Sep 3, 2010

உதட்டுரேகை











அன்புள்ள....
எனத்தொடங்கி
காதலுடன்...என முடிக்கும்
உன் கைப்பிரதிக்
கடிதங்கள் காணாது
தூசு படிந்துக் கிடக்கிறது
என் விழித்திரைகள்.


எழுத்துப்பிழைகளுடன்
என்னை விரும்புவதாய்
எழுதியக்
கடிதமொன்றில்
பெயருக்கு பதிலாக
நீ பதித்தனுப்பிய
உதட்டு ரேகை
பத்திரமாய் இருக்கிறது
ஆழ் மனதில்.


புரையேறும் நேரங்களில்
என் பெயர்ச்சொல்லி
நீ -அழைப்பாய்
என்றொரு
பொய் சொல்லிப் பழகிவிட்டேன்
வெள்ளந்தி மனசிடம்.


32 comments:

  1. தூசு படிந்துக் கிடக்கிறதென்
    என் விழித்திரைகள்.]]

    சூப்பர் மாம்ஸ்

    ReplyDelete
  2. //பெயருக்கு பதிலாக
    நீ பதித்தனுப்பிய
    உதட்டு ரேகை
    பத்திரமாய் இருக்கிறது
    ஆழ் மனதில்//

    படிக்க படிக்க மனது எங்கிட்ட இல்ல....

    ரொம்ப ரசிச்ச வரிகள்....

    ReplyDelete
  3. ரொம்ப அழகா வந்திருக்குங்க சத்ரியன்

    //
    எழுத்துப்பிழைகளுடன்
    என்னை விரும்புவதாய்
    எழுதியக்
    கடிதமொன்றில்
    பெயருக்கு பதிலாக
    நீ பதித்தனுப்பிய
    உதட்டு ரேகை
    பத்திரமாய் இருக்கிறது
    ஆழ் மனதில்.
    //

    எழுத்துப்பிழையாங்க முக்கியம்

    ReplyDelete
  4. புரையேறும் நேரங்களில்
    என் பெயர்ச்சொல்லி
    நீ -அழைப்பாய்
    என்றொரு
    பொய் சொல்லிப் பழகிவிட்டேன்
    வெள்ளந்தி மனசிடம்.

    .........அது சரி....... :-)

    ReplyDelete
  5. யப்பா... என்னமா லவ்வுராங்கப்பா இந்த யூத்துங்கள்லாம்... உதட்டு ரேகை பத்திரமாயிருக்காம்ல...

    நைஸ்...

    ReplyDelete
  6. வெள்ளந்தி மனசுன்னா என்னா மாம்ஸு
    அதுவும் உங்களுக்கா மாம்ஸூ

    ( கருணா எங்கப்பா )

    ReplyDelete
  7. //தூசு படிந்துக் கிடக்கிறது
    என் விழித்திரைகள்.]]

    சூப்பர் மாம்ஸ்!//

    மாப்ள,

    ரொம்ப நாளைக்கப்பறம் மொத ஆளா வந்து நிக்கிறீங்க.

    ReplyDelete
  8. ////பெயருக்கு பதிலாக
    நீ பதித்தனுப்பிய
    உதட்டு ரேகை
    பத்திரமாய் இருக்கிறது
    ஆழ் மனதில்//

    படிக்க படிக்க மனது எங்கிட்ட இல்ல..//

    சங்கவி,

    எதுக்கும் அண்ணிக்கிட்ட ஒருமுறை கேட்டுப்பாருங்க. ஒருவேளை அவங்கக்கிட்ட இருக்கலாம்.

    ReplyDelete
  9. //ரொம்ப அழகா வந்திருக்குங்க சத்ரியன்

    //
    எழுத்துப்பிழைகளுடன்
    என்னை விரும்புவதாய்
    எழுதியக்
    கடிதமொன்றில்
    பெயருக்கு பதிலாக
    நீ பதித்தனுப்பிய
    உதட்டு ரேகை
    பத்திரமாய் இருக்கிறது
    ஆழ் மனதில்.
    //

    எழுத்துப்பிழையாங்க முக்கியம்..? //

    வாங்க வேலு,

    உங்க கேள்வியிலயும் நியாயம் இருக்குதுங்க.

    ReplyDelete
  10. //புரையேறும் நேரங்களில்
    என் பெயர்ச்சொல்லி
    நீ -அழைப்பாய்
    என்றொரு
    பொய் சொல்லிப் பழகிவிட்டேன்
    வெள்ளந்தி மனசிடம்.

    .......அது சரி....... :-)//

    சித்ராக்கா,

    தம்பிய இப்பிடியெல்லாம் சந்தி சிரிக்க விடக்கூடாது. சொல்லிட்டேன்.
    (உங்களால ..பாருங்க, ஜமால் மாப்ள மறுபடியும் வந்து ஆள் பலம் சேக்கறாரு.)

    ReplyDelete
  11. //யப்பா... என்னமா லவ்வுராங்கப்பா இந்த யூத்துங்கள்லாம்... உதட்டு ரேகை பத்திரமாயிருக்காம்ல...

    நைஸ்...//

    பாலாசி,

    நம்பனும். நம்பிக்கைதான் வாழ்க்கை. ( நெசமாவே இன்னும் பத்திரமா இருக்குப்பா.)

    ReplyDelete
  12. //வெள்ளந்தி மனசுன்னா என்னா மாம்ஸு அதுவும் உங்களுக்கா மாம்ஸூ//

    மாப்ள,

    படிச்சம்னா அனுபவிக்கனும். கேள்வி கேக்கப்படாது.

    //( கருணா எங்கப்பா )//

    மாப்ள, விசயந்தெரிலியா? கருணா இன்னைக்கு தாயகம் திரும்பிட்டாரு.

    ReplyDelete
  13. உதட்டு ரேகை சிவக்கிறது மனதை

    வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  14. ஒத்துகிடறேன் நீங்க முழுமனுசந்தான்!

    ReplyDelete
  15. //புரையேறும் நேரங்களில்
    என் பெயர்ச்சொல்லி
    நீ -அழைப்பாய்
    என்றொரு
    பொய் சொல்லிப் பழகிவிட்டேன்
    வெள்ளந்தி மனசிடம்.//

    உதட்டுச்சாயம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.

    ReplyDelete
  16. காதல் தடங்களுடன் உதட்டுரேகை தெளிவாய் பதிந்திருக்கிறது...அழகு சத்ரியன்....

    ReplyDelete
  17. உதட்டு ரேகை படத்திலும் கவிதையிலும் தெளிவாய் பதிந்துள்ளது ... :)

    ReplyDelete
  18. புரையேறும் நேரங்களில்
    என் பெயர்ச்சொல்லி
    நீ -அழைப்பாய்
    என்றொரு
    பொய் சொல்லிப் பழகிவிட்டேன்
    வெள்ளந்தி மனசிடம்.


    நல்லா கேட்டிங்க ஜமால் முழு பூசணிக்காயை வலையில் மறைப்பது நன்றல்ல தோழா !


    காதலுடன் கண்ணா என்றால் சும்மாவா ?

    நாங்க இப்படியும் உசுப்பேத்துவோமடி
    செல்லம்.

    ReplyDelete
  19. சத்ரியா...காதல் சொட்டச் சொட்ட கனிந்துருகும் கவிதை.

    இந்தக் கவிதைகளை அவங்க பார்க்கிறாங்களா.அன்புள்ள அடுத்த கடிதம் காதல் ததும்பத் ததும்ப வருமே !


    பாருங்க இதான் ஆண்கள் குணமோ.எல்லாம் சொல்லிட்டுப் பொய்யின்னும் சொல்லிட்டீங்க !

    ReplyDelete
  20. //உதட்டு ரேகை சிவக்கிறது மனதை

    வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்//

    நன்றிங்க விஜய்.

    ReplyDelete
  21. //ஒத்துகிடறேன் நீங்க முழுமனுசந்தான்!//

    வசந்த்,

    ’என்னப்பற்றி’ படிச்சிட்டு கவிதைய படிச்சிருக்கீங்க போல!

    ReplyDelete
  22. //உதட்டுச்சாயம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.//

    குமார்,

    இங்க என்னைய தெனமும் கொல்லுது.

    ReplyDelete
  23. //காதல் தடங்களுடன் உதட்டுரேகை தெளிவாய் பதிந்திருக்கிறது...அழகு சத்ரியன்....//

    பாருங்க தமிழ்,

    காலத்துக்கு கூட “இறந்த காலம்’ -னு ஒன்னு இருக்கு. ஆனா, இந்த காதல் மட்டும் முக்காலத்திலும் “ நிகழ் காலமா”வே இருந்துருது.

    ReplyDelete
  24. //உதட்டு ரேகை படத்திலும் கவிதையிலும் தெளிவாய் பதிந்துள்ளது ... :)//

    ஸ்டீவன்,

    அங்கேயுமா? ஆஹா...!

    ReplyDelete
  25. //காதலுடன் கண்ணா என்றால் சும்மாவா ?

    நாங்க இப்படியும் உசுப்பேத்துவோமடி
    செல்லம்.//

    செய்யிறதையும் செஞ்சிட்டு, கூட்டத்தோட சேந்து ஒரு கையும் சேந்து போடறீங்களோ...?

    ReplyDelete
  26. //சத்ரியா...காதல் சொட்டச் சொட்ட கனிந்துருகும் கவிதை.

    இந்தக் கவிதைகளை அவங்க பார்க்கிறாங்களா.அன்புள்ள அடுத்த கடிதம் காதல் ததும்பத் ததும்ப வருமே !//

    தயாராகிட்டு இருக்கு. வரும்.


    //பாருங்க இதான் ஆண்கள் குணமோ.எல்லாம் சொல்லிட்டுப் பொய்யின்னும் சொல்லிட்டீங்க !//

    இதுவும் ஒரு பொய்தான் ஹேமா.

    மறந்திருப்பாய் என நினைக்கிறேன். ஞாபகமூட்ட எனது பழைய கவிதை யொன்று,

    //நெடுகிலும்...
    பல்லாயிரம் பொய்கள்

    நடுநடுவே
    ஒன்றிரண்டு மெய்கள்


    ஆனாலும்
    இனிக்கிறது

    காதல்!//


    September 4, 2010 6:35 PM

    ReplyDelete
  27. பெயருக்கு பதிலாக
    நீ பதித்தனுப்பிய
    உதட்டு ரேகை
    பத்திரமாய் இருக்கிறது
    ஆழ் மனதில்

    இந்த வரிகளை படிக்கும் போது ரொம்ப நாள் முன்னால் பதிவுலகை கலக்கிய காதல் கவிதை ஸ்பெசல் புதியவன் அண்ணா ஞாபகத்திற்கு வர்றார்

    கலக்கல்ஸ் தொடரட்டும்

    வாழ்த்துக்கள் மனவிழியாரே

    ReplyDelete
  28. புரையேறும் நேரங்களில்
    என் பெயர்ச்சொல்லி
    நீ -அழைப்பாய்
    என்றொரு
    பொய் சொல்லிப் பழகிவிட்டேன்
    வெள்ளந்தி மனசிடம்.

    இந்த வரிகள் அருமை நண்பரே

    ReplyDelete
  29. //இந்த வரிகளை படிக்கும் போது ரொம்ப நாள் முன்னால் பதிவுலகை கலக்கிய காதல் கவிதை ஸ்பெசல் புதியவன் அண்ணா ஞாபகத்திற்கு வர்றார்

    கலக்கல்ஸ் தொடரட்டும்

    வாழ்த்துக்கள் மனவிழியாரே//

    சக்தி,

    அப்படியா? இப்பவே ‘புதியவன்’ பக்கத்தை தேடிப் படிக்கிறேன்.
    நன்றிங்க.

    ReplyDelete
  30. //புரையேறும் நேரங்களில்
    என் பெயர்ச்சொல்லி
    நீ -அழைப்பாய்
    என்றொரு
    பொய் சொல்லிப் பழகிவிட்டேன்
    வெள்ளந்தி மனசிடம்.

    இந்த வரிகள் அருமை நண்பரே//

    சரவணன்,

    அங்கயும் இதே கதைதான் போல இருக்கு!

    ReplyDelete
  31. வணக்கம்
    //புரையேறும் நேரங்களில்
    என் பெயர்ச்சொல்லி
    நீ -அழைப்பாய்
    என்றொரு
    பொய் சொல்லிப் பழகிவிட்டேன்
    வெள்ளந்தி மனசிடம்.//

    மனச சாந்தபடுத்த நல்ல வழிதான்

    ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை

    ReplyDelete
  32. இந்த் வரி அந்த வரி என்று கூறமுடியவில்லை.

    ஒவ்வொரு வரியும் இல்லை ஒவ்வொரு எழுத்தும் உணர்வு பூர்வமாக உள்ளது.

    அது என்ன வெள்ளந்தி மனது.
    புதிய சொல்லாட்சியாக உள்ளது. அது உங்க வட்டாரச்சொல்லா?

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.