Nov 25, 2009

நீயே சொல்-02


நட்பென்றுதானே
நம்பிக்கொண்டிருக்கிறோம்

எப்போதாவது
தண்ணிக்குள்ளிருந்து
தலை தூக்கிப் பார்க்கும்
தண்ணீர் பாம்பை போல்

அவ்வபோது
நம்'முள்'ளிருந்து
தலை தூக்கிப் பார்க்கும்
காதலை
என்ன செய்யலாம்...?

34 comments:

  1. காதலையும் தண்ணீர் பாம்பையும் இணைத்த சத்ரியன் வாழ்க !

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  2. நட்பெல்லாம் காதலல்ல
    நட்பற்ற காதலில்லை

    /தலை தூக்கிப் பார்க்கும்
    காதலை
    என்ன செய்யலாம்...?/

    அதென்ன அவ்வப்போது, ஒழுங்கு மரியாதையா வெளியவான்னு ஃப்ரீய விட வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. அருமையான கவிதை.
    தண்ணீர் பாம்பு விஷம் அற்றது.
    காதல் அப்படியில்லை சத்ரியா,
    இருப்பினும், அதன் வழவழப்புடன் ஒப்பிடலாம்.

    ReplyDelete
  4. //காதலையும் தண்ணீர் பாம்பையும் இணைத்த சத்ரியன் வாழ்க !

    வாழ்த்துக்கள்

    விஜய்//

    ஆஹா,

    கட்சி ஆரம்பிச்சிரலாம் பொல இருக்குதே..

    நன்றி விஜய்.

    ReplyDelete
  5. //நட்பெல்லாம் காதலல்ல
    நட்பற்ற காதலில்லை

    /தலை தூக்கிப் பார்க்கும்
    காதலை
    என்ன செய்யலாம்...?/

    அதென்ன அவ்வப்போது, ஒழுங்கு மரியாதையா வெளியவான்னு ஃப்ரீய விட வேண்டியதுதான்.//

    பாலா,

    விட்ரலாம் தான். பாலாய் போன பயத்தைதான் விட முடியல.

    ReplyDelete
  6. கலக்கல். உண்மைதான்.
    கல்யாணம் ஆயிமா அப்பிடி தோணுது?

    ReplyDelete
  7. //தண்ணீர் பாம்பு விஷம் அற்றது.
    காதல் அப்படியில்லை சத்ரியா,
    இருப்பினும், அதன் வழவழப்புடன் ஒப்பிடலாம்.//

    வேல்கண்ணன்,

    ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பாதிச்சிருக்கும் போலிருக்கே..?

    ReplyDelete
  8. //கலக்கல். உண்மைதான்.
    கல்யாணம் ஆயிமா அப்பிடி தோணுது?//

    அரங்க பெருமாள்,

    அனுபவிக்க வுடுங்கப்பா. (கவிதை இன்பத்தைச் சொன்னேன்.!)

    ReplyDelete
  9. //அனுபவிக்க வுடுங்கப்பா. (கவிதை இன்பத்தைச் சொன்னேன்.!)//

    இப்படித் தெளிவா இருங்க சத்ரியன். கொஞ்சம் தெளிவா சொல்லனும்.

    ReplyDelete
  10. வித்தியாசமான ஒப்பீடு நண்பா!

    ReplyDelete
  11. ////அனுபவிக்க வுடுங்கப்பா. (கவிதை இன்பத்தைச் சொன்னேன்.!)//

    இப்படித் தெளிவா இருங்க சத்ரியன். கொஞ்சம் தெளிவா சொல்லனும்.//

    அரங்க பெருமாள்,

    இளசுங்க அப்டி இப்டி தான் இருப்போம். கொஞ்சம் விட்டு புடிங்க..!

    ReplyDelete
  12. //வித்தியாசமான ஒப்பீடு நண்பா!//

    வாங்க நவாஸ்,

    என்ன பண்றது.? எதையாவது யோசிக்க வேண்டியிருக்கே.

    ReplyDelete
  13. அண்ணே... பயப்டாதீங்கண்ணே நாம எல்லாம் எதுக்கிருக்கோம்... (அதுக்காக நாடோடிகள் மாதிரி எல்லாம் முடியாது..) moral support only. :D

    ReplyDelete
  14. //இளசுங்க அப்டி இப்டி தான் இருப்போம். //

    மக்களே இந்த அநியாயத்த கேக்க ஆளில்லயா?

    கலா,கருணா, ஹேமா.. இவங்கெல்லாம் வரட்டும்..

    ReplyDelete
  15. //அண்ணே... பயப்டாதீங்கண்ணே நாம எல்லாம் எதுக்கிருக்கோம்... (அதுக்காக நாடோடிகள் மாதிரி எல்லாம் முடியாது..) moral support only. :D...//

    ப்ரியா,

    இந்த சப்போர்ட் போதும். மத்ததை நானே பாத்துக்கறேன்.

    ReplyDelete
  16. //இளசுங்க அப்டி இப்டி தான் இருப்போம். //

    மக்களே இந்த அநியாயத்த கேக்க ஆளில்லயா?

    கலா,கருணா, ஹேமா.. இவங்கெல்லாம் வரட்டும்..//

    அரங்க பெருமாள்,

    'உள்ளே'காதல் இல்லாத மக்கள் வேணும்னா கேக்க வரட்டும்.

    பெருசுங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து மிரட்டினாலும்.....ம்ம்ம்ம்ம்...தொடரும்..!

    ReplyDelete
  17. ஹேமா நாம் இருவரும் பார்த்து ......கவனம்
    கவிதையின் போக்கைப் பார்த்தால்.....!!!1

    சத்ரியா நாங்கள் எவரும் காதல்..காதல்
    என்று எவரிடமும் கேட்கவும் இல்லை
    சொல்லவும் இல்லை
    அதனால் இன்னும் எங்களுக்கு காதல்
    வயது வரவில்லை .இன்னும் சின்னஞ்சிறுசுகள்.

    ஆனால் நீங்கள் எதை பார்த்தாலும் காதலாகத்
    தோணுது அந்த முதிர்ச்சி வந்துவிட்டது.
    அதனால் நீங்கதான் பெரியவர் சரிங்களா
    அண்ணா!!
    \\\ 'உள்ளே'காதல் இல்லாத மக்கள்
    வேணும்னா கேக்க வரட்டும்.\\\
    நீங்க எப்படி! திருப்பிப் போடுவீங்க என்று
    எங்களுக்கு தெரியுமில்ல...
    காதல் என்றால்___அன்பு ,பாசம்,இரக்கம்
    என்றெல்லாம் காரணம் காட்டி இது
    எல்லாம் இல்லாத மனிதர் உலகத்தில்
    உண்டோ!என்று கேட்பீர்கள் அப்படித்தானே?
    தமிழில் காதல் என்றால் அது காதலை மட்டுந்தான்
    குறிக்கும் .இதே ஆங்கிலத்தில் லவ் என்றால்
    பேசுகின்ற சமயம் சந்தர்பங்களில் பல இடங்களில்
    நுழையும்.அதனால...நீங்க தமிழ் காதலைச் சொல்கிறீர்களா?
    ஆங்கிலக் காதலைச் சொல்கிறீர்களா?

    ReplyDelete
  18. ஆம் மனித மனம் எப்போது?எப்படி?
    எதற்கு? மாறும் என்று சொல்லத்
    தெரியாது!?புனிதமான நட்பைக் கூட
    காதலாக மாற்றும் சக்தி இதற்கு
    உண்டு.நடைமுறையில் கூடப்
    பார்த்ததுண்டு.
    நல்ல உவமையுடன் கூடிய
    கவிதை நன்றி.

    ReplyDelete
  19. மிக அற்புதமான கவிதை மாப்ள.மென் திரைக்குள் காட்சியாகிறது.இருவேறு ப்ரியம்.கிளப்புரீங்களேப்பு...

    ReplyDelete
  20. //காதலை
    என்ன செய்யலாம்...?//

    அப்டியே ஃபிரியா விட்டுடுங்க....

    கவிதையை ரசித்தேன்...

    ReplyDelete
  21. வீட்டுல குழந்தை அழற சத்தம் கேட்டும்.... இன்னுமா அடங்க மாட்டேங்கிற... பெருசு....அளப்பறையை குறச்சிக்கப்பு... இல்ல ஆப்பு!!!

    ReplyDelete
  22. சத்ரியா எஙகப்பா அடிக்கடி தண்ணிப் பாம்புபோலவே காணாமப் போயிடறீங்க.

    கலா பயம் வேணாம்.அழகான கவிதை சத்ரியன்.ஆழமான நட்பு காதலாக மாறுவதில் தப்பில்லை என்பது என் கருத்து.

    எதுக்கும் சாரல் குட்டிக்கிட்டயும் கேட்டுப் பாருங்களேன்.

    ReplyDelete
  23. அசத்தல் வரிகள்..சத்ரியன் அதிலும் முள்ளுக்கு கொட்டேசன் போட்டு கலக்குறியே...

    நட்பு காதலா மாறுவது காலங்காலமாக ஏற்படும் இயல்புதானே...

    ReplyDelete
  24. //நீங்கள் எதை பார்த்தாலும் காதலாகத்
    தோணுது அந்த முதிர்ச்சி வந்துவிட்டது.
    அதனால் நீங்கதான் பெரியவர் சரிங்களா
    அண்ணா!!//

    கலா,

    எனக்கு பெரியவர் பட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ...தங்கச்சி..!‌
    (எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க...கலாவிற்கு இன்னும் காதல் வயசு வரலையாம்)

    கலா என் தங்கச்சின்னு தெரிஞ்சதும் இனிமே என்னை மச்சான்னு கூப்பிட யார்யாரு அலையறாங்களோ...!

    ReplyDelete
  25. //மிக அற்புதமான கவிதை மாப்ள.மென் திரைக்குள் காட்சியாகிறது.இருவேறு ப்ரியம்.கிளப்புரீங்களேப்பு...//

    நன்றிங்க மாம்ஸ்.

    ReplyDelete
  26. //காதலை
    என்ன செய்யலாம்...?//

    அப்டியே ஃபிரியா விட்டுடுங்க....//

    பாலாசி,

    அப்டியேவா விட்டுடலாம்? (அய்யா சிக்கியிருக்கார் போல..மகா ஜனங்களே)

    ReplyDelete
  27. //வீட்டுல குழந்தை அழற சத்தம் கேட்டும்.... இன்னுமா அடங்க மாட்டேங்கிற... பெருசு....அளப்பறையை குறச்சிக்கப்பு... இல்ல ஆப்பு!!!//

    ஏன் மாமா ,

    பொது இடத்துல கூடவா இப்படி பேசறது?....(அவரோட பொண்ணை கை விட்ருவனோன்னு பயப்படறாருங்க. அப்டியெல்லாம் எதுவும் நடக்காதுங்க மாமா.
    இந்த கேள்விய உங்க பொண்ணு கிட்டதான் கேட்கிறேன்.)

    ReplyDelete
  28. //எதுக்கும் சாரல் குட்டிக்கிட்டயும் கேட்டுப் பாருங்களேன்.//

    ஹேமா,

    எதுக்கு 'சாரல்' கிட்ட கேக்கனும்ங்கறேன். நான் "என்ன செய்யலாம்னு" சாரலோட அம்மா கிட்டதானே கேட்டேன்...அவ்.....!

    ReplyDelete
  29. //அசத்தல் வரிகள்..சத்ரியன் அதிலும் முள்ளுக்கு கொட்டேசன் போட்டு கலக்குறியே...

    நட்பு காதலா மாறுவது காலங்காலமாக ஏற்படும் இயல்புதானே...//

    வசந்த்,

    நீங்க ஒருத்தருதான் "தம்பிய" நல்லா புரிஞ்சி வெச்சிருக்கிறவரு. அதுக்கே நன்றி.

    ReplyDelete
  30. நட்பென்றுதானே
    நம்பிக்கொண்டிருக்கிறோம்

    எப்போதாவது
    தண்ணிக்குள்ளிருந்து
    தலை தூக்கிப் பார்க்கும்
    தண்ணீர் பாம்பை போல்//

    நம்பிக்கை எனும் முள்ளில்தான்
    நட்பின் ஓட்டம்
    எப்பவாது ஒலிக்கும் மனியோசைபோல்தான்
    காதல்...


    அருமை நண்பா..

    ReplyDelete
  31. ஒப்பீடு ரசிக்கும்படியாக இருக்கு

    ReplyDelete
  32. //நம்பிக்கை எனும் முள்ளில்தான்
    நட்பின் ஓட்டம்
    எப்பவாது ஒலிக்கும் மனியோசைபோல்தான்
    காதல்...


    அருமை நண்பா.//

    ச.சங்கர்,

    உங்களுக்கு "எங்கிருந்தோ...." மணியோசை கேக்குது போலிருக்கே.

    ReplyDelete
  33. //ஒப்பீடு ரசிக்கும்படியாக இருக்கு//

    நன்றி ஞானம்....!

    ReplyDelete
  34. அருமை. நறுக்குத் தெரித்தமாதிரி என்பார்களே.. அது இதுதான். ஆனாலும் “உன்னை எப்படி....?”- மாதிரியான கவிதைகள்தான் ஆச்சரியப்படுத்துகிறது. அதுதான் உங்களின் ஆழமான கவிதை சிந்தனையை காட்டுகிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.