Dec 1, 2010

குமிழ்த்திரை


காதல் தீ

சுடும் என்றேன்.
சுட்டாலும்
“உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடா ” என்றாய்.

இதோ
பற்றி எரிகிறது பார் என்கிறேன்
“பிடில் வாசி போடா” என்கிறாய்.



நீர்க்குமிழ்.

உள்ளுக்குள்  நீ
வெளியில் நான்
அப்படியே இருந்திருக்கலாம்!

குமிழ்த்திரை  உடைத்து
உன்னில் என்னை
நிரப்பி  நிரைத்தாய்

நிரைந்திருந்தோம்.

உறவுகள் மறுப்பதால்
உயிரிருந்தும்
சிதையாகச் சம்மதிக்கிறாய் நீ...!


கஜல்
விருத்தங்கள் எழுத
கசங்கிய காகிதத்தை
மெளனமாய்
பிரிக்கிறேன் நான்...!



.

31 comments:

  1. //உறவுகள் மறுப்பதால்
    பிரிவதேச் சிறந்ததோ என்னும்
    சிவந்த
    சிந்தனையில் நீ...!

    மெளனமாய்
    கஜல்
    விருத்தங்கள் எழுதும்
    கவனத்தில் நான்...!//

    சத்ரியன் சார் நெகிழ்வான வரிகள்...
    ரொம்ப ரசித்தேன்..
    அருமை...

    ReplyDelete
  2. அரசன்,

    இப்போது வரிகளை மாற்றியிருக்கிறேன்.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாருக்கு சத்ரியன்

    ஆனாலும் காதலைத் தவிர வேற கவிதைகளையும் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  4. உறவுகள் மறுப்பதால்
    உயிரிருந்தும்
    சிதையாகச் சம்மதிக்கிறாய் நீ...!

    ....
    சூப்பர்! எல்லாமே அருமைதான். இந்த வரிகள், இன்னும் தனித்து நிற்கின்றன.

    ReplyDelete
  5. //உறவுகள் மறுப்பதால்
    உயிரிருந்தும்
    சிதையாகச் சம்மதிக்கிறாய் நீ...!//

    உண்மைதான்...

    நம்ம ஊர்ல நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க....

    ReplyDelete
  6. காதல் விதைத்தவன்
    சாணக்யன்
    வென்றவன் ஷத்ரியன்
    நீர் யாரோ
    நேற்று முளைத்த
    காளான் கேள்வி
    கேட்கிறதா,,,,,,,,,

    ReplyDelete
  7. கஜலில் கசிகிறது காதல் மனது

    வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  8. என்ன ஆச்சு நம்ம கண்ணழகருக்கு !

    எப்பவுமே காதல் இங்க சந்தோஷமாத்தானே கூவிக்கிட்டு இருக்கும்.ஆனாலும் கவிதை அழகா மனசோட படியிறமாதிரி வந்திருக்கு !

    தளத்தின் வடிவம்,வண்ணம் இந்தக் கவிதைக்கு பொருத்தமா இருக்கிற மாதிரி இருக்கு !

    ReplyDelete
  9. நல்லாயிருக்கு நண்பா

    ReplyDelete
  10. இந்த பக்கத்து வர்ணம்போல இதம்கூட்டும் கவிதைகள்...

    ReplyDelete
  11. இந்த படங்கள்லாம் எங்கைருந்து எடுக்குறீங்க..சூப்பர்..

    ReplyDelete
  12. காதலை உருக்கமாய் அழகாய் வெளிப்படுத்துகிறது கவிதை

    ReplyDelete
  13. //காதலைத் தவிர வேற கவிதைகளையும் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன்..//

    உங்க ஆசையை நிறைவேத்திடலாம் வேலுஜி.

    அதையெல்லாம் எழுத நீங்க இருக்கீங்களே -ன்னு இருந்துட்டேன். வேறொன்னுமில்ல.

    ReplyDelete
  14. //உறவுகள் மறுப்பதால்
    உயிரிருந்தும்
    சிதையாகச் சம்மதிக்கிறாய் நீ...!

    ....
    சூப்பர்! எல்லாமே அருமைதான். இந்த வரிகள், இன்னும் தனித்து நிற்கின்றன//

    சித்ராக்கா,

    லவ் ஃபீலிங்க்ஸ்! அதான் இப்பிடி.

    ReplyDelete
  15. //உண்மைதான்...

    நம்ம ஊர்ல நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க..//

    நண்பா நண்பா,

    நம்ம கட்சியில ஒருத்தரும் சேரலியேன்னு பாத்தேன்.இப்ப திருப்தி!

    ReplyDelete
  16. //காதல் விதைத்தவன்
    சாணக்யன்
    வென்றவன் ஷத்ரியன்
    நீர் யாரோ
    நேற்று முளைத்த
    காளான் கேள்வி
    கேட்கிறதா,,,,//

    தினேஷ்,

    காதல்ல நல்லா தேர்ந்திருக்கீங்க. நானும் உங்களோட சேந்துக்கறேன்.

    ReplyDelete
  17. //கஜலில் கசிகிறது காதல் மனது

    வாழ்த்துக்கள் நண்பா //

    ம்.காதல் கவிதைகள் பெரும்பாலும் “கஜல்” வடிவத்தில் பிறக்கத்தான் ஆசைப்படுகின்றன.

    ReplyDelete
  18. சத்ரியன் சார் நிதர்சன உண்மை..
    காதல் கசிந்தே ஓடுகிறது தங்கள் வரிகளில்..
    அருமை...

    ReplyDelete
  19. //என்ன ஆச்சு நம்ம கண்ணழகருக்கு !//

    காதல்ல எதோ கசமுசாவாம்! கொஞ்சம் உதவி பண்ணுங்களேன் ப்ளீஸ்!

    //எப்பவுமே காதல் இங்க சந்தோஷமாத்தானே கூவிக்கிட்டு இருக்கும்.//

    எல்லா நேரமும் அப்படியேவா இருக்கும்?

    //ஆனாலும் கவிதை அழகா மனசோட படியிறமாதிரி வந்திருக்கு !//

    இருக்காதா பின்னே!

    //தளத்தின் வடிவம்,வண்ணம் இந்தக் கவிதைக்கு பொருத்தமா இருக்கிற மாதிரி இருக்கு !//

    எல்லாத்தையும் ரசிக்கிற உங்க ரசனை ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  20. //நல்லாயிருக்கு நண்பா.//

    வாங்க ஞானம்,

    சுகமா இருக்கீங்களா? ரொம்ப நாளாச்சி பாத்தும், பேசியும்.

    ReplyDelete
  21. //nice lines//

    வாங்க சக்தி,

    காதல் கவிதைகளை ரசிப்பதில் முதலிடம் உங்களுக்குத்தான்!

    (கோவைக்கு வரனும்.)

    ReplyDelete
  22. //இந்த பக்கத்து வர்ணம்போல இதம்கூட்டும் கவிதைகள்..//

    அங்க பத்தி எரிஞ்சிக்கிட்டிருக்கு. இவருக்கு இதமா இருக்குதாம்ல.என்னங்க (புது)மாப்ள உங்க ஊர்ல பனி அதிகமோ? மார்கழி நெருங்கிக்கிட்டிருக்கேன்னு கேட்டேன்.

    ( நான் இருக்கிற ஊர்ல, வசந்தகாலம், பனிக்காலம்....இப்படி எதுவும் கிடையாது)

    ReplyDelete
  23. //இந்த படங்கள்லாம் எங்கைருந்து எடுக்குறீங்க..சூப்பர்..//

    வணக்கம் ஹரீஸ்,

    படங்களை தானம் வழங்குறதுக்குன்னே நம்ம “கூகுள்” இருக்கே!

    ReplyDelete
  24. மாப்ள ஹரீஸ்,

    உங்க வலைப்பூ எங்கே போச்சி?

    ReplyDelete
  25. //காதலை உருக்கமாய் அழகாய் வெளிப்படுத்துகிறது கவிதை//

    வாங்க சிவா,

    மனுசனை உருக்குறதே காதல் தானே!

    ReplyDelete
  26. காதல் தீ

    சுடும் என்றேன்.
    சுட்டாலும்
    “உன்னை தீண்டும் இன்பம்
    தோன்றுதடா ” என்றாய்.

    இதோ
    பற்றி எரிகிறது பார் என்கிறேன்
    “பிடில் வாசி போடா” என்கிறாய்.

    அருமை நண்பா

    மிகவும் இரசித்தேன்!

    ReplyDelete
  27. //உள்ளுக்குள் நீ
    வெளியில் நான்
    அப்படியே இருந்திருக்கலாம்!//

    aamam pala neram thondrum appadiye irunthu irukalam endru...

    ReplyDelete
  28. நெகிழ்வான வரிகள்...
    ரொம்ப ரசித்தேன்...
    அருமை.

    ReplyDelete
  29. படங்களே பட்டென சொல்லிவிடுகிறது..கவிதையைப்பற்றி..!கவிதைகளில் ஒன்றிப்போகிறது.. ரசனை மிகுந்த கவிதைகளும், படங்களும்.. அருமை..! அருமை..! மீளா இன்பத்தில் திளைக்கவைக்கிறது.. ஒவ்வொரு வார்த்தைகளும்.. !

    ReplyDelete
  30. nalla karpanai.
    vaazhthukal.
    mullaiamuthan
    kaatruveli-ithazh.blogspot.com

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.