Jul 30, 2010

சேமிப்புகளில் சில...




மாரிக்காலத்திற்கு
தானியம் சேகரிக்கும்
எறும்புகள் போல

மரண காலத்திற்கு
உன் நினைவுகளைச்
சேகரித்து வைக்கிறேன்.


***


அறுத்து விட்ட
அடுத்த நாளே
குருத்து நீட்டி
வளர்ந்து நிற்கும்
வாழைக் கன்று போல

மறக்க நினைத்தாலும்
மறக்காமல் வந்து நிற்கிறது
உன் நினைவுகள்...!


20 comments:

  1. அருத்து விட்ட
    அடுத்த நாளே
    குருத்து நீட்டி
    வளர்ந்து நிற்கும்
    வாழைக் கன்று போல

    மறக்க நினைத்தாலும்
    மறக்காமல் வந்து நிற்கிறது
    உன் நினைவுகள்...!



    சூப்பர்ப்

    ReplyDelete
  2. எறும்பு தானியம் சேகரிக்கிறதும் ,
    வெட்டின உடனேயே குருத்து நீட்டுற வாழையும் மனசில ஒளிஞ்சு நிலைச்சிருக்கிற காதலைச் சொல்லுமோ !
    சத்ரியா...ஊர்ல இருந்து கொண்டு வந்திருக்கீங்கபோல !

    ReplyDelete
  3. //மரண காலத்திற்கு
    உன் நினைவுகளைச்
    சேகரித்து வைக்கிறேன்.//

    அப்பத்தானே வயசான அசை போடமுடியும்....


    //மறக்க நினைத்தாலும்
    மறக்காமல் வந்து நிற்கிறது
    உன் நினைவுகள்...!//


    மறந்தாத்தானே....

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு உங்க விவசாயக் கவிதை.

    ReplyDelete
  5. நல்லாருக்குங்க குங்குமப் பொட்டு கவுண்டரே! (நன்றி, தேவன் மாயம் சார்)

    ReplyDelete
  6. //மரண காலத்திற்கு
    உன் நினைவுகளைச்
    சேகரித்து வைக்கிறேன்.//

    அத வச்சி என்னப்பண்ணப்போறீங்க தலைவரே... கடைசிக்காலத்திலேயாவது நிம்மதியா இருக்கலாம்ல...

    (இருங்க உங்க வீட்டு நம்பர் எங்கிட்ட இருக்கு... அக்காவ விசாரிக்க சொல்றேன்..)

    ReplyDelete
  7. //மரண காலத்திற்கு
    உன் நினைவுகளைச்
    சேகரித்து வைக்கிறேன்.//-- ம்ம்ம். இன்னும் திருந்தலப்போல தெரியுது. நிறைய சேகரித்து வைங்க! சீக்கிறமா ஆள அனுப்புறேன்

    ReplyDelete
  8. வாங்க ... சத்ரியா வாங்க ...
    காதல் எப்படி அலுப்பதில்லையோ அதே போல் உங்களின் கவிதையும்
    இன்னும் ... இன்னும் .. வாழ்த்துகள்

    ReplyDelete
  9. short and cute ya

    ReplyDelete
  10. மரண காலமென்று ஒன்றில்லை

    ---------------

    அது எப்படி மாம்ஸ் மறக்க நினைப்பீங்க

    ReplyDelete
  11. இரண்டும் அருமை...

    Kumar.S
    http://www.vayalaan.blogspot.com

    ReplyDelete
  12. மண்புழு போல மனசை குடையாம இருந்தா சரி !!!!!!!!!

    வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  13. மறக்க நினைத்தாலும்
    மறக்காமல் வந்து நிற்கும் காதல்...
    சேகரித்து வைக்கும் நினைவு....இரண்டும் அருமை.

    ReplyDelete
  14. Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .

    ReplyDelete
  15. அருமையான நினைவுகள் கோபால்.. என்னோட வலைப் பதிவில் கல்லாறு சதீஷ் பாருங்க உங்க படங்கள் இருக்கு மனைவியுடன்,..

    ReplyDelete
  16. அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

    ஒரு மாச விடுப்புல ஊருக்கு போய்ட்டு வந்தோம்ல. அதுக்கு வட்டியும், மொதலுமா சேத்து வேலைய வாங்கிட்டாய்ங்க. ஆபீசுல.

    அதான் இப்பிடி மொத்தமா நன்றி சொல்றேன்.

    ReplyDelete
  17. இரு முத்துக்கள் நல்லாருக்கு satriyan

    ReplyDelete
  18. உவமானம் இல்லாமல் கவிதை எழுத முடியாதா அண்ணே!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.