Mar 26, 2012

ஒரு சொட்டு உயிர்


யார் யாரோ கூடிநின்று
விரலில் தொட்டு
புகட்டிக் கொண்டிருக்கிறார்கள்
இறுதி பால்.

அவளது
துவண்ட மார்பிலிருந்து பிழிந்த
ஒரேயொரு சொட்டுக்காக வேண்டி
இழுத்துக் கொண்டிருக்கிறது இன்னும்.

பெண்
உணர்த்திய
முதல் சுவை அது
இறுதிச் சுவையும் அதுவாகவே
இருக்க ஆவன செய்து

ஆனந்தமாக
ஆவியாக விடுங்கள் என்னுயிரை!



14 comments:

  1. ம்ம்ம்
    சான்சே இல்ல நண்பா
    அற்புதான ஆழமான கவிதை

    வரிகளை இதழ்கள்
    வாசிக்க சிலிர்த்து எழுந்தது
    ரோமங்கள்

    ReplyDelete
  2. பெண்பால் கொண்ட அன்பால் தவிக்கும் ஆண்பால்.
    அப்பால் இருந்தும் துடிப்பால் மாந்தும் உயிர்ப்பால்.

    மனம் நிறைக்கும் கனம். பாராட்டுகள் சத்ரியன்.

    ReplyDelete
  3. ஒரு காவியத்தையே கவிதையில் சொல்லிவிட்டீர்கள் !!

    ReplyDelete
  4. அற்ப்புதமான வரிகள் மீண்டும் மீண்டும் வாசித்தேன் .

    ReplyDelete
  5. முதல் சுவையை முடிவு சுவையாக்கியக் கவிதை!

    ReplyDelete
  6. உயிர் உருகி போச்சி போங்க.

    ReplyDelete
  7. வார்த்தைகளில் கலங்கி நிற்கிறேன்.அன்பைச் சொல்ல இனி ஏதும் இல்லை !

    ReplyDelete
  8. உணர்வுகள் உள்ளே தாக்கத்தை ஏற்படுத்தின சத்ரியன். அன்பின் உச்சத்தை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் கவிதையாய்!

    ReplyDelete
  9. பெண்
    உணர்த்திய
    முதல் சுவை அது
    இறுதிச் சுவையும் அதுவாகவே\\\\\\\\\\


    இவ்வரிகளின்......
    பொருள்ஆழம் பொதிந்து, மறைந்து
    அழகுகாட்டுவது அருமை

    ReplyDelete
  10. பெண்
    உணர்த்திய
    முதல் சுவை அது
    இறுதிச் சுவையும் அதுவாகவே
    இருக்க ஆவன செய்து//அற்ப்புதமான வரிகள்

    ReplyDelete
  11. "ஒருசொட்டு உயிர்" நெஞ்சைத்தொட்டு நிற்கின்றது.

    ReplyDelete
  12. இப்ப புரியுது அண்ணே ..
    நானூறு பக்கம் எழுதினாலும் சொல்ல முடியாத ஒரு புனித உணர்வை மிக எளிமையாய்
    வலிமையாய் கூறி விட்டிர்கள் .. பெருமை .. என் நன்றிகள்

    ReplyDelete
  13. இப்படி ஒரு படைப்பாவது எழுதவேண்டும்
    என்கிற ஆவல் மேலோங்குகிறது
    மனம் கவர்ந்த பதிவு.அருமை

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.