நம்மூர்
கோயில் திருவிழா நிறைவடைந்தது.
நம்முள்
காதல் திருவிழா ஆரம்பமானது.
திருவிழாவுக்கு வந்த
நம் உறவுகளெல்லாம்
ஊருக்குப் புறப்பட்ட
அன்றைய காலையில்...
என் அறைக்கு ஓடிவந்து
கண்ணாடிக்கு முன் நின்று
கண்ணுக்கு மையிட்டு
நுனிவிரலால் தொட்டெடுத்து
திருஷ்டியாய் கண்ணாடிக்கும்
வைத்துவிட்டுச் சென்றுவிட்டாய் .
அன்றிலிருந்து.....
கண்ணாடி
முன்பாக நான் நின்றால்
முன்னாடி
பிம்பமாக நீ தான் தெரிகிறாய்.
உண்'மை' யைச் சொல்லேன்.
அன்று நீ
கண்ணாடிக்கு வைத்து போனது
வெறும்
கண் ‘மை’ தானா?
வசிய
ReplyDelete''மை'' யினை தான்
தடவிச் சென்று இருப்பாளோ
அவள்
சொல்
பார்வை
வெட்கம்
நளினங்கள் என
ஆண்களை அவசியம் செய்கிறாகள்
''மை''(மாயா)க்காரிகள்
அண்ணே வணக்கம் ...
ReplyDeleteவெயில் நேர வெக்கையில் பிஞ்சு வெள்ளரியாய் உங்களின் கவிதை சாரல் ..
ரொம்ப நேரம் படிச்சேன் .. மிகவும் அருமை அண்ணே
இன்னும் அந்த கண்ணாடி இருக்கா அண்ணே ..
அந்த மைக்காரி வைத்துச் சென்றது கண் மையையா? இல்லை கருத்தைக் கவரும் மையையா? காதல் ததும்பிய கவிதை மனதை வென்றது மனவிழியழகரே!
ReplyDeleteபெண்மை இட்ட கண் “மை“
ReplyDeleteஆண்மைக்கு என்றுமே வள “மை“ தான் தரும் நண்பா...
சத்ரியன்...இதுதான் ஆரம்பகால உங்கள் கவிதைகளின் சாயல்.இந்தக் கவிதை மீள்பதிவா.வாசித்த ஞாபகம் !
ReplyDeleteசாரல் குட்டி வந்தபிறகும் ஆரம்பக் காதலை மீட்டிப் புதிதாக்கும் உங்கள் பேனா “மை” !
பொய்மை உரைக்காதே
ReplyDeleteஉண்மையைச் சொல்
விட்டுச் சென்றது கண் மையா
இல்லை .. எனை கவர்ந்திழுக்கும்
உன் பெண்மையா .....
//வசிய
ReplyDelete''மை'' யினை தான்
தடவிச் சென்று இருப்பாளோ//
எனக்கும் அதே சந்தேகம் தாங்க செய்யது. அதனால தான் அவளையே கேட்டிருக்கிறேன்.
//வெயில் நேர வெக்கையில் பிஞ்சு வெள்ளரியாய் உங்களின் கவிதை சாரல்//
ReplyDeleteபடிச்சி வெக்கையை தணிச்சிக்குங்க அரசன்.
//இன்னும் அந்த கண்ணாடி இருக்கா அண்ணே ..//
இருக்கு இருக்கு. மையும் இருக்கு.
//அந்த மைக்காரி வைத்துச் சென்றது கண் மையையா? இல்லை கருத்தைக் கவரும் மையையா? காதல் ததும்பிய கவிதை மனதை வென்றது மனவிழியழகரே!//
ReplyDeleteகணேஷ் அண்ணா,
பாருங்களேன் படிச்ச உங்களுக்கே இத்தனை குழப்பம் இருக்குன்னா, அவஸ்தை படற எனக்கு எவ்வளவு இருக்கும்?
‘லவ்’வுல விழவே கூடாதுன்னு தான் பாக்குறேன். முடியலையே!
//பெண்மை இட்ட கண் “மை“
ReplyDeleteஆண்மைக்கு என்றுமே வள “மை“ தான் தரும் நண்பா...//
வாங்க நட்பே,
அப்படியும் இருக்குமோ? இந்த கோணத்துல யோசிக்கத் தவறிட்டேனே!
//சத்ரியன்...இதுதான் ஆரம்பகால உங்கள் கவிதைகளின் சாயல்.இந்தக் கவிதை மீள்பதிவா.வாசித்த ஞாபகம் !//
ReplyDeleteஆமாம் ஹேமா. இது மீள்பதிவு தான். ஆனால் சிறு மாற்றங்கள் செய்திருக்கிறேன். (மீள்பதிவென குறிப்பிட தவறியதற்கு மன்னிக்கவும்.)
//சாரல் குட்டி வந்தபிறகும் ஆரம்பக் காதலை மீட்டிப் புதிதாக்கும் உங்கள் பேனா “மை” !//
இதென்ன கேள்வி. யார் வந்தாலும் காதலுக்கு ஏது காலம் நேரம்?! நான் இறக்கும் போதும் காதலுடன் தான் செல்வேன்.
//பொய்மை உரைக்காதே
ReplyDeleteஉண்மையைச் சொல்
விட்டுச் சென்றது கண் மையா
இல்லை .. எனை கவர்ந்திழுக்கும்
உன் பெண்மையா .....//
மகேந்திரன் அண்ணே,
பெரியவரு நீங்க. அந்தம்மாக்கிட்ட கொஞ்சம் பக்குவமா கேட்டு சொல்லிடுங்க எனக்கு.
மை வச்சாங்களாம் இவங்க மயங்கிட்டாங்களாம்..இந்தா பாருங்கோ சத்ரியன் இந்த வாரம் உங்க ஊர் திருவிழாவுக்கு உங்க வீட்டுக்கு போறேன். நானும் வச்சிட்டு வரேன் ”மை”
ReplyDelete//.இந்தா பாருங்கோ சத்ரியன் இந்த வாரம் உங்க ஊர் திருவிழாவுக்கு உங்க வீட்டுக்கு போறேன். நானும் வச்சிட்டு வரேன் ”மை”//
ReplyDeleteவாங்கோ வாங்கோ தமிழ்.
பட்டியல்ல உங்களோட வரவும் வரலாறாகட்டும்.
(நேத்து வந்திருக்கலாம். சாமி கல்யாணம் நடந்துச்சி. திருவிழா பிரமாண்டமா இருந்ததாம்.)
உங்களுக்குள் படர்ந்த காதலுக்கு நீர் ஊற்றியது அந்த மை தான் போல சத்திரியன்
ReplyDeleteகாதலை பட்டும் படாமல் சொல்ல ஆண்களால் மட்டுமே முடிகிறது ........அருமை
//பட்டியல்ல உங்களோட வரவும் வரலாறாகட்டும்.//
ReplyDeleteஅட இம்புட்டு துணிச்சலா..வரவு உறவாகிடும் எப்படி வசதி..(யார்கிட்ட.. நாங்க எல்லாம் அப்பவே அப்படி)
//சாமி கல்யாணம் நடந்துச்சி. திருவிழா பிரமாண்டமா இருந்ததாம்.)//
நாங்க சனிக்கிழமை பூப்பல்லக்குக்கு போறோம் அங்கே..என்னமோ உம்ம கல்யாணத்துக்கு வராத வருத்தம் மாதிரியே ஃபீலு காட்றீங்க..
//அட இம்புட்டு துணிச்சலா..வரவு உறவாகிடும் எப்படி வசதி..//
ReplyDeleteவாங்க வாங்க.
வசதிக்கொன்னும் குறைச்சல் இல்லை. மேல் மாடி காலியா தான் இருக்கு.
வாய் வார்த்தை போதாது சத்ரியா..படிவம் தயார் பண்ணு..
ReplyDelete//வாய் வார்த்தை போதாது சத்ரியா..படிவம் தயார் பண்ணு..//
ReplyDeleteஹெலோ,
நான் ’மேல் மாடி காலி’-ன்னு சொன்னது என் தலையை..
padikka nalla irukku. aanaa jeevan irukka maadhiri theriylaye... ENAKKU MATTUMDHAAN APPADI THONUTHO!!!
ReplyDeleteநான் ’மேல் மாடி காலி’-ன்னு
ReplyDeleteசொன்னது என் தலையை..\\\\\\
அப்பாடா.. இப்பதான் அந்த உண்மை வெளியாகிஇருக்கு
எனக்குமட்டும் தெரிந்த விஷயம் இப்போது உலகமெல்லாம்
தெரிந்திருக்கும்....அதுதானுங்க....சத்தியராஜ்மாதிரி போட்டு
புகைப்படம் எடுத்து முகப்பில் போட்டிருந்தார்ஆனால்....உண்மையில்
மருந்துக்குக் கூட ஒண்ணுமில்ல...காலியோ,காலி முகம் பார்க்கலாம்
நன்றி தமிழ் உண்மையை வரவழைக்கப் பாடுபட்டதற்கு.
ஹேமா,அழகரின் அழகுக்குட்டு வெளியாகிவிட்டது பாத்தாயா?
பட்டியல்ல உங்களோட வரவும் வரலாறாகட்டும்.\\\\\\
ReplyDeleteஅடுத்த உண்மை வேறு வெளியாகிடுச்சு பட்டியலே வைத்திருக்கிறாரு அதனால தமிழ் சீ..சீ.வேண்டாம் ஊரு,கண்ணாடி,மை
மைகாரி என்று சொல்லி உண் மையெல்லாம் ஊற்றிவிட்டார் பாருங்கோ.......
//உண்மையில்
ReplyDeleteமருந்துக்குக் கூட ஒண்ணுமில்ல...//
உண்மை தாங்க கலா.
சத்ரியனின் மண்டைக்குள்ள (மனசுக்குள்ளயும் தான்) மருந்துக்குக் கூட கள்ளம் கபடம் ஒண்ணுமில்ல.
ஹூம்! கலா-வுக்கு மட்டும் தான் உண்மை தெரிஞ்சிருக்கு. தெரிய வேண்டியவங்களுக்கு தெரியனுமே!
//பட்டியல்ல உங்களோட வரவும் வரலாறாகட்டும்.//
ReplyDelete//அடுத்த உண்மை வேறு வெளியாகிடுச்சு பட்டியலே வைத்திருக்கிறாரு //
அம்மாடி கலா, ”சத்ரியனின் சொந்தக்காரர்கள் பட்டியலில்...” என்று பொருள் கொள்க.
(வம்புல வழக்குல மாட்டி விட்ருவாங்க போல!)
கலா வரவைக்க வேண்டிய உண்மைகள் இன்னும் நிறைய இருக்கு. ஒவ்வொன்னா கவிதையில் வரும், சிக்காமலா போவார் இந்த சிக்கல் செந்தூர் வேலன்..இவரை வம்பு வழக்குல மாட்டி விட்ருவாங்க போலவாம், என்னவோ வம்பே தெரியாதவர் மாதிரி..ஆமாம் கலா நான் போகலை இவுக ஊரு திருவிழாவுக்கு,போனாலும் எனக்கு வேணாம் இந்த கண்ணு கண்ணாடி மை எல்லாம்..ஹஹ்ஹஹ தலைக்கு மேல காலியாம். ஐ ஹேட் மொட்டை மாடி...போய்யா போ..
ReplyDelete''...கண்ணாடிக்கு வைத்து போனது
ReplyDeleteவெறும்
கண் ‘மை’ தானா?..''
அருமையான கவிதை சகோதரா. வாழ்த்துகள் பணி தொடர.
வேதா. இலங்காதிலகம்.
எல்லாம்..ஹஹ்ஹஹ தலைக்கு மேல காலியாம். ஐ ஹேட் மொட்டை மாடி...போய்யா போ..\\\\\\
ReplyDeleteவாவ்...தாங்கியூ மை டியர் தமிழ்.
எனக்கும் வேண்டாம்...பை..பை
இதற்காக எல்லாம் தாடி வளர்த்து பாடித்திரிய வேண்டாம் என்று சொல்டி என் ஹேமாத் தங்கமே!
சத்ரியன் கேட்டுச்சா கலா சொன்னது, தாடி வளர்த்து திரியற வேலையெல்லாம் வேணாம்.. நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு பை பை சொல்லியாச்சி..
ReplyDeleteகலா,தமிழ்....கண்ணழகருக்கு கண்ணும் மீசையும்தான் வடிவு.தாடி...நினைக்கவே சிரிப்பாயிருக்கு.
ReplyDeleteஒரு வேளை தலையில வளருதில்லையெண்டு முகத்தில வளர்க்கத் திட்டமோ.இது முகவரம்புச் சட்டம் இல்லாட்டி மீசைவரம்புச் சட்டத்துக்குள்ள வருமோ கலா ?!
ஹேமா எந்த வரம்புச்சட்டம் வந்தாலும் ஜயா சமாளித்துவிடுவார்...
ReplyDeleteஅந்தக் காதல் வரம்புச்சட்டம் மட்டும் வந்தால் அவருக்கு ஹாட் அடைப்பே வந்துவிடும்
பாரு..நாங்க மாறி,மாறி பொண்ணுங்களா {ஹேமா இதுங்க பொண்ணுங்களா? என முணுமுணுக்கிறார்போல..எனக்கு பொரையேறுகிறது}கஷ்ரப்பட்டு மாங்குமாங்கென்று எழுதுகிறோம் இந்த மனிசன் வந்து எட்டிப் பாக்குதா?
ஹேமா பயபுள்ளைக்கு சிரிப்பும் நல்லாத்தான் இருக்கு..ஆனால் நீங்க சொன்ன மாதிரி தாடி நினைச்சா தான் சிப்பு சிப்பா வருது..
ReplyDeleteகலா அவரை பார்த்தா ஹாட் அடைப்பு வர ஆள் மாதிரியா இருக்கு.. நமக்கு வரவைக்கிறவர் மாதிரி இல்ல இருக்கு. மனுசன் எட்டி பார்க்கலைன்னு யாரு சொன்னா மறைஞ்சி நின்னு ரசிப்பார்..
// ஐ ஹேட் மொட்டை மாடி...போய்யா போ..//
ReplyDeleteஅப்பாடா!
தலை(வனு)க்கு வந்தது தலைப்பாகையோடு போயிடுச்சி.
//வாவ்...தாங்கியூ மை டியர் தமிழ்.
ReplyDeleteஎனக்கும் வேண்டாம்...பை..பை//
கெளம்புங்க..கெளம்புங்க.
//இதற்காக எல்லாம் தாடி வளர்த்து பாடித்திரிய வேண்டாம் என்று சொல்டி என் ஹேமாத் தங்கமே!//
ஆமாமா, ஆறுதலுக்கு ஹேமா வருவாங்க. நீங்க நடைய கட்டுங்க. எங்களுக்கும் ஹேப்பி தான்.
//சத்ரியன் கேட்டுச்சா கலா சொன்னது, தாடி வளர்த்து திரியற வேலையெல்லாம் வேணாம்.. நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு பை பை சொல்லியாச்சி..//
ReplyDeleteஒரு ரவுண்டு திருநல்லாறு போயிட்டு வந்துடறேன்.
//கலா,தமிழ்....கண்ணழகருக்கு கண்ணும் மீசையும்தான் வடிவு.தாடி...நினைக்கவே சிரிப்பாயிருக்கு.//
ReplyDeleteவாம்மா வஞ்சிக்கொடி! இவுகளுக்கு சிரிப்பாயிருக்காமில்ல!
//ஒரு வேளை தலையில வளருதில்லையெண்டு முகத்தில வளர்க்கத் திட்டமோ.இது முகவரம்புச் சட்டம் இல்லாட்டி மீசைவரம்புச் சட்டத்துக்குள்ள வருமோ கலா ?!//
ஒரு திட்டமும் இல்ல. சத்ரியனுக்கு சட்டமும் இல்ல.
//{ஹேமா இதுங்க பொண்ணுங்களா? என முணுமுணுக்கிறார்போல//
ReplyDeleteஇதுல முணுமுணுக்கிறதுக்கு என்ன இருக்கு? கன்ஃபர்ம் தான்
//கஷ்ரப்பட்டு மாங்குமாங்கென்று எழுதுகிறோம் இந்த மனிசன் வந்து எட்டிப் பாக்குதா?//
கங்கை கரை தோட்டத்துல கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். ஸாரி.
// ஒரு ரவுண்டு திருநல்லாறு போயிட்டு வந்துடறேன்.//
ReplyDeleteஅப்படியே நாங்களும் தப்பிச்சிகிட்டதுக்கு நன்றி சொன்னதா சொல்லிடுங்கோ..
//ஹேமா பயபுள்ளைக்கு சிரிப்பும் நல்லாத்தான் இருக்கு..//
ReplyDeleteஇருக்கும் இருக்கும்.
//ஆனால் நீங்க சொன்ன மாதிரி தாடி நினைச்சா தான் சிப்பு சிப்பா வருது..//
வரும் வரும்.. உங்களுக்கு.
// கங்கை கரை தோட்டத்துல கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். ஸாரி //
ReplyDeleteஇதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை.. நெனப்பு பொழப்ப கெடுத்த கதை ஆயிடப்போதுங்க..
//கலா அவரை பார்த்தா ஹாட் அடைப்பு வர ஆள் மாதிரியா இருக்கு.. நமக்கு வரவைக்கிறவர் மாதிரி இல்ல இருக்கு.//
ReplyDeleteகண்டிப்பா இப்ப வரவைக்கிறேன் பார் ‘உங்க ரெண்டு பேருக்கும் ஹார்ட் அட்டாக்’.
ஹேமா,
அதுங்க ரெண்டும் எனக்கு சரி பட்டு வராதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஸோ... முடிவா முடிவு பண்ணிட்டேன்.
//இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை.. நெனப்பு பொழப்ப கெடுத்த கதை ஆயிடப்போதுங்க..//
ReplyDeleteஹலோ,
நீராடிக்கிட்டிருந்தேன்னு சொல்ல வந்தேன்.
ஹேமா எங்க நேரம் நல்லாயிருக்கு..உங்களுக்கு தான் எப்படின்னு தெரியலை..
ReplyDeleteசத்ரியன் நீங்க என்ன முடிவு பண்றது அதான் நாங்க ரெண்டு நாளைக்கு முன்னயே முடிவு பண்ணிட்டோமே..சரி சரி எங்க ஆளு லைனில் இருக்கார் பை பை..
// முடிவா முடிவு பண்ணிட்டேன்.//
ReplyDeleteஎன்னவோ திட்டமிருக்கு..குலுவாலிலே..
ஆமாமா, ஆறுதலுக்கு ஹேமா வருவாங்க.
ReplyDeleteநீங்க நடைய கட்டுங்க. எங்களுக்கும்
ஹேப்பி தான்.\\\\\\
வாம்மா வஞ்சிக்கொடி! இவுகளுக்கு
சிரிப்பாயிருக்காமில்ல!\\\\\
{ இது எங்கையோ இடிக்கிறமாதிரி இல்ல....
புள்ள ஹேமா,வலைபக்கம் போயிடாத வளைச்சுப்போட
ஆளு மந்திரம்,தந்திரம் செய்தாலும் செய்யும்
பாத்து எட்டி,எட்டி நின்னுகோ
//{ஹேமா இதுங்க பொண்ணுங்களா? என முணுமுணுக்கிறார்போல//\\\
இதுல முணுமுணுக்கிறதுக்கு என்ன இருக்கு? கன்ஃபர்ம் தான்\\\\\\
வாய்யா வா! அவக வஞ்சிக்கொடி நாங்க......
அதில உறுதிபடுத்தி வேற காட்டனுமா?
தப்பதட்டிக் கேட்டுச் சுட்டிக்காட்டினால்...
நாங்க பொல்லாதவங்களா?
நாங்க பேசாமடந்தை,புள்ப்பூச்சி,பயந்தாங்கோழி
அப்பாவி எல்லாம் கிடையாது
பாரதிகண்ட புதுமைப் பதுமைகள்
வா யாடி னால் தான் இப்போதைய வாழ்வியலில்{சிலரிடம்}
வாழமுடியும் அதற்காக...வாயாடி என்று சொல்ல்லாமோ..?!
கங்கை கரை தோட்டத்துல கொஞ்சம்
ReplyDeleteபிஸியா இருந்துட்டேன். ஸாரி.\\\\\\
ஏனுங்க இதை முழுமையாய முடிக்கமுடியாம
கூச்சம் தடுக்குதுங்களா? நான் சொல்லுறனுங்கோ
கங்கைக்கரைத் தோட்டம் “கன்னிப்பெண்கள்” கூட்டம்
கண்ணன் நடுவினிலே...நீராடினாராம் தமிழ்!இவரிடம்
எனக்கு ஒன்றுமட்டும் பிடித்திருக்கிறது என்ன தெரியுமா?
என்ன செய்தாலும் மறைக்கத் தெரியாம அவர்வாயாலையே
கொட்டிவிடுவது. அப்பாடா......எல்லோருக்கும் சொன்ன ஓரு திருப்தி
கண்டிப்பா இப்ப வரவைக்கிறேன் பார்
‘உங்க ரெண்டு பேருக்கும் ஹார்ட் அட்டாக்’.\\\\\\
மவனே!யாருக்கு?எங்களுக்கா? அட்டாக்,கிட்டாக் எல்லாம்
யாராலும் பண்ணமுடியாது அவ்வளவு பாதுகாப்பாக
காத்து {க்}”கறுப்பு” படாம எத்தனையோ பூட்டுப் போட்டு
பூட்டுயல்ல வைத்திருக்கிறோம் கள்ளச் சாவி போட்டுத் திறந்தாலும்
சுற்றி மின்சாரம் பாயவிட்டுள்ளோம் ஆளே அவுட்
அப்படித்தானே தமிழ்!
அதுங்க ரெண்டும் எனக்கு சரி பட்டு வராதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஸோ... முடிவா முடிவு பண்ணிட்டேன்\\\\\\
என்னமோ நாங்க ஏங்க..ஏங்க என்று ஏங்கினமாதிரி அல்லவா
இருக்கிறது.{உங்கமனச்சாட்சிப்படி} உங்களுக்கு ஏற்றவங்க அல்ல
என்று சரி யா பட்டென்று சொல்லியதற்கு நன்றி தலைவா
ஹேமா....................................!!!!!!!!!
கலா பின்னு பின்னுன்னு பின்னிட்டீங்க. நம்ம அழகுக்கும் அறிவுக்கும் திறமைக்கும் இவரை விட நல்ல மகராசனே கிடைப்பான் வாங்க போலாம்..இவரு சகவாசமே வாணாம் நமக்கு..
ReplyDeleteகாதல் திருவிழாக்கல் ஆரம்பாகிற நேரம் மிகவும் இனிமையாகவே மன்ம் பாடாஅரம்பிக்கிறது.அந்த பாடலின் ஒலியே திரும்பவுமாய் ஒரு திருவிழாவை கொண்டு வந்துவிடுகிறது.
ReplyDeleteஆகா...என்னை வச்சி இவ்ளோ கூத்து நடந்திருக்கா இங்க.என்ர நேரத்தைப் பத்திக்கூட கவலைப்பட்டிருக்காங்களே.பாவம் கண்ணழகர்.உங்க ரெண்டு பேரையும் வச்சு எப்பிடித்தான் கட்டியவுக்கிறாரோ.நான் பாவம்பா !
ReplyDelete