Oct 27, 2009

"அன்னை பூமி "

ஒரு காலை வேளை (தூங்கி எழுந்தவனைத்) தோரணம் கட்டி அழைக்கும் வானவில் ...!

இதுதான் எங்கள் வாழ்விடம் . எப்போதுமே இதேபோன்று பசுமையாக இருப்பதில்லை. பருவகாலத்திற்கு ஏற்றாற்போல் மாறும். இது கடந்த செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு நாள் காலை நேரத்தில் எடுக்கப்பட்ட படம்.



மின்சாரக் கம்பியில் வரிசையாக அமர்ந்து இயற்கையை ரசிக்கும் கிளிகள்.



எங்களின் நெல் வயல்.



மலையும், மலையைச்சார்ந்த நிலமும்.


எங்களின் கூரை வீடு.


எங்களுக்கும் தாய் . ( பால் தருவதால் )

எங்க வீட்டு காவலன் .(வடிவேலு)


எங்கள் வாழ்வு இப்படி இயற்கையோடு ஒன்றியது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த நிலத்தோற்றம் சிதைக்கப் படலாம்.


(குறிப்பு:- இந்தப் படங்கள் அனைத்தும் கைத்தொலைப்பேசி மூலம் எடுத்தது.)

41 comments:

  1. கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு நண்பா.

    ReplyDelete
  2. அருமையான...! அழகான ..படங்கள் ..!

    எந்த ஊரு ??

    ReplyDelete
  3. மிக அழகான புகைப்பட பகிர்வு நண்பரே....இதையெல்லாம் புகைப்படங்களில் பார்க்கும்போதே மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது..

    ReplyDelete
  4. அண்ணே அருமை...! வாவ்.. என்னுடைய கனவு தேசம்... கூட்டுக்களி... நன்றி நன்றி நன்றி.. ஜீவன் கேட்டதுக்கு பதில் சொல்லிடுங்க.. எந்த ஊரு.. நெக்ஸ்ட் டைம் ஒரு விசிட் அடிக்கலாம்.. பயபடாதீங்க இந்த தங்கச்சி சீர் எல்லாம் கேட்டு வர மாட்டா.. அப்டியே சுத்தி பார்த்துட்டு வருவோம்ல..

    ReplyDelete
  5. அழகோ அழகு கொள்ளை அழகு

    ReplyDelete
  6. சத்திரியன் இயற்கை அழகுக்கு
    எதுவும் ஈடாகாது அழகு,குளிர்மை,செழிப்பு
    பசுமை அப்பப்பா.......
    எனக்கு பிடித்தமானதும்,விரும்புவதும்
    இப்படியான இடங்கள்தான்.
    இயற்கையுடனமைந்த மலையடிவாரத்தில்
    ஒரு மண் குடிசையில் அமைதியாக
    வாழ வேண்டும் என்பது நெடுநாளாசை
    பார்க்கலாம்.......
    முன்னொரு... காலத்தில் எழில் கொட்டிக்
    கொஞ்சும் இயற்கை வளம் ஈழநாட்டிலும்.....

    ReplyDelete
  7. சத்ரியன் எனக்கும்பிடிச்சிருக்கு இயற்கையோடு ஒட்டிய கிராமத்து வாசனை.அழகு என்னை என் ஊருக்குக் கொண்டு போறீங்க.இனி எப்போ என்று மனம் அழுகிறது.இனி இல்லை என்றும் சொல்லிக்கொள்கிறது.

    இயற்கை அழிந்து கல்லுக் கட்டிடங்களாய் ஆகிக்கொண்டிருப்பது போலவே கல்லாய் நாங்களும் ஆகிக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  8. //கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு நண்பா.//

    நவாஸ்,

    மனதுக்குந்தானே...?

    ReplyDelete
  9. //அருமையான...! அழகான ..படங்கள் ..!

    எந்த ஊரு ??//

    வாங்க ஜீவா,

    "பாறையூர் கிராமம்" வேலூர்‍ மாவட்டம்.

    ReplyDelete
  10. //மிக அழகான புகைப்பட பகிர்வு நண்பரே....இதையெல்லாம் புகைப்படங்களில் பார்க்கும்போதே மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது..//

    வாங்க பாலாஜி,

    நேரிலும் மகிழ்ச்சியை மட்டுமே தரும் இயற்கை. நாம் தான் விலகிப் போய்க்கொண்டிருக்கிறோம். (சரி தானே?)

    ReplyDelete
  11. //அண்ணே அருமை...! வாவ்.. என்னுடைய கனவு தேசம்... கூட்டுக்களி... நன்றி நன்றி நன்றி.. ஜீவன் கேட்டதுக்கு பதில் சொல்லிடுங்க.. எந்த ஊரு.. நெக்ஸ்ட் டைம் ஒரு விசிட் அடிக்கலாம்.. பயபடாதீங்க இந்த தங்கச்சி சீர் எல்லாம் கேட்டு வர மாட்டா.. அப்டியே சுத்தி பார்த்துட்டு வருவோம்ல..//

    ஏய் வெடிவாலு,

    எங்களின் நிஜ தேசமே இதுதான். ஜீவனுக்கு பதில் சொல்லியிருக்கேன். பாத்துக்க. ஃபர்ஸ்ட் டைமே இன்னும் விசிட் பண்ணலியே. அதுக்குள்ள என்ன நெக்ஸ்ட் டைம்? எப்பவும் வரலாம். "சீர்" கேட்டாலும் குடுத்துருவேன். பட்டணத்து தங்கச்சி "பீர்" கேட்டா தான் கஷ்டம்..! வீட்டுல "மோர்" குடுப்பாங்க, அம்மா (அன்பா).

    ReplyDelete
  12. //அழகோ அழகு கொள்ளை அழகு//

    வானம்பாடி,

    கிராமம் அப்படித்தான் சாமி இருக்கும்.

    ReplyDelete
  13. //சத்திரியன் இயற்கை அழகுக்கு
    எதுவும் ஈடாகாது அழகு,குளிர்மை,செழிப்பு
    பசுமை அப்பப்பா.......
    எனக்கு பிடித்தமானதும்,விரும்புவதும்
    இப்படியான இடங்கள்தான்.
    இயற்கையுடனமைந்த மலையடிவாரத்தில்
    ஒரு மண் குடிசையில் அமைதியாக
    வாழ வேண்டும் என்பது நெடுநாளாசை
    பார்க்கலாம்.......
    முன்னொரு... காலத்தில் எழில் கொட்டிக்
    கொஞ்சும் இயற்கை வளம் ஈழநாட்டிலும்.....//

    கலா,

    அமைதியாக வாழ மலைக்கிராமம் ஏற்றதுதான். இப்பொழுது நாகரிகம் தன் நச்சுக் கால்களைக் கொண்டு அந்த வாழ்வையும் சிதைத்துக் கொண்டு வருகிறது.

    ஈழ நாட்டிலும் மீளும் ....அதே இயற்கை. எனக்கு நம்பிக்கை இருக்கிற‌து.

    ReplyDelete
  14. //சத்ரியன் எனக்கும்பிடிச்சிருக்கு இயற்கையோடு ஒட்டிய கிராமத்து வாசனை அழகு. என்னை என் ஊருக்குக் கொண்டு போறீங்க.//

    ஹேமா,

    அழைத்துப்(உங்க ஊருக்கு) போக நான் எப்போ வரணும்?எங்க சாரலின்பா-வும் வர ஆசைப்படறாங்க.

    //இனி எப்போ என்று மனம் அழுகிறது.இனி இல்லை என்றும் சொல்லிக்கொள்கிறது.//

    ஏன் இல்லையென்று தெரிந்துக் கொள்ளலாமா? (ramheartkannan@gmail.com)

    //இயற்கை அழிந்து கல்லுக் கட்டிடங்களாய் ஆகிக்கொண்டிருப்பது போலவே நாங்களும் கல்லாய் ஆகிக்கொண்டிருக்கிறோம்.//

    "இயற்கையை அழித்து கல்லுக் கட்டிடங்களாய் ஆக்கிக்கொண்டிருக்கிறோம்"
    என்பதுதான் சரியாய்ப் பொருந்தும். நாம் கல்லாகிக் கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  15. //arumaiyaa irukku......... //

    ரசிகை,

    நன்றிப்பா.
    (ஒரேயொரு வேண்டுகோள்:) இது போன்ற குறியீடுகள் இந்த மரமண்டைக்கு புரிவதில்லை...)

    ReplyDelete
  16. சத்ரியன் கூறியது...

    /வானம்பாடி,

    கிராமம் அப்படித்தான் சாமி இருக்கும்./

    சாமி காங்கேய நல்லூர்தான் நம்ம அக்கா வீடு. நம்ம யப்பா வளர்ந்தது எல்லாம் வேலூருதான். சலம்பல பாரு.

    ReplyDelete
  17. கண்ணுக்கு இதமா பசுமையா இருக்கு சத்ரியன்...

    ReplyDelete
  18. கலகலப்ரியா சொன்னது...
    //"பார்"க்கலாம்..//

    ம்ம்ம்ம்ம்ம்ம்ஹூம்...இந்த " பார் "‍ ல ஏதோ வில்லங்கம் இருக்கு.

    ReplyDelete
  19. வானம்பாடி,

    //சாமி காங்கேய நல்லூர்தான் நம்ம அக்கா வீடு. நம்ம யப்பா வளர்ந்தது எல்லாம் வேலூருதான். சலம்பல பாரு.//

    அட, நம்ம பாலாத்து 'தண்ணி'யில வளந்தவுகளா நீங்க...!

    ReplyDelete
  20. ப்ரியமுடன்....வசந்த் சொன்னது...

    //கண்ணுக்கு இதமா பசுமையா இருக்கு சத்ரியன்...//

    இன்னும் கொஞ்ச காலத்துக்கு அப்படித்தான் இருக்கும் வசந்த். (ஆனா இப்பவே வெயில் , சித்திரை மாதம் போல வெளுக்குது ராசா.)

    ReplyDelete
  21. படங்கள் அழகாக இருக்கு நண்பா

    ReplyDelete
  22. படங்கள் அருமை
    நண்பா,
    உங்கள் கைப்பேசியும்
    அருமை,
    பொங்கலுக்கு வருவோம்ல
    உங்க ஊருக்கு..

    ReplyDelete
  23. //இந்த நிலத்தோற்றம் சிதைக்கப் படலாம்.//

    எங்கள் நிலத்தோற்றம் சிதைக்கப் பட்டு விட்டது.. நல்லா இருக்கு...

    ReplyDelete
  24. //படங்கள் அழகாக இருக்கு நண்பா//

    வாங்க ஞானம்,

    நன்றி.

    ReplyDelete
  25. //எங்கள் நிலத்தோற்றம் சிதைக்கப் பட்டு விட்டது.. நல்லா இருக்கு...//

    வாங்க புலிகேசி,

    மாற்றம் என்ற ஒற்றைச் சொல்லால்.....அந்த நிலை.

    நன்றி நண்பா.

    ReplyDelete
  26. //படங்கள் அருமை
    நண்பா,
    உங்கள் கைப்பேசியும்
    அருமை,
    பொங்கலுக்கு வருவோம்ல
    உங்க ஊருக்கு..//

    வாங்க சங்கர்,

    எப்பவும் வரலாம்.
    நீங்க எந்த திசையில இருக்கீங்க?

    ReplyDelete
  27. சொந்த ஊர்
    கரூர்
    இப்ப இருப்பது
    பெங்களூர்
    நன்றி சத்ரியன்..

    ReplyDelete
  28. நீங்கள் காட்டி தருகிற வாழ்வை விட்டு வர இயலாது இருக்கு மாப்ள!என்ன அருமையான இடங்கள்!புகை படம் எடுக்கவென இடங்களுக்கு எந்த மேக்கப்பும் பண்ணாமல் அப்படியே எடுத்ததுதான் இதில் விசேஷம்!கொடியில் காயும் புடவை,பிளந்த தரையில் நிற்கிற வடிவேலு,வாயில் வைக்கோலுடன் நிற்கிற தாய்,கூரை வீட்டில் நிற்கிற வண்டிகள்,வயல்,தோப்பு,துறவு வானவில்,...என்ன சொல்லட்டும் மாப்ள! மண் வாசனையை உணர முடிகிறது...

    ReplyDelete
  29. //புகை படம் எடுக்கவென இடங்களுக்கு எந்த மேக்கப்பும் பண்ணாமல் அப்படியே எடுத்ததுதான் இதில் விசேஷம்!கொடியில் காயும் புடவை,பிளந்த தரையில் நிற்கிற வடிவேலு,வாயில் வைக்கோலுடன் நிற்கிற தாய்,கூரை வீட்டில் நிற்கிற வண்டிகள்,வயல்,தோப்பு,துறவு வானவில்,...என்ன சொல்லட்டும் மாப்ள! மண் வாசனையை உணர முடிகிறது...//

    பா.ரா,

    நீளும் வாழ்வில் நாளையொரு நாளில் என் வாழ்வைத் திரும்பிப் பார்க்கையில் ஒப்பனையில்லாத "நான்" எப்படியிருந்தேன் என்பதற்கான அடையாளம் வேண்டுமே அதான்!

    ReplyDelete
  30. ஒரு பாடல்
    எழுதியிருக்கின்றேன்
    வந்து பாடிட்டு இல்ல
    சாடிட்டு போங்க..

    ReplyDelete
  31. நல்லாயிருக்கு அதுசரி இது எந்த ஊர்?

    ReplyDelete
  32. //நல்லாயிருக்கு அதுசரி இது எந்த ஊர்?//

    தியா,
    நண்பர்கள் ஏற்கனவே கேட்டிருக்கிறார்கள். நானும்
    முந்தையப் பின்னூட்டங்களில் குறிப்பிட்டுள்ளேன்....!

    உங்களின் முதல் வருகைக்கும், பகிர்விற்கும் நன்றி.

    ReplyDelete
  33. இது போன்ற ஊரில் தான் எனது கடைசி காலத்தை கழிக்க வேண்டும். விவசாயம் செய்து கொண்டு........

    ReplyDelete
  34. //இது போன்ற ஊரில் தான் எனது கடைசி காலத்தை கழிக்க வேண்டும். விவசாயம் செய்து கொண்டு........//

    புலிகேசி,

    முதலில் என்னை மன்னிக்க வேண்டும்.

    "கடைசி காலம்" விவசாயத்திற்கு ஏற்றதல்ல.
    "உழைக்கும் காலம்" தான் விவசாயத்திற்கு ஏற்றது.

    புரிந்தால்" இன்றே" அதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்குங்கள்.

    மேலதிகத் தகவல்களுக்கு http://agasool.blogspot.com/
    சென்று பார்வையிடுங்கள்.

    ReplyDelete
  35. மனம் லயிக்கிறது. நேரில் பார்த்தால்
    வரலாமா சத்ரியா ...
    (பயபடாதிங்க ...சும்மா தான் )
    //"கடைசி காலம்" விவசாயத்திற்கு ஏற்றதல்ல.
    "உழைக்கும் காலம்" தான் விவசாயத்திற்கு ஏற்றது.//
    உண்மைதான்.

    ReplyDelete
  36. //மனம் லயிக்கிறது. நேரில் பார்த்தால்
    வரலாமா சத்ரியா ...
    (பயபடாதிங்க ...சும்மா தான் )//

    வாங்க வேல்கண்ணன்,

    தாராளமாக வரலாம்... ந‌ண்பர்கள் வருகைக்கு ஏன் பயப்பட‌னும்?

    ReplyDelete
  37. அழகான படங்கள்....அருமையான வாழ்வு..நீங்கள் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  38. அன்னைபூமி அற்புதமா இருக்கு. இயற்கை எப்பவும் சந்தோசமாதான் இருக்கும். எல்லோரும் பாராட்டி,சீராட்டி இன்னும் என்னென்னவோ ஆட்டிருக்காங்க..!அவங்கள எல்லோரையும் சித்திர மாசம் வேலூர்ல இருந்து தர்மபுரி சேலம் வரைக்கும் ஒரு டூர் கூட்டிட்டு வாங்க, ஙொக்கா மக்கா ஜென்மத்துக்கும் அவங்க எங்கையுமே டூர் போகமாட்டாங்க

    ReplyDelete
  39. //எல்லோரும் பாராட்டி,சீராட்டி இன்னும் என்னென்னவோ ஆட்டிருக்காங்க..!அவங்கள எல்லோரையும் சித்திர மாசம் வேலூர்ல இருந்து தர்மபுரி சேலம் வரைக்கும் ஒரு டூர் கூட்டிட்டு வாங்க, ஙொக்கா மக்கா ஜென்மத்துக்கும் அவங்க எங்கையுமே டூர் போகமாட்டாங்க//

    வேடியண்ணே,

    கற்பனை மனிதனின் மிகப்பெரும் பலம். “கற்பனை”யில எதெதோ சொல்லியிருக்காங்க.

    அவங்க சந்தோசந்த்தை கெடுக்க வேணாம் விடுங்க.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.