Apr 9, 2012

தீயாடல்


தேய்பிறைக் காலம்.

பின்னிரவு.

நிலா
துழாவிப் பார்த்து கடந்திருக்கிறது
நம் மொட்டை மாடியை.

இனியெப்பவும்
வெளியூரில் ராத்தங்கல்
கூடாது நமக்கு.

*

தீ
நிரம்பிய
குளம்
நீ.

தீயாட வேண்டும்
நான்.

**


51 comments:

  1. தீயாட வேண்டும் நான். வார்த்தைப் பிரயோகம் பிரமிக்க வைத்தது. அருமை.

    ReplyDelete
  2. புதுவிதமான புரிதல் ....

    ReplyDelete
  3. குட்டியாய் குட்டியாய் கலவரம்..

    நிலா, தீ இரண்டும் உடந்தை போல..
    நாட்டை விட்டு வேலை செய்யிற மாதிரி இருக்கு.ஆனால் லேபில் எல்லாம் அனுபவமுன்னே வருது.ஹேமா கலா கவனிக்க..

    கலா இது நம்ம மாதிரி உலகம் தெரியாதவங்க வர்ற இடமில்லை.

    ReplyDelete
  4. அண்ணே வணக்கம் ..
    ஒவ்வொரு நாளும்
    வரியின் மினுமினுப்பு கூடிக்கொண்டே
    போகிறது அண்ணே ..

    ReplyDelete
  5. அண்ணே நீங்க தீ குளிக்க போறீங்க ..என்று சொல்லுங்க ..
    வாழ்த்துக்கள் ...கலக்குங்க ..

    ReplyDelete
  6. தீ குளிக்க போறீங்க... unmaiyaa.. appaada NIMMADHI..NIMMMADHI...NIMMADHI.

    ReplyDelete
  7. கால
    இடைவெளிகளில்
    தீக் குளத்தில்
    தீயாடல் (நீராடுதலின்) இதம்
    அது
    ஒரு வித ம்ம்ம்ம் ...சுகம் (:


    என்றோ
    உணர்ந்த (ருசித்த) ஒன்றை
    சில நாள் பழக்கத்திற்கு பின்
    நினைவுகளில்
    மீண்டும் ருசிப்பது என்பது
    மீளச் சுவை

    ReplyDelete
  8. கலா இது நம்ம மாதிரி உலகம் தெரியாதவங்க வர்ற இடமில்லை\\\\\


    தமிழ்!ஆமா,ஆமா....
    கண்ணை மூடிக்கொண்டுதான் அம்மாவுக்குத் தெரியாம...பயந்து,பயந்து வந்தேன்

    இருந்தாலும் பாவமில்லையா? தமிழ்!
    தீயை அணைக்க..
    ஒரு உதவி செய்யணுமா?இல்லையா?கொஞ்சம் பரந்த மனப்பான்மை எனக்கு!அதனால....குடம்குடமாய்ப்பெட்ரோல் ஊற்றப்போகிறேன்.

    ReplyDelete
  9. வார்த்தையின் ஜாலம் அருமை .

    ReplyDelete
  10. மனதின் தீ.....வரிகளில் !

    என்னால தாங்கமுடியேல்ல.
    வெக்கை அப்பனே.கருப்பரைப் போல நானும் கருகமுதல் வெளில வந்திடவேணும்.பிறகு நானும் கருப்பியாயிடுவன் !

    ReplyDelete
  11. கன்னித்தீவில சுத்திக் கடலாம்.கலா கருப்பர் கடல்ல குதிக்கவேணுமோ.பெட்ரோல் ஊத்தினா அணைக்க என்ன வழி.பாவமெல்லோ.ஏதாவது வேண்டுதல் எண்டா நேர்த்திக்கடனை மாத்திவிடுங்கோ.

    தமிழ் கண்ணழகரைக் கலாய்க்காதேங்கோ.அழுகிற சத்தம் சுவிஸ் வரைக்கும் கேக்குதப்பா !

    ReplyDelete
  12. சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென......


    கலா...கவனிச்சீங்களோ....!

    ReplyDelete
  13. தீயாடல் - அழகிய சொல்.
    அருமையான கவிதை.
    அருமை நண்பா

    ReplyDelete
  14. கலா, ஹேமா, ஐ அப்ஜெக்ட் யூ பிபுள், கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, அவன் கண்ணு ரெண்டு என்ன மயக்கும் தவுசன்வாட்ஸ்சு பவரு..க்க்கும் இனிமே நீங்க அவரு நெறத்தை பத்தி பேசி பாருங்க...

    ஹேமா நீங்க சொன்னதால் கலாய்க்காமல் கொஞ்சமா ரொமான்ஸ் சாங்கு பிளே பண்ணினோம்..இப்ப புள்ளையாண்டானை அழ வேணாமுன்னு சொல்லுங்க..

    ReplyDelete
  15. தமிழ்...கண்ணழகர் கண்ணைப் பத்தி நான் மட்டுத்தான் கதைப்பன்.ஆரும் கதைக்கக்கூடாது.சொல்லிட்டன் !

    ReplyDelete
  16. காதல் சொக்கப்பனை கவிதைமயமாய்க் கொளுந்துவிட்டெரிகிறது. பாராட்டுகள் சத்ரியன்.

    ஒரு சந்தேகம். துலாவி? துழாவி?

    ReplyDelete
  17. // ஹேமா said...
    தமிழ்...கண்ணழகர் கண்ணைப் பத்தி நான் மட்டுத்தான் கதைப்பன்.ஆரும் கதைக்கக்கூடாது.சொல்லிட்டன் !//

    சரிங்க ஹேமா, ஏதோ மாமனாச்சேன்னு சத்த கலாய்ச்சிப்புட்டேன், கலாவுக்கும் ஒரு எச்சரிக்கை விடுங்கோ மறக்காமல்..

    ReplyDelete
  18. என்னால தாங்கமுடியேல்ல.
    வெக்கை அப்பனே.கருப்பரைப் போல நானும் கருகமுதல் வெளில வந்திடவேணும்.பிறகு நானும்

    {கருப்பியாயிடுவன் \\\\\\}
    ஹேமா ,உன் கண்ணழகர் என்னிடம் உன்னைப்பற்றிப் பேசும்போது ...உன் பெயர்சொல்வதில்லை "கறுப்பி" என்றுதான் சொல்வார் அப்புறம் எப்படி மீண்டும் கறுப்பாவது>..!..?

    ReplyDelete
  19. மேலே எழுத்துப்பிழை
    மன்னிகனும்...கருப்பி
    கருப்பாவ்து {திருத்தம்}

    ReplyDelete
  20. தமிழ் கண்ணழகரைக் கலாய்க்காதேங்கோ.அழுகிற சத்தம் சுவிஸ் வரைக்கும் கேக்குதப்பா \\\\\
    கேட்கும்!கேட்கும்!! ஏன்? உங்கமனசு தாங்காதே?
    எங்ககிட்ட மோதினா இதுதான்!அதனால்....மோதவேண்டாம் என்று நீங்க "அவருகிட்ட சொல்லுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

    ReplyDelete
  21. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, அவன் கண்ணு ரெண்டு என்ன மயக்கும் தவுசன்வாட்ஸ்சு பவரு..க்க்கும் இனிமே நீங்க அவரு நெறத்தை பத்தி பேசி பாருங்க\\\\\
    என்னமா..!மொட்டையும்.மொட்டமாடியும் பிடிக்காது என்று சொல்லிபுட்டு
    கட்சிமாறிவிட்டீகளே!
    மொட்டமாடில... துலாவினதுல ஏதாவது மந்திரிச்சாரோ?

    கொளகையை விட்டுவிடாதீங்கோ

    ReplyDelete
  22. தமிழ்...கண்ணழகர் கண்ணைப் பத்தி நான் மட்டுத்தான் கதைப்பன்.ஆரும் கதைக்கக்கூடாது.சொல்லிட்டன் \\\\\

    அம்மாடி!உங்களுக்குமட்டுந்தான் அந்தக் கண் அழகு ,நீங்களே எடுத்துக்குங்கோ எதற்கும் என்தோழி ஒருவங்க இருகிறாங்க அவங்ககிட்ட இந்தச் செய்தியை காதில ஊதிறன்
    அவங்க பாத்துகுவாங்க அம்மா...சாரல் ஓடிவாடா....

    ReplyDelete
  23. சரிங்க ஹேமா, ஏதோ மாமனாச்சேன்னு சத்த கலாய்ச்சிப்புட்டேன், கலாவுக்கும் ஒரு எச்சரிக்கை விடுங்கோ மறக்காமல்..\\\\
    நானா..?இவரிகிட்டையா?சே..சே அவரைதான் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள ஏனென்றால்....
    தீ
    நிரம்பிய
    குளம்
    நீ.


    தீயாட வேண்டும்
    நான்.


    நீங்களே நியாயமா?என்று கேளுங்கள {ஹேமா,தமிழ்}அவரை.இந்தச் சின்னபொண்ணுகிட்ட..இப்படிக் கவிதையில தூது விடலாமா?

    ReplyDelete
  24. சரிங்க ஹேமா, ஏதோ மாமனாச்சேன்னு சத்த கலாய்ச்சிப்புட்டேன்\\\\\\

    தமிழ் பயமேபடக்கூடாது
    நீங்க என்ன வேணுமோ திட்டுங்க.. அவரை எனக்கு ரொம்பச் சந்தோஷம் ஹேமா சுவிஸிலதானே இருகிகாறார் அவ அங்கிருந்து இங்கு வந்து சேருவதற்குள நான் அந்தக் கண்ணழகரை......புரட்டி எடுத்திடமாட்டேனா? ‌அவக வந்து உப்பும்,மஞ்சளும் அரைத்துப் பூசட்டும்

    ReplyDelete
  25. தேய்பிறைக் காலம்.

    பின்னிரவு.

    நிலா
    துழாவிப் பார்த்து கடந்திருக்கிறது
    நம் மொட்டை மாடியை.

    இனியெப்பவும்
    வெளியூரில் ராத்தங்கல்
    கூடாது நமக்கு.\\\\\\\


    வாவ்.... என்ன அருமை
    எவ்வளவு “அடக்கம்”
    துழாவி இச்சொல்லை பல..வருடங்களுக்குப் பின்
    கேட்டிருக்கிறேன் ஊரில் கேட்டதுதான்!!



    தீ
    நிரம்பிய
    குளம்
    நீ.
    தீயாட வேண்டும்
    நான்.\\\\
    இதற்குள்ளும் பல அடக்கம்,நெருக்கம்
    சொல்லிப் புரிவதில்லை.............கலை
    இருந்தாலும் ..முதல் கவிதைதான் என்னைக்
    கவர்ந்தது

    ReplyDelete
  26. // நீங்களே நியாயமா?என்று கேளுங்கள {ஹேமா,தமிழ்}அவரை.இந்தச் சின்னபொண்ணுகிட்ட..இப்படிக் கவிதையில தூது விடலாமா?//

    இப்படி வேற இருக்கா? சத்ரியா நீங்க பெரிய ஆளு தான்..மேல் மாடி ஏன் காலின்னு இப்ப தான் புரியுது..

    // கட்சிமாறிவிட்டீகளே!//

    கலா அதெல்லாம் மாறவில்லை, சும்மா லூலுலாயி...

    // உன் பெயர்சொல்வதில்லை "கறுப்பி" என்றுதான் சொல்வார் //

    என்ன தான் இருந்தாலும் ஹேமாவை அவர் அப்படி சொல்லி இருக்க கூடாது. இதை ஏன் கலா இத்தனை நாள் ஹேமாவுக்கு சொல்லலை?

    ஹப்பாடா வந்த வேலை முடிந்தது..போய் நல்லா தூங்கனும்.

    ReplyDelete
  27. ஒரு கறுப்பு இன்னொரு கறுப்பை கறுப்பெண்டு சொன்னால் அது அன்பு கூடித்தான்.கண்டுக்காதேங்கோ தமிழ்,கலா.நானும் சொல்றேன் கறுப்பா...கறுப்பா...கறுப்பா...கவிக்கறுப்பா.போதுமோ...!

    ReplyDelete
  28. தமிழ்!கவுத்திட்டா..நம்மளைக் கவுத்திட்ட இந்த வஞ்சிக்கொடி{ஆசையாய் அவரு அவகளுக்கு வைச்சபெர்ரு} இந்தப்பூனையும் பால் குடிக்குமா?என்பது இதைப்படித்தவுடன்தான் தெரிந்து கொண்டேன். எந்தளவுக்கு அன்பு கூடிவிட்டதென்று நிறைபோட்டுச் சொல்லம்மா? செல்லம்மா!ஆமா...இனம் இனத்தோடதானே சேரும் பரவாயில்லை!
    நமக்கு வேண்டாம் தமிழ் இந்தக் கறுப்பெல்லாம்..... அத்தமவ சிவப்பா?அந்த அத்திபழம் சிவப்பா?என்று பாடி....ஒரு மவராசன் வராமலா போவான்!

    ReplyDelete
  29. ஹேமா எனக்கு வேணாமா இந்த ஆளு சகவாசம் இனிமேல்..ஆஹா அவரு வஞ்சிக்கொடின்னு சொல்வாராம் இந்தம்மா அதென்ன கவிக்கருப்பா என்னாவொரு கொஞ்சல்...சீ சீ இந்த பழம் புளிக்கும்...இன்னைக்கோட போச்சி மாமா மச்சி உறவு..சத்ரியா ஹேமா நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்...என்னாவொரு வில்லத்தனம்....

    ReplyDelete
  30. கலா நீங்க படிச்சி படிச்சி சொன்னீங்க நான் தான் நம்பலை, நமக்கு வேணாம் இவுக சகவாசம்..என் அத்த மகன் செவப்பு நானும் செவப்பு, நீங்க எப்படி கலா? இனிமேல் நாம நம்ம கதையை பேசிக்குவோம்..எனக்கு ஒரு விசயம் மனசு ஆறவேயில்லை கலா..கவிக்கறுப்பாவாம்..என்னா ஒரு அம்பு ஹ்ம்ம்ம்ம்

    ReplyDelete
  31. இப்படி கூவறோமே அந்த பெரிய மனுஷன் இந்த பக்கமே வரலை பார்த்தீங்களா? அய்யா எந்த தீயில் எரிஞ்சிக்கிட்டு இருக்காரோ? நம்ம தான்...?

    ReplyDelete
  32. ”தீயாடல்”-சொல்லழகு!

    ReplyDelete
  33. ''..தீ
    நிரம்பிய
    குளம்
    நீ.


    தீயாட வேண்டும்
    நான்....''
    ஊ!..ரெம்ப ...ரெம்ப ஹொட்....அப்பப்பா!...குழையுள் மறையும் காய் போல...
    அருமை!...அருமை!... வாழ்த்துகள்..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  34. சீ சீ இந்த பழம் புளிக்கும்...இன்னைக்கோட
    போச்சி மாமா மச்சி உறவு..\\\\\\\\\\
    {தமிழ், வரவேற்கத்தக்க ஒரு முடிவு நன்றி
    ரொம்பப் புளிப்பு வேண்டாம்




    எனக்கு ஒரு விசயம் மனசு ஆறவேயில்லை
    கலா..கவிக்கறுப்பாவாம்..என்னா
    ஒரு அம்பு ஹ்ம்ம்ம்ம்\\\\\\\\
    அதுதான்டா..நானும் யோசிக்கிறேன்
    இந்தக் கறு கறு..கறு..கறுப்பிக்கு இவ்வளவு
    தையிரியம் யார் கொடுத்திருப்பார்? எங்கிருந்து
    வந்திருக்கும்? என்னோரு சவால் விடுத்திருக்கிறா
    நம்ம இருவருக்கும்! இது மந்திரம் செய்யும்
    வேலைதான்.,இப்ப நான் சுவீஸ்ஸுக்குப் போகணும்
    அவளை அழைத்து வந்து மாற்று மருந்து கொடுத்து
    மறக்க வைக்க!



    இப்படி கூவறோமே அந்த பெரிய மனுஷன்
    இந்த பக்கமே வரலை பார்த்தீங்களா? \\\\\\\\
    ஜய்யோ...விஷயமே தெரியாதா?ஒருவாரம்
    விடுப்பாம்....வஞ்சிக்கொடி அப்படிச் சொன்னதிலிருந்து
    விடுப்பெடுத்துக் கொண்டாடுகிறாராம் எனக் கிசுகிசு..
    வந்தவண்ணமாய்...
    முருகா! ஓஓஓஓ கூப்பிடவேகூடாது இவருக்கு இரண்டாக்கும்!
    பிள்ளையாரப்பா.............

    ReplyDelete
  35. அசதியில கொஞ்சம் தூங்கவிட மாட்டேங்கறாங்களே!

    ஹலோ, என்னா அங்க சத்தம்?

    ReplyDelete
  36. தமிழ்! பாருங்க....தூங்கினாத்தானே,கனவுவரும் கனவுவந்தாத்தானே!..............
    பாருடா..நம்மளை அதட்டும் அளவுக்கு
    "அவக,,.."தையிரியம்!கொடுத்திருக்கிறாக...மவனே!வாரன்டா ,இப்ப அந்தக் கன்னித்தீவுக்கு!

    ReplyDelete
  37. ஆமாம் கலா அதுவும் நம்மளை வெரட்டறதை பார்த்தீங்களா, ஹலோ என்னா அங்க சத்தம்?ன்னு..பய இந்தியா வரட்டும் கொன்னு புதைக்கிறேன்.

    ஆமாம் எல்லாம் அவுக கொடுக்கிற தைரியம் தான்.. நீங்க உடனே அந்த தீவுக்கு போய் கையை காலை உடைச்சி அந்த அம்மாவுக்கு புடிச்ச அந்த கண்ணை நோண்டிடுங்க..யார் வராங்க பார்க்கலாம்.

    ReplyDelete
  38. சத்ரியா...கை குடுங்க.கண் கவனம் !

    அங்க ரெண்டு பேர் வயிறு எரியிறது சுவிஸ்வரைக்கும் மணக்குது.சூ...சூ !

    ReplyDelete
  39. சத்ரியா...கை குடுங்க.கண் கவனம் \\\\\\
    ம்ம்ம்ம்ம.க்கும்.. இது ரொம்ப முத்திப்போச்சு{துங்க..} தமிழ்!நாம இதில...இதுகளுல ..இருந்து விலகிவிடுவம் சரியா? அப்புறம் அம்மையார் ...நினைக்கத் தெரிந்தமனமே...உனக்கு மறக்கத் தெரியாதா?..என்று உங்கபேச்சுக் கேட்காம... என்று நம்மகிட்ட கண்ணக்கசக்கி வரும் போது பாத்துக்கலாம்...!

    ReplyDelete
  40. ஆமாம் ரொம்பத்தான் முத்திப்போயிடுச்சி...என்னா தைரியமா

    // கண் கவனம் ! // அடடா முடியலைடா ரவுசு சாமி.

    கலா நமக்கு வயிறு எரியுதாம், நமக்கு வெள்ளைக்காரன் கிடைக்காமலா போயிடுவான் வாங்க போலாம்..

    நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க!!!

    ReplyDelete
  41. இனிய நந்தன வருட வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் என்னை வாழ்த்தினவங்களுக்கு !

    சத்ரியா...உங்களுக்கும் உங்க மனவிழிக்கும்,சாரல் குட்டிக்கும் வாழ்த்துகள் !

    நேத்து எரிஞ்சு மணம் வந்திச்சு.இண்ணைக்கு பொறமைத் தீ பத்திகிட்டு எரியுது.கறுப்பழகரே அணைச்சிடுங்க !

    இப்ப என்ன உங்க ரெண்டு பேருக்கும்.அவர் என்னைக் ”கறுப்பி”ன்னார்.நானும் ”கறுப்பா”ன்னேன்.”கண்ணை நோண்டிப்புடுவேன்”சொன்னீங்க.க”ண் கவனம்”ன்னேன்.ஏன்னா எனக்குப் பிடிச்ச கண்.அதுக்கெல்லாம் போய் என்னை ஓரம் கட்டுறீங்களே.கலா தமிழ் சரியோ இது.அடுத்த கவிதையில 3 பேரும் சேர்ந்து கிண்டனுமெல்லோ !

    ReplyDelete
  42. ஹேமா குட் இப்ப தான் எங்க ஃப்ரண்டு..அடுத்த கவிதையில் கிண்டற கிண்டுல உங்க கவிகருப்பர் கவிதையே எழுத கூடாது..பெண்கள் ஒற்றுமை ஓங்குக!!!

    ReplyDelete
  43. புளள,இனி நாங்க கூட்டுச்சேரவேமாட்டோம் உங்களுடன்... இந்தச் சாக்குப்போக்கு எல்லாம் இனி எடுபடாது.

    இருந்தாலும்...இருந்தாலும் எங்க இருவரோட {தமிழோட ,என்னோட}இருவரும்சொன்னார்கள பரவாயில்லை கூட்டுச் சேர்த்துக்கோங்க என்று,அ‌தனால..சேத்துகிறோம் உங்களை மட்டும்!! அந்தக் கண்ணுமண்ணெல்லாம் உதறிவிட்டு
    வாங்கோ

    ReplyDelete
  44. ஹூம்ம்ம். ஒரு வழியா சமாதானம் ஆகிட்டாங்க.

    சரிசரி 3 பேரும் கிளம்புங்க. இன்னைக்கு செகன்ட் ஷோ சினிமாவுக்கு போவோம்.

    ReplyDelete
  45. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  46. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. சரிசரி 3 பேரும் கிளம்புங்க. இன்னைக்கு செகன்ட் ஷோ சினிமாவுக்கு போவோம்.\\\\\

    என்னதுஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ.....
    இப்படி வேற ஆசையுண்டா?என்ன! நாங்க ஆடுமாடுங்களா?சாய்த்துக் கொண்டுபோக?அதுவும் இரண்டாவது ஆட்டச்சினிமாவுக்கு!இது பேஏஏஏஏஏஏஏஏ ராஆஆஆஆஆஆஆஆ சைஐஐஐஐஐஐஐஐ 1,,2,,3..4 கேட்குதா?

    ReplyDelete
  48. பார்த்தீங்களா கலா கொழுப்பை..3 பேரும் வருனுமாம் தொரைக்கு?

    ReplyDelete
  49. கன்னியில்லாத் தீவுதான் சரி.கிடக்கட்டும் விடுங்கோ !

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.