Oct 14, 2009

"...த்தேன் நினைவுகள் "


கலைக்கப்பட்ட
தேன் கூட்டில்
கரைந்தொழுகும்
தேன்நெய் போல்

புதைக்கப்பட்ட
உன் நினைவில்
கரைந்துக் கலைகிறது

பழக்கப்பட்ட
என்
தனிமை.

30 comments:

  1. ஒருபொழுதும்
    உன்னை நினைப்பதில்லை
    சுவாசிக்கும் நேரம் தவிர.

    கவிதை தேன் மாதிரிதான் இருக்கு நண்பா!

    ReplyDelete
  2. தேன்.....தேன்....தேன்.......

    மிக இனிமை

    ReplyDelete
  3. //ஒருபொழுதும்
    உன்னை நினைப்பதில்லை
    சுவாசிக்கும் நேரம் தவிர.

    கவிதை தேன் மாதிரிதான் இருக்கு நண்பா!//

    நவாஸ்,

    பின்னூட்டமே ஒரு கவிதையாக இருக்கேப்பா.

    நன்றி.

    ReplyDelete
  4. //கவி தேன்
    ரசி தேன்//

    ஜமால் மாப்ளஸ்,

    ரொம்ப சிக்கனமா (சொல்லை) செலவிடறீங்க.

    நன்றி.

    ReplyDelete
  5. //தேன்.....தேன்....தேன்.......

    மிக இனிமை//

    ஆரூர் தோழா,

    நன்றி.

    ReplyDelete
  6. தேன் தேன் தேன் உனை தேடியலைந்தேன்
    உயிர்ப்பூவை அளந்தேன்
    பிறந்தேன்
    என்னவோ சொல்ல துணிந்தேன்
    எதேதேதோ செய்யதுனிந்தேன்
    உன்னோடு சேரத்தானே நானும் மலர்ந்தேன்

    ReplyDelete
  7. இனி எங்கே தனித்தேன்.சாரல் தந்தேன் என தேனாய் தித்தித்து தமிழ்த்தேனாய் சொற்களுக்குள் புதைந்தேன் எனத் தவழ்வாளே உங்கள் குலத்தேன்.

    ReplyDelete
  8. ஊருக்கு போய்வந்ததும் தனிமை வாட்டுதா ராசா?

    தேன்

    பூ

    வண்டு

    இதுல நீங்க என்ன?

    ReplyDelete
  9. //பழக்கப்பட்ட
    என்
    தனிமை//

    நண்பரே.. எதற்கு இந்த தனிமை பேச்சு... சாரலின்பா இருக்காங்க ,,, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  10. மனவிழி வந்தேன், தொடர்வோம் சத்திரியா

    ReplyDelete
  11. //தேன் தேன் தேன் உனை தேடியலைந்தேன்
    உயிர்ப்பூவை அளந்தேன்
    பிறந்தேன்
    என்னவோ சொல்ல துணிந்தேன்
    எதேதேதோ செய்யதுனிந்தேன்
    உன்னோடு சேரத்தானே நானும் மலர்ந்தேன்//

    நன்னாயிருக்கே பாலா,

    குருவி பட பாடல்.

    (மச்சான், இது வேற எங்கேயோ விட்ட பட்டம் நூலறுந்து வந்து எங்கிட்ட மாட்டிக்கிச்சிப் போல!)

    ReplyDelete
  12. //இனி எங்கே தனித்தேன்.
    சாரல் தந்தேன் எனத்
    தேனாய் தித்தித்து தமிழ்த்தேனாய்
    சொற்களுக்குள் புதைந்தேன் எனத்
    தவழ்வாளே உங்கள் குலத்தேன்.//

    ஹேமா,

    வியந்தேன். ( நான் இப்ப எதுவும் சேட்டைப் பண்ணலை. "சாரலின்பா" விடம்
    போட்டுத்தர்றதா மிரட்டல் விடக்கூடாது.)

    ReplyDelete
  13. //ஊருக்குப் போய்வந்ததும் தனிமை வாட்டுதா ராசா?

    வசந்த்,

    இருக்காதாப் பின்னே?

    //தேன்
    பூ
    வண்டு

    இதுல நீங்க என்ன?//

    ஐயா,

    என் வலையில என்னையே சிக்கிக்கச் சொல்றீங்க.

    ReplyDelete
  14. ////பழக்கப்பட்ட
    என்
    தனிமை//

    நண்பரே.. எதற்கு இந்த தனிமை பேச்சு... சாரலின்பா இருக்காங்க ,,, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//

    ஞானம்,

    அவங்களை விட்டு தனித்திருப்பதனால் தான்...!

    ReplyDelete
  15. //மனவிழி வந்தேன், தொடர்வோம் சத்ரியா//

    ஈசா,

    இனிதாய் வரவேற்கிறேன்.

    ReplyDelete
  16. உங்களுக்கு மட்டுமா வரும்?


    எங்களுக்கும் வருமில்ல1
    இதோ......

    ஏற்றப்பட்ட
    தீபத்தில்
    கரைந்தொழுகும்
    மெழுகு போல்

    வதைபடும்
    உன் நினைவில்
    கசிந்து கரைகிறது

    பழக்கப்பட்ட
    என்
    கண் {ணீர்}

    ReplyDelete
  17. அப்பப்பா,

    ஒரு "...த்தேன்" தான்யா எழுதினன். எவ்வளவுத் தேன்.

    மகிழ்ந்தேன் உறவுகளே!

    ReplyDelete
  18. //ஏற்றப்பட்ட
    தீபத்தில்
    கரைந்தொழுகும்
    மெழுகு போல்

    வதைபடும்
    உன் நினைவில்
    கசிந்து கரைகிறது

    பழக்கப்பட்ட
    என்
    கண் {ணீர்}//

    கலா,

    கலக்கலா எழுதுறீங்களே.

    ஹேமா,

    கலாவையும் வலையில மாட்டிவிட்ருவமா?

    ReplyDelete
  19. அன்பு கலாவுக்கும் என் மனம் நிறைந்த தீபஒளி வாழ்த்துக்கள்.
    கலா சுகம்தானே நீங்க.

    கலா,சத்ரியனை சாரல்கிட்ட மாட்டிவிடுவமா வேணாமா !
    பாவம் இப்போதைக்குக் கொஞ்சநாளுக்கு
    இருக்கட்டும்ன்னு விடுவமா !

    சாரல் குட்டிக்கும்,சத்ரியன்
    உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மனம் நிறைந்த இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  21. சத்திரியன் பாராட்டுக்கு நன்றி
    மகனே!
    ஏனப்பு எந்த வலையிலட மாட்டச்
    சொல்லுறா வலையில மாட்டுற
    வயசாட இது?போப்பா...இந்த
    மூதாட்டிக்கு வலையாவது
    தூண்டிலாவது..

    விழாமலே இருக்க முடியுமா?
    நான் விழுந்து விட்டேன்......
    விழுந்து விட்டேன்..... அடா
    யாராவது பாட்டிக்கு கை
    கொடுக்கலாமில்ல...

    என் அன்பு ஹேமாவுக்கு!!
    என் அன்பான,பாசமான,நட்புடனும்...
    மனமார்ந்த பிராத்தனையுடன்
    வாழ்வில் ஓளிவீச ஏந்துகிறேன்
    இறைவனிடம்.மிக மிக நன்றாக
    இருக்கிறேனடி தங்கம்.

    சத்திரியனுக்கும் என் பின்னோட்டம்
    படிக்கும் அத்தனை தமிழ்
    நெஞ்சங்களுக்கும் என்
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. //
    புதைக்கப்பட்ட
    உன் நினைவில்
    கரைந்துக் கலைகிறது
    //

    கவிதை அருமை!

    வரிகளில் அன்பு வலிந்து ஓடுகிறது:-)

    ReplyDelete
  23. //கலா,சத்ரியனை சாரல்கிட்ட மாட்டிவிடுவமா வேணாமா !
    பாவம் இப்போதைக்குக் கொஞ்சநாளுக்கு
    இருக்கட்டும்ன்னு விடுவமா !//

    ஹேமா,

    கலாவிற்கு ஒரு "வலைப் பூ" தொடங்கி எழுத விடலாமா? என உங்களைக் கேட்டால்,
    என்னைச் "சாரல்" கிட்ட‌ மாட்டி விட கலாவை துணை கேட்கின்றீர்கள். (அதெப்படி, பொண்டு புள்ளைங்க எல்லாம் ஒன்னா சேந்துக்கிறீங்க?)

    //சாரல் குட்டிக்கும்,சத்ரியன்
    உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மனம் நிறைந்த இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.//

    நன்றிப்பா. உங்களுக்கும் "சாரலின்பா" குடும்பத்தாரின் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. //வலையில மாட்டுற
    வயசாட இது?போப்பா...இந்த
    மூதாட்டிக்கு வலையாவது
    தூண்டிலாவது..

    விழாமலே இருக்க முடியுமா?
    நான் விழுந்து விட்டேன்......
    விழுந்து விட்டேன்..... அடா
    யாராவது பாட்டிக்கு கை
    கொடுக்கலாமில்ல...//

    கலா,
    கொஞ்சம் பொறுத்திருங்க.ஹேமாவை அனுப்பி வெக்கிறேன். தூக்கிவிட...!

    எனக்கு கொஞ்சம் (இளவட்டங்களோட) வேலையிருக்கு.கை பிடிக்கச் சொல்லி, ச்ச்ச்சேச்ச்சே...கைக் கொடுக்கச் சொல்லி கூப்டிருக்காங்க.

    ஹேமா வாங்கப்பா. கலாவைக் கொஞ்சம் கவனிச்சுக்குங்க.

    வாழ்த்திற்கு நன்றியும், உங்களுக்கு தீப‌ வாழ்த்துகளும் கலா!

    ReplyDelete
  25. //புதைக்கப்பட்ட
    உன் நினைவில்
    கரைந்துக் கலைகிறது//

    கவிதை அருமை!
    வரிகளில் அன்பு வலிந்து ஓடுகிறது:-)

    ரம்யா
    -விற்கு தீப வாழ்த்துகளும், நன்றியும்!

    ReplyDelete
  26. அருமையாய் இருக்கு சத்ரியன்.மருமகள் நலமா?

    ReplyDelete
  27. //அருமையாய் இருக்கு சத்ரியன்.மருமகள் நலமா?//

    பா.ரா,

    நன்றி.

    உங்கள் மருமகள் நலமுடன் இருக்கிறாள் சம்மந்தி.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.