Oct 20, 2009

"மலர்கள் மீண்டும் மலரும் "



அன்னையே,

என்னைக்
'கருப்பை ' தொட்டிலில் சுமந்த
உன்னை
மருத்துவமனைக் கட்டிலில்
கிடத்தி வைத்திருக்கிறேன்.

உன் உயிரைக்
கவர்ந்துச் செல்ல
வாசல் வரை வந்துவிட்ட
காலன் * கூட
கனிவான உன்
முகம் பார்த்து
கை பிசைந்து
நின்றிருக்கக் கூடும்.

அவனின்
அந்த கணப்பொழுது
தயக்கம் தான்
தாயுன்னைக் காப்பாற்றும்
வாய்ப்பைத் தந்தது.

நெடுநாளாய்
நலம் குன்றிய உன்னை
மொய்த்திருக்கும்
மௌனநிலை
எம் மனதைக் கொல்கிறது.

ஆனாலும்
நம்பிக்கை இருக்கிறது.

உன்
உதட்டுப் புன்னகை
மலர்கள் மீண்டும் மலரும்!

(காலன்*=எமன்)



குறிப்பு:- "மலர்கள் மீண்டும் மலரும்" என்ற தலைப்பின் கவிதைப் போட்டியில்
பரிசு பெற்ற கவிதை. தலைப்புத் தந்தவரும், கவிதை தேர்ந்தேடுத்தவரும் "கவிஞர் திரு.மு.மேத்தா " அவர்கள்.

இக்கவிதை எழுதிய அன்று என் தாயார் மிகவும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்தார். ( தற்போது மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்.)

(படத்தில் "கவிதாயினியும் தோழியுமான" சுகுணா , கவிஞர் மு.மேத்தா, அருகில்அடியேன் .)

24 comments:

  1. //"மலர்கள் மீண்டும் மலரும்" என்ற தலைப்பின் கவிதைப் போட்டியில்
    பரிசு பெற்ற கவிதை. தலைப்புத் தந்தவரும், கவிதை தேர்ந்தேடுத்தவரும் "கவிஞர் திரு.மு.மேத்தா " அவர்கள்.//

    பாராட்டுக்கள் நண்பா. அம்மாவின் உடல்நலம் தற்போது நன்றாக இருக்கிறது என்பது ரொம்ப சந்தோசமான் விஷயம்.

    ReplyDelete
  2. க்உன் உயிரைக்
    கவர்ந்துச் செல்ல
    வாசல் வரை வந்துவிட்ட
    காலன் * கூட
    கனிவான உன்
    முகம் பார்த்து
    கை பிசைந்து
    நின்றிருக்கக் கூடும்.

    நெகிழ்ச்சியான வரிகள்

    ReplyDelete
  3. சத்ரியன்,
    மனசைக் கலக்கிப் பின்பு சரி செய்துவிட்டீர்கள்.
    அருமையான கவிதை.

    ReplyDelete
  4. //உன் உயிரைக்
    கவர்ந்துச் செல்ல
    வாசல் வரை வந்துவிட்ட
    காலன் * கூட
    கனிவான உன்
    முகம் பார்த்து
    கை பிசைந்து
    நின்றிருக்கக் கூடும்.

    நெகிழ்ச்சியான வரிகள்//

    நவாஸ்,

    நான் நெகிழ்ந்து எழுதிய வரிகள்தான் அவை.

    நன்றி.

    ReplyDelete
  5. //பூங்கொத்து!//

    வாங்க அருணா,

    நெடுநாளாச்சு ( நான் அங்கிட்டு வந்தும்). ஆனாலும் பூங்கொத்தோடு வந்திருக்கீங்க.

    நன்றி.

    ReplyDelete
  6. //சத்ரியன்,
    மனசைக் கலக்கிப் பின்பு சரி செய்துவிட்டீர்கள்.//

    ஹேமா,

    நானாவது பராவாயில்லை. நீங்க மூளையயே கலக்கி விடறீங்க.
    இப்ப மனசு சரியாயிட்டது தானே.?

    ((யாராவது போன்ல பேசினாலும் இடுகையில போட்டுத் திட்(தள்)றீங்க. பாவம் அவர்)

    நன்றிப்பா.

    ReplyDelete
  7. இதுக்கு விமர்சனம் எழுத எனக்குத் தகுதி இல்லை..! அம்மாவுக்கு அநேக நமஸ்காரங்கள்..!

    ReplyDelete
  8. //இதுக்கு விமர்சனம் எழுத எனக்குத் தகுதி இல்லை..!

    லக்கலக்க,

    உமக்கெ செத்த ஜாஸ்தியா படலியோ?
    ( "பொடிப் பசங்க எழுதறதுக்கெல்லாம் என்னத்த விமர்சனம்", எழுதனோம் என்னும் எண்ணமோ? என்னவோ? )

    //அம்மாவுக்கு அநேக நமஸ்காரங்கள்..!//

    அம்மாவுடன் தொலைபேசியில் தொடர்புக் கொள்ளும் போது நிச்சயமா தெரியப்படுத்தறேன்.

    ReplyDelete
  9. தாய்க்கொரு கவிதை நன்று....

    வார்த்தைகளின் கோர்வைகள் நன்றாக இருக்கிறது...

    ReplyDelete
  10. //தாய்க்கொரு கவிதை நன்று....

    வார்த்தைகளின் கோர்வைகள் நன்றாக இருக்கிறது...//

    பாலாஜி,

    நன்றிப்பா.

    ReplyDelete
  11. சத்ரியன்

    கவிதையில் பாசமும் நேசமும் பின்னி பிணைந்து கலக்கல்..

    என் தாய்க்கு வணக்கம்...

    ReplyDelete
  12. //கவிதையில் பாசமும் நேசமும் பிண்ணிப் பிணைந்து கலக்கல்..

    என் தாய்க்கு வணக்கம்...//

    வசந்த்,

    சமீப நாட்களா உங்க மேல புகாரா வந்து குவியுது. எப்படியோ நான் எழுதறது உங்களுக்குப் புரியுதுன்னு தெளிவாயிருச்சு.

    உங்களின் வணக்கத்தை அம்மாவிடம் தெரியப்படுத்தி விடுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  13. கவர்ந்துச் செல்ல
    வாசல் வரை வந்துவிட்ட
    காலன் * கூட
    கனிவான உன்
    முகம் பார்த்து
    கை பிசைந்து
    நின்றிருக்கக் கூடும்.//

    என் தாய்க்கும் இது நடந்திருந்தால்
    இன்று என்னுடன் இருந்திருக்கக் கூடும்
    ஓஓ...காலனென்றால் ஒருவேளை
    நின்றிருபான்......வேட்டை நாய்களின்
    வெறிவிளையாட்டில் சிக்கிய உயிரல்லவா///

    உருக்கமான கவிதை நன்று .என் தாயின்
    நினைவலைகளினால்....கண்ணில் நீருடன்....

    உங்கள் தாய் எங்களைப்போன்றோருக்கும்
    தாய்தான்.அம்மா எப்போதும் நலமுடன்
    வாழ...அனைவரும் வாழ்த்துவோம்.

    ReplyDelete
  14. அழகான வரிகள் வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  15. நல்லது நண்பா... அன்று நாம் பெற்ற பாராட்டுகள் இன்றைய என் நினைவில்.

    ReplyDelete
  16. //உங்கள் தாய் எங்களைப்போன்றோருக்கும்
    தாய்தான்.அம்மா எப்போதும் நலமுடன்
    வாழ...அனைவரும் வாழ்த்துவோம்.//

    கலா,

    நன்றி.

    ReplyDelete
  17. //அழகான வரிகள் வாழ்த்துகள் நண்பரே//

    கவிதை எழுதிய அன்று,
    வலிகளாய் வழிந்தது நண்பா.

    ReplyDelete
  18. //நல்லது நண்பா... அன்று நாம் பெற்ற பாராட்டுகள் இன்றைய என் நினைவில்.//

    அரசு,

    அன்று நான் அழுதுக் கொண்டே கவிதை வாசித்ததும் நினவில் இருக்குமே!

    ReplyDelete
  19. //நல்லா இருக்கு........//

    வணக்கம் புலிகேசி,

    தங்களின் வரவு நல்வரவாகுக.

    வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றி.

    ReplyDelete
  20. //
    உமக்கெ செத்த ஜாஸ்தியா படலியோ?
    ( "பொடிப் பசங்க எழுதறதுக்கெல்லாம் என்னத்த விமர்சனம்", எழுதனோம் என்னும் எண்ணமோ? என்னவோ? )//

    ஹலோ ஹலோ ஹல்லோ... அண்ணே.. என்னாச்சுங்கோ.. அம்மா பற்றிய கவிதை விமர்சனம் செய்ய எனக்கு அருகதை இல்லைன்னா.. நீங்க பெரிய கவிஞர் ரேஞ்சுக்கு நினைச்சுக்கிறது ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ப ஓவருங்கண்ணே..

    ReplyDelete
  21. கவிதை வாசிக்கத் தொடங்குகையில் திடுக்கிட்ட மனம் கடைசிக் குறிப்பில் மகிழ்ந்தது. என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.