சாயத்தைக் கூட்டிராதீங்க சாமீயளா. உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

    ReplyDelete
  27. //கவிதையே காதலியாய்!

    எப்படி சாமி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! நேர்ல பாக்குறப்போ பொசுக்கு பொசுக்குன்னு இருந்துட்டு இப்படி கலக்குறீங்க!

    ரொம்ப நல்லாருக்கு!

    பிரபாகர்.//

    எப்பவும் காதலையே (காதலியே இல்ல சாமி) நெனைச்சிக்கிட்டு இருக்கிறேனா... அதான் அதுவா வந்து....!

    ReplyDelete
  28. //நல்லாருக்கு மாப்ள!! :-)//

    ரொம்ப நன்றிங்க மாமா.

    ReplyDelete
  29. //அதெப்படி மாம்ஸு காதலியாக இருந்தா விட்டு இருப்பீங்க

    உடனே கருணா மேடைக்கு வரவும்.//

    என்னங்க மாப்ள,

    ஆளாளுக்கு கூட்டத்த கூட்டப் பாக்கறீங்க. யூத்துங்க எல்லாம் அப்படித்தான். கண்டுக்காதீங்க.

    ReplyDelete
  30. //கவிதை அருமை பாஸ்//

    வேல்ஜி,

    பார்டர் மார்க்குல “பாஸா”?
    செண்டம் மார்க்குலயா?


    ஓஹ்ஹ்ஹ்ஹ்! நீங்க சொன்னது அந்த “BOSS"-ஆ...!

    நன்றி.. நன்றி.

    ReplyDelete
  31. //நல்லாருக்கு :)//

    நன்றிங்க நேசன் அண்ணா.

    ReplyDelete
  32. //ரொம்ப நல்லாருக்கு.//

    நன்றிங்க கண்ணன் அண்ணா.

    ReplyDelete
  33. //அடக்கொடுமையே...இதுக்குமா.... நடத்துங்க.... //

    பாலாசி,

    நான் என்ன ”ப்ளார்னு”அடிச்சி எப்பன் வீட்டுக்கு அனுப்பிட்டேன். நல்லா இருக்கே கதை!

    //வழக்கத்தைவிட இன்னும் ஒருபடிமேல்...அருமை...//

    இதுக்கு நன்றி.

    ReplyDelete
  34. //the picture is awesome. kavithai is great//

    நன்றிங்க சித்ரா அக்கா.

    ReplyDelete
  35. //கவிதையா? நம்ப முடியலையே//

    ம்க்கூம். சட்சிக்கு நான் எந்த ஆள கூப்டுக்கினு வரட்டும் ?

    ReplyDelete
  36. //அது சரிதான்...
    எல்லாம் அலுவலக நேரத்தில் வரும் காதலிகள்.... அய்யோ... சாரி கவிதைகள் தானா?//

    குமார்,

    அங்கயும் வந்து தொல்லை. அதான் ஒரு சின்ன எச்சரிக்கை.

    ReplyDelete
  37. //ஒவ்வொரு வரியையும் இரசித்தேன்

    /கவிதையே
    உன்னை எப்படி....? /

    சிரமம்தான்//

    திகழ்,

    என் கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்ட ஒரே நண்பர் நீங்க தான்.

    /உடனே கருணா மேடைக்கு வரவும்./

    :))//

    அது ஒன்னும் இல்ல. எனக்கு டின் கட்டத்தான்.

    ReplyDelete
  38. காதலியா இருந்தா கைவிடிருப்பியா... நீயி?

    கையிருத்தாதாண்டி நீ கையை விட.....

    அப்புறம் கையேந்த வேண்டி வரும் பரவாயில்லையா...?

    இத கூட பொறுத்துக்கிறன்.... ஆனா யூத்து கண்டுக்காதிங்கன்னு சொன்னபத்தியா... அதுஒன்னுதான் என்னையை... அறுவா எடுக்க வைக்குமுன்னு நினைக்கிறன்.....
    அறுவா எதுக்கு... கவிதையை பாறையூருக்கு பார்சல் அனுப்பவா?

    ஜமால்,
    பயபுள்ளைய கண்டிச்சி வச்சிட்டேன்... இனி அப்படி பண்னாது.

    ReplyDelete
  39. //காதலியா இருந்தா கைவிடிருப்பியா... நீயி?

    கையிருத்தாதாண்டி நீ கையை விட.....

    அப்புறம் கையேந்த வேண்டி வரும் பரவாயில்லையா...?//

    அப்புறம் “காதல்” கவிதைகளுக்கு பஞ்சம் வந்துருமே பரவாயில்லையா?

    கைய வெட்டுவாங்களாமில்லே...!

    ReplyDelete
  40. //ஆனா யூத்து கண்டுக்காதிங்கன்னு சொன்னபத்தியா... அதுஒன்னுதான் என்னையை... அறுவா எடுக்க வைக்குமுன்னு நினைக்கிறன்.....//

    மாமா வன்முறை எனக்கு பிடிக்காது, சொல்லிட்டேன்.

    ”என்னது? என்னடா பண்ணிருவியா?”

    அதான் புடிக்காதுன்னு சொல்லிட்டேன் இல்ல. அப்புறம் நான் என்னத்த பண்ண்போறேன்.

    //அறுவா எதுக்கு... கவிதையை பாறையூருக்கு பார்சல் அனுப்பவா?//

    இவரு கேக்கறதப் பாத்தா, என் வீக்னெஸ் எப்படியோ லீக் ஆகியிருக்கும் போல தெரியுதே..!

    ReplyDelete
  41. //ஜமால்,
    பயபுள்ளைய கண்டிச்சி வச்சிட்டேன்... இனி அப்படி பண்னாது//

    ஓஹ்ஹ்ஹ்ஹ்...! இந்த மெரட்டல் தொனிக்கு காரணம் எல்லாம் ’அங்கிருந்து’ வந்த தகிரியந்தானா?

    இது தெரியாம பயந்து தொலைச்சிட்டமோ?

    ReplyDelete
  42. கவிதை அசத்தல்

    ReplyDelete
  43. எளிமையாயும் அழகாயும் இருக்கு கவிதையின் கவி்தை.. சத்ரியன்

    ReplyDelete
  44. கலா அக்கா,

    உங்களோட ’கலா’ய்ப்புக்கே
    இன்னும் லட்சம் காதல்
    கவிதைகள் எழுதலாம்\\\\\\
    மிக்க நன்றி அண்ணாச்சி
    அண்ணா .கலாய்ப்புக்கு உங்க
    மொழி அகராதியில் நழுவுறது,
    சமாளிக்கிறதுஅல்லது பொய் என்று
    அர்தமா?
    இது நிஜமய்யா..நிஜம்.
    ஹேமா அந்தப் படத்தைப் பாரேன்
    ஒரு இதயத்தில் வட்டமிட்டு வந்தமர்திருக்கும்
    வண்ணத்துப் பூச்சியை
    அந்த இதயக் க{ன்}னி யாரு?
    கறுப்புத் தங்கமே!முகப்பில் இருக்கும்
    போட்டோ வில்லனைப் போல் இருக்கிறது
    முன்னால் விழுந்த முடியும்....எனக்குப்
    பிடிக்கவில்லை.

    ReplyDelete
  45. எப்படி சத்ரியா, உனக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகிறது
    என்னவோ போ... சத்ரியா ..

    ReplyDelete
  46. //

    காதலியாய்
    இருந்திருந்தால்
    எப்போதோ விட்டிருப்பேன்.

    கவிதையே
    உன்னை எப்படி....? //

    படித்தவுடன் மனதில் தங்கிவிட்ட கவிதை

    ReplyDelete
  47. MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
    அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
    Feel பண்ணக்கூடாது..

    ReplyDelete
  48. ஏதோ வேலை நேரத்துல குறுக்கும் நெடுக்குமா நடந்து போற பிகரை தான் சொல்றீங்களோன்னு நினைச்சேன்...
    இப்பவும் சந்தேகம் ஒரு வேளை அந்த பிகரை தான் கவிதை-னு சொல்றீங்களோ??

    ReplyDelete
  49. கவிதையே
    உன்னை எப்படி....?

    க‌விதைக்கும்
    க‌விதை

    அருமை சத்ரியன்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.