Oct 1, 2009

தேவதையைக் காணுங்கள்

வணக்கம் வலைத் தோ(ழி)ழர்களே!

நேற்றுதான் ஊரிலிருந்துத் திரும்பி வந்தேன். நீங்கள் எல்லோரும் நலம்தானே?

நான் விடுப்பில் சென்றதால் என்னைப்பற்றி என்னென்ன கற்பனைச் செய்து வைத்திருந்தீர்கள் ? உண்மையாய்ச் சொல்லுங்கள் ! பரிசாக ஒரு முத்தம் கிடைக்கும் , எங்கள் தேவதையிடமிருந்து !

ஊருக்குச் சென்றதன் மர்மத்தை அவிழ்க்கும் நேரமிது.






எங்கள் குல தேவதையை வரவேற்கத்தான் தாயகம் சென்றேன் .
மற்றாக , தேவதைக் காத்திருந்தாள் என்னை வரவேற்க! (அவசரக்காரி)




வரதட்சணையை எதிர்க்கும் எங்களுக்குக் இறைவன் கொடுத்த 'இறைதட்சணை" இவள்.






அப்பாவை வரவேற்ற நிம்மதியில் ஆழ்ந்து உறங்குகிறாள்.





விடுப்பு முடிந்து,பிறந்த பதினெட்டாம் நாளே பிரிந்துச் செல்லும் துர்பாக்கியத் தந்தையைப் பார்த்து பொக்கை வாய்ப் புன்னகையைப் பரிசாகத் தந்து வழியனுப்பி வைத்தாள்.


இப்படியொரு இனிப்புச் செய்தியை யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்கள் ! நான் சொல்வது சரிதானே?



சரி . பெயர் சூட்ட வேண்டும் . சின்னதாக , அழகாக , அம்சமாக உங்களுக்குப் பிடித்த தமிழ்ப் பெயர்களைக் கூறுங்கள். ஒரேயொரு நிபந்தனை மட்டும்.

தொடக்க எழுத்து , "ச " அல்லது "சா " ஆங்கிலத்தில் எழுதும்பொழுது "CH" எனத் தொடங்கும்படி யோசித்துச் சொல்லுங்கள்.


62 comments:

  1. பாப்பாவை கையில் வைத்திருக்கும் ஃபோட்டோவில் உங்களின் மனசும் தெரிகிறது.

    வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் கண்ணன்.

    ReplyDelete
  3. hai pa

    en bloglaum oru thevathai ungaluku wait panitu iruka vanthu eduthukonka ok

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே!நலமா?ஒரு மாதத்துக்கப்புறம்.....
    முதலில் வாழ்த்துகள் பதவி உயர்வு கிடைத்ததற்கு.
    எல்லோர் இதயமும் {உங்கள் பெண் தோழிகள் }
    முக்கிய குறிப்பு {என்னைத் தவிர}ஒரு கணம்
    நின்று பின் தொடந்திருக்குமென நினைக்கின்றேன்.

    அழகான குழந்தை சின்னக் குட்டிக்கு என் அன்பான
    முத்தங்கள்.

    நான் படிக்கும் ஸலோகத்தில் உள்ள அம்மன் பெயர்கள்
    இதோ....சதாஸ்வாஹா,ஷசி,சண்டிகா,ஷமா
    ஸ்வதா,ஸ்வாஹா,சதேஷ்வரி,சஹாயினி,
    ஹேமாஆஆஆஆஆஆஆஆஆஆஆ.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பரே... மிக்க மகிழ்ச்சி. தேவதையை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  6. வாழ்த்துகள் நண்பா,... உங்களின் மகிழ்ச்சி அந்த புகைப்படத்தில் தெரிகின்றது.

    ReplyDelete
  7. //பாப்பாவை கையில் வைத்திருக்கும் ஃபோட்டோவில் உங்களின் மனசும் தெரிகிறது.

    வாழ்த்துகள் நண்பரே.//

    நன்றி நண்பா,

    ("CHA" ) "சா" வரிசையில் பெயர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டால் எப்படி?

    ReplyDelete
  8. //வாழ்த்துகள் கண்ணன்.//

    வாங்க கோவியார். வந்துட்டு போய்ட்டா எப்படி? பேர் சொல்லிட்டுப் போங்க சார்!

    ReplyDelete
  9. //pappa azaka irukka//

    வணக்கம் காயு,

    பாப்பா அழகா இருப்பது சரி. வந்த வேகத்திலே ஓடிட்டிங்கன்னா கோவிச்சுக்க மாட்டாங்களா? வந்து பேர் சொல்லிட்டு போங்க.

    ReplyDelete
  10. //முதலில் வாழ்த்துகள் பதவி உயர்வு கிடைத்ததற்கு.
    எல்லோர் இதயமும் {உங்கள் தோழிகள் }
    ஒரு கணம் நின்று பின் தொடந்திருக்குமென நினைக்கின்றேன்.

    அழகான குழந்தை சின்னக் குட்டிக்கு என் அன்பான
    முத்தங்கள்.

    நான் படிக்கும் ஸலோகத்தில் உள்ள அம்மன் பெயர்கள்
    இதோ....சதாஸ்வாஹா,ஷசி,சண்டிகா,ஷமா
    ஸ்வதா,ஸ்வாஹா,சதேஷ்வரி,சஹாயினி,
    ஹேமாஆஆஆஆஆஆஆஆஆஆஆ.//

    வாங்க கலா,

    நீங்க சொல்ற மாதிரி யாருடைய இதயமும் நின்னிருக்கவோ வெடித்திருக்கவோ வாய்ப்பில்லன்னு நினைக்கிறேன்.உங்கள காணமேன்னு ஹேமா தான் ரொம்ப நாளா வருந்திட்டு இருந்தாங்க.

    நீங்க மட்டும் தான் ஒரு சில பெயர்கள் சொல்லியிருக்கீங்க. நன்றி. அதென்னப்பா ஹேமாஆஆஆஆஆஆ...? ஹேமா போதுமே!

    ReplyDelete
  11. //வாழ்த்துக்கள் நண்பரே... மிக்க மகிழ்ச்சி. தேவதையை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி..//

    அரங்க பெருமாள்,

    வருகின்றவர்கள் எல்லோரும் வாழ்த்திட்டு மட்டும் போனா, பேர் சொல்ல யார் வருவாங்க?

    மீண்டும் வந்து சொல்லிட்டுப் போங்க!

    நன்றி.

    ReplyDelete
  12. நான் தான் என் மருமவளுக்கு எக்கசக்கமா பேர் எழுதி அனுப்பி இருந்தேனே ஒன்னும் செட்டாகலையா ?
    கொஞ்சம் டைம் குடுங்க யோசிப்போம்
    நல்லா இருக்கா என் மருமவ
    மாமன் கண்ணுல ஒளிதெரியுதே

    ReplyDelete
  13. அண்ணே வாங்கண்ணே.. மருமகப் புள்ள உங்கள மாதிரி இல்லாம ரொம்ப அம்சமா இருக்காண்ணே.. நான் என்னமோ சர்க்கரை பத்தி சேதி சொல்ல போறீங்கன்னு நினைச்சேன்.. சர்க்கரைக் கட்டி படத்த இல்ல காட்டுறீங்க.. சக்கரைக்கட்டின்னே பேரு வச்சிடலாம் போலயே..

    இருங்கண்ணே.. ஒரு லிஸ்ட் அனுப்பறேன் என் பங்குக்கு..

    ReplyDelete
  14. //நான் தான் என் மருமவளுக்கு எக்கசக்கமா பேர் எழுதி அனுப்பி இருந்தேனே ஒன்னும் செட்டாகலையா ?
    கொஞ்சம் டைம் குடுங்க யோசிப்போம்
    நல்லா இருக்கா என் மருமவ
    மாமன் கண்ணுல ஒளிதெரியுதே//

    பாலா,

    உங்க மருமவளுக்கு அந்த பேருங்க எதுவும் பிடிக்கலையாம். இன்னும் யோசிங்க.
    (இப்பவே இவ்வளவு வேலை வாங்குறாளேன்னு சலிப்படையக் கூடாது.

    ReplyDelete
  15. //நான் என்னமோ சர்க்கரை பத்தி சேதி சொல்ல போறீங்கன்னு நினைச்சேன்.. சர்க்கரைக் கட்டி படத்த இல்ல காட்டுறீங்க.. சக்கரைக்கட்டின்னே பேரு வச்சிடலாம் போலயே..

    இருங்கண்ணே.. ஒரு லிஸ்ட் அனுப்பறேன் என் பங்குக்கு..//

    "லக்கலக்க",

    சக்கரைக்கட்டின்னு பேரு வைக்கலாம்தான்.ஈ, எறும்பு எல்லாம் மொய்க்க ஆரம்பிச்சிடுமே...அதான்.

    சரி சரி.சீக்கிரம் பெயர் பட்டியல் அனுப்பி வையுங்க. உங்க மருமவ அவசரப்படுறாஆஆஆஆஆஆஆஆ........!

    ReplyDelete
  16. வாங்கோ...வங்கோ சத்திரியன்.காதல் கவிதை எழுத துணைக்கு ஆளையே கூட்டிட்டு வந்திட்டீங்க.
    அசத்தல்தான்.அதிசயமும் கூட.குட்டிச் சத்திரியன் மாதிரியே அழகா இருக்கா செல்லம்.நானும் நீங்க கல்யாணம் செய்து கூட்டிவரப் போறீங்கன்னுதான் நினைச்சேன்.இண்ணைக்குத்தான் நானும் விடுமுறை விட்டு வந்திருக்கேன்.இது இன்ப அதிர்ச்சிதான்.
    வாழ்த்துக்கள் அப்பா அம்மா குழந்தை மூவருக்குமே.
    பெயர் கேட்டீங்க.சாரங்கி,சஹானா,சாமந்தி,சந்தியா.
    எனக்குப் பிடிச்ச பெயர்கள் இவை.

    கலாவும் வந்திட்டாங்கபோல.ஆனாலும் இனி நாங்க உங்களைக் கலாய்க்க மாட்டோம்.ஒரு அப்பாவைக் கலாய்க்கலாமோ !

    ReplyDelete
  17. http://www.indianchild.com/baby_name_indian_girl_c.htm

    சாதுர்யா
    சக்ரிகா
    சாமிகா
    சண்டிகா..
    சந்திரலேகா..
    சரித்ரா
    சாரு
    சாருணி
    சயனா
    சாயா
    சரண்யா
    சாதுரா

    இதெல்லாம் கொஞ்சம் ஷார்ட்டா இருக்கா... இத பாருங்க..

    சந்திரமுகி.. (லக்கலக்கலக்க)
    சந்திரப்ரியா (ஹிஹி)
    சாருப்ரியா (ஹிஹி)

    அண்ணே இதெல்லாம் சும்மா சஜசனு.. (இது பேரில்ல..).. நீங்க ஆத்துக்காரிட்ட அபிப்ராயம் கேளுங்கண்ணே முதல்ல..

    ReplyDelete
  18. //கலகலப்ரியா சொன்னது…
    இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்//

    கொக்கமக்கா... இது நான்தான் அகற்றினேன்.. :P

    ReplyDelete
  19. ஹெலோ ப்ரியா அவர் கேட்டது ச குறில் இல்ல சா நெடில்
    இன்னம் எதுனா இருந்தா அனுப்பி வைங்க

    ReplyDelete
  20. பார்த்தீங்களா கண்ணன் நம்மலோடதெல்லாம் சொந்த சரக்கு . அவங்க(கலலப்ப்ரியா ) வெப் சைட்ல தேடிருக்காங்க

    ReplyDelete
  21. யாருங்க இது.. நெடில் குறில் ரெண்டும்னுதான் சொன்னாப்ல.. நெட்ல தேடினா பேரில்லையா என்ன.. என்னமோ சொந்தமா பேரு கிரியேட் பண்ண மாதிரில்ல பீத்திக்கி கிறாய்ங்க... :-l (எஸ்கேப்பு...)

    //
    தொடக்க எழுத்து , "ச " அல்லது "சா " ஆங்கிலத்தில் எழுதும்பொழுது "CH" எனத் தொடங்கும்படி யோசித்துச் சொல்லுங்கள்.//

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் சத்ரியன்!எவ்வளவு சந்தோசம்...முகத்தில்!குட்டிம்மாவுக்கு என் அன்பு நிறையடா!

    ReplyDelete
  23. வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  24. குட்டி தேவதை சூப்பரா இருக்காங்களே நண்பா. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. பாலா, கலகலப்ரியா,

    நீங்க ரெண்டு பேருமே எம்மகளை மருமகள்னு சொன்னீங்க. அப்புறம் எதுக்கு சண்டை சச்சரவெல்லாம்?

    தெரியாமத்தான் கேக்குறேன்.உங்க இருவருக்கும் எம்மக தனித்தனியா மருமவளா? இருவருக்கும் பொதுவா மருமவளா?

    ReplyDelete
  26. //வாழ்த்துக்கள் சத்ரியன்!எவ்வளவு சந்தோசம்...முகத்தில்!குட்டிம்மாவுக்கு என் அன்பு நிறையடா!//

    வணக்கம் பா.ரா,

    முதலில் நன்றி. மட்டற்ற மகிழ்ச்சிதான். எங்கள் குலத்தின் முதல் கொடி.
    மகிழாமல் இருக்க முடியுமா? உங்கள் அனைவரின் அன்பின் செல்லம் தான் அவள்.

    பேர் எதுவும் சொல்லாமல் விட்டுட்டீங்களே!

    ReplyDelete
  27. //வாழ்த்துகள் நண்பரே//

    வணக்கம் திகழ்,

    நன்றி. உங்களைப் போன்ற தமிழ்ப்ப்ரியர்கள் எல்லாம் பெயர் சொல்லாமல் போனால், நான் ஒருத்தன் என்னதாம்ப்பா செய்யிறது? திரும்ப வந்து பேர் சொல்லிட்டுப் போங்க!

    ReplyDelete
  28. //குட்டி தேவதை சூப்பரா இருக்காங்களே நண்பா. வாழ்த்துக்கள்//

    நவாஸ்,

    நலமா? நன்றிப்பா. தேவதைக்கு பேர் சொல்லாமல் போயிட்டீங்களே.தேவதை கோவிச்சுக்கிட்டா என்ன செய்வீங்க. வாங்க...வந்து ஆரம்பிங்க!

    ஜமாலை எங்கே காணோம்?

    ReplyDelete
  29. சத்ரியன் கூறியது...

    //குட்டி தேவதை சூப்பரா இருக்காங்களே நண்பா. வாழ்த்துக்கள்//

    நவாஸ்,

    நலமா? நன்றிப்பா. தேவதைக்கு பேர் சொல்லாமல் போயிட்டீங்களே.தேவதை கோவிச்சுக்கிட்டா என்ன செய்வீங்க. வாங்க...வந்து ஆரம்பிங்க!

    ஜமாலை எங்கே காணோம்?
    ***********************************
    நான் ரொம்ப நல்லா இருக்கேன். அங்கே தேவதை வந்த பிறகு நிச்சயம் ஊரில் எல்லோரும் நலமுடன் இருப்பர்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.
    ***********************************
    Charulatha - சாருலதா

    Charupriya - சாருப்ரியா

    Chandra Priya - சந்ரப்ரியா

    மறுபடியும் வர்ரேன். அப்டேட் பண்றதுக்கு
    ***********************************
    ஜமால் நல்லா இருக்கான். நெட் தொடர்பு இல்லாததால் அவனால் வர இயலவில்லை. விரைவில் வருவான்

    ReplyDelete
  30. கல்யாணம் முடிச்சு வருவீங்கன்னு பாத்தா குழந்தையும் கையுமா வந்துருக்கீக...

    குழந்தை அழகா இருக்கு

    ReplyDelete
  31. //குட்டிச் சத்திரியன் மாதிரியே அழகா இருக்கா செல்லம்.நானும் நீங்க கல்யாணம் செய்து கூட்டிவரப் போறீங்கன்னுதான் நினைச்சேன். இது இன்ப அதிர்ச்சிதான்.வாழ்த்துக்கள் அப்பா அம்மா குழந்தை மூவருக்குமே.//

    ஹேமா,

    முதலில் நன்றி. செல்லம் அழகா இருப்பதாச் சொல்லி நானும் அழகா இருப்பதாக உணர்த்தியதற்கு.( நம்ம நண்பர்கள் சிலரது காதில் புகைவருவது உங்களுக்குத் தெரிகிறதா?)

    பெயர் கேட்டீங்க.சாரங்கி,சஹானா,சாமந்தி,சந்தியா.
    எனக்குப் பிடிச்ச பெயர்கள் இவை.//

    "சந்த்ரலேகா"‍ ‍‍‍ ‍, இது எனது மூத்த தங்கை தெரிவு செய்திருக்கும் பெயர். உங்களுக்குப் பிடிச்சிருக்கா? "சத்ரியா" என்பது எனது மனைவியின் தெரிவு.
    ஹேமா, உங்கள் சாய்ஸ்..?

    கலாவும் வந்திட்டாங்கபோல.ஆனாலும் இனி நாங்க உங்களைக் கலாய்க்க மாட்டோம்.ஒரு அப்பாவைக் கலாய்க்கலாமோ !

    இனிமேதான் நீங்க நிறைய கலாய்க்கனும்.சரியா?

    ReplyDelete
  32. //கல்யாணம் முடிச்சு வருவீங்கன்னு பாத்தா குழந்தையும் கையுமா வந்துருக்கீக...குழந்தை அழகா இருக்கு//

    வசந்த்,

    என்னோட கவிதையாலதான் நீங்க(நிறைய நண்பர்கள்) அப்படி யோசிச்சிருக்கீங்க. நான் காரணம் இல்லப்பா.

    நம்ம குழுவுலயே வசந்த் தான் நிறைய யோசிக்கிறவர்னு நம்பிக்கிட்டிருந்தேன். யோசிச்சு ஒரு பேர் கூட சொல்லாம போய்ட்டீங்களே.

    ReplyDelete
  33. //நான் ரொம்ப நல்லா இருக்கேன். அங்கே தேவதை வந்த பிறகு நிச்சயம் ஊரில் எல்லோரும் நலமுடன் இருப்பர்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.
    ***********************************
    Charulatha - சாருலதா, Charupriya - சாருப்ரியா ,chandhra Priya - சந்த்ரப்ரியா

    மறுபடியும் வர்ரேன். அப்டேட் பண்றதுக்கு////!
    **********************************************

    ஆமா நவாஸ்,

    வீட்டில் அனைவரும் நலமே! இன்னும் பெயர்களுடன் விரைந்து வாருங்கள்.

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் நண்பரே.. உலகத்திலேயே மிக அழகான பரிசு குழந்தைன்னு சொல்லுவாங்க. இப்படி ஒரு அற்புத பரிசை கொடுத்த அந்த கடவுளுக்கும், இந்த பரிசை பத்திரமா பாதுகாத்து உங்க கைகள்'ல கொண்டு வந்து சேர்த்த அந்த கருவறைக்கும் எப்பவும் நன்றி சொல்லிகிட்டே இருங்க.

    ***My Choices***

    சாந்தினி - Chaandhini
    சந்தனா - Chandhana
    சானஸ்வினி- Chanasvini
    சாமினி - Chamini
    சாவிகா - chaavika
    சஸ்வியா - chasviya
    சார்னிகா - Chaarnika
    சங்கினியா -changkiya
    சால்விகா - chaalvika
    சந்தவிழி - chandha vizhi

    ReplyDelete
  35. வாழ்த்துகள் கண்ணன்.

    இப்போதைக்கு ‘சந்திரலேகா’ அருமை.

    வேறு பெயர்களோடு விரைவில் வருகிறேன்.

    ReplyDelete
  36. சந்ரலேகா நல்லாயிருக்கு.கொஞ்சம் நீளமா இருக்குன்னு அப்புறமா சொல்லாம இருந்தா சரி.சத்ரியா ஓர் ஆணின் இறுக்கம் இருக்கிறது மாதிரி பெயரில்.மென்மை இல்லை.

    ReplyDelete
  37. //சத்ரியன் சொன்னது…

    பாலா, கலகலப்ரியா,

    நீங்க ரெண்டு பேருமே எம்மகளை மருமகள்னு சொன்னீங்க. அப்புறம் எதுக்கு சண்டை சச்சரவெல்லாம்?//

    அடங்கொக்கமக்கா... இதுக்கு பேரு சண்டைங்களாண்ணே.. ஒரு ஞாயத்த சொன்னா தப்புங்களாண்ணே.. :((.. அவ்வ்வ்வ்வ்வ் இதுக்குதான் லக்ஷ்மி பாட்டி அப்பவே சொன்னா.. யார நம்பினாலும் சகோதரங்கள நம்பாதடீன்னு.. கேட்டேனா.. நல்ல வேணும் நேக்கு..

    //தெரியாமத்தான் கேக்குறேன்.உங்க இருவருக்கும் எம்மக தனித்தனியா மருமவளா? இருவருக்கும் பொதுவா மருமவளா?//

    கேள்வி வில்லங்கமா இருக்குதுங்களே.. பாலண்ணே நீங்க யாருங்கண்ணே.. (அண்ணே கேள்வி தப்பா கேட்டுப்புட்டீக.. ஒரு புள்ளைய வச்சுக்கிட்டு தனித் தனியா மருமவளான்னு கேட்டா ஞாயமாண்ணே.. )

    ReplyDelete
  38. //இதுக்குதான் லக்ஷ்மி பாட்டி அப்பவே சொன்னா.. யார நம்பினாலும் சகோதரங்கள நம்பாதடீன்னு.. கேட்டேனா.. நல்ல வேணும் நேக்கு..//

    லக்கலக்க,
    யாருடா அது லக்ஷ்மி பாட்டி? அது அவங்க சகோதரங்கள நம்பாதடீன்னு சொல்லியிருக்கும்!

    //கேள்வி வில்லங்கமா இருக்குதுங்களே.. பாலண்ணே நீங்க யாருங்கண்ணே.. (அண்ணே கேள்வி தப்பா கேட்டுப்புட்டீக.. ஒரு புள்ளைய வச்சுக்கிட்டு தனித் தனியா மருமவளான்னு கேட்டா ஞாயமாண்ணே.. )//

    கவலைய விடு. அண்ணியிடம் சின்ன 'பர்மிஷன்' கேட்டுக்குங்க.....உனக்கும் ஒரு மருமவ.....!

    ReplyDelete
  39. //வாழ்த்துக்கள் நண்பரே.. உலகத்திலேயே மிக அழகான பரிசு குழந்தைன்னு சொல்லுவாங்க. இப்படி ஒரு அற்புத பரிசை கொடுத்த அந்த கடவுளுக்கும், இந்த பரிசை பத்திரமா பாதுகாத்து உங்க கைகள்'ல கொண்டு வந்து சேர்த்த அந்த கருவறைக்கும் எப்பவும் நன்றி சொல்லிகிட்டே இருங்க.

    ***
    நிச்சயமா க.கா,
    அருமையானப் பெயர்ப்பட்டியல் அளித்தமைக்கு எங்கள் 'குட்டி' சார்பாக மிக்க நன்றி.

    ReplyDelete
  40. //இப்போதைக்கு ‘சந்திரலேகா’ அருமை.

    வேறு பெயர்களோடு விரைவில் வருகிறேன்.//

    ஜமால்,

    என் பெண்ணிற்கு 'தாய்மாமன்' ‍னு சொல்லிட்டு, பிறகு வ்ர்றேன்னா என்ன அர்த்தம்?

    ReplyDelete
  41. //சந்ரலேகா நல்லாயிருக்கு.கொஞ்சம் நீளமா இருக்குன்னு அப்புறமா சொல்லாம இருந்தா சரி.சத்ரியா ஓர் ஆணின் இறுக்கம் இருக்கிறது மாதிரி பெயரில். மென்மை இல்லை.//

    ஹேமா,

    உங்களின் தேர்வு தான் சரியாக இருக்கும். (குட்டியோட தாய்மாமன் கோவிச்சுக்கப் போறார்)

    தேவதைக்குப் பெயர் சூட்டும் பெருவிழாவில் எப்படி கலந்துக்கொள்ளப் போகிறீர்கள்?

    ReplyDelete
  42. எங்களின் தேவதைக்குப் பெயர் தேடிய அனைத்து நண்பர்கள், நண்பிகளுக்கும் அன்பு கலந்த நன்றி நன்றி நன்றி....!

    ReplyDelete
  43. Sachi (wife of Lord Indra)
    Sadaf (pearl)
    Sadgati (liberation)
    Sadguna (good virtues)
    Sadhan (fulfulment)
    Sadhana (worship)
    Sadhvi (virtuous woman)
    Sadhika (achiever)
    Sadiqua (kindly)
    Saeeda (priestly)
    Safia (chaste)
    Sagarika (wave; born in the ocean)
    Saguna (possessed of good qualities)
    Sahana (a raga)
    Saheli

    ReplyDelete
  44. Sai (a flower)
    Sajala (clouds)
    Sajili (decorated)
    Sajni (beloved)
    Sakhi (friend)
    Sakina (friend)
    Salena (the moon)
    Salila (water)
    Salima (happy)
    Salma (peace)
    Samata (equality)
    Sameena (happy)
    Samhita (a vedic omposition)
    Samidha (an offering for a sacred fire)
    Samiksha (overview)
    Samit (collected)
    Samita

    ReplyDelete
  45. Samita (collected)
    Sampada (wealthy)
    Sampatti (wealth)
    Sampriti (attachement)
    Sana (praise, prayer)
    Sananda (happy)
    Sanchali (movement)
    Sanchaya (collection)
    Sanchita (collection)
    Sandhaya (collection)
    Sandhya (dusk, twilight)
    Sangita (musical)
    Saniya (moment)
    Sanjana (gentle)
    Sanjivani (immortality)
    Sanjukta (wife of king prithviraj)
    Sanjula (beautiful)
    Sanjushree (beautiful)

    ReplyDelete
  46. Sankul (full of)
    Sannidhi (nearness)
    Sanvali (dusky)
    Sanskriti (culture)
    Santawana (consolation)
    Santayani (of the evening)
    Sanwari (dusky)
    Sanyakta (joined; united)
    Saparna (leafy)
    Sarada (Goddess Saraswati)
    Sarakshi (good sight)
    Sarala (straight; honest)
    Sarama (wife of Bibhisan)
    Saranya (surrendered)
    Sarasi (lake)
    Saraswati (goddess of learning)
    Sarayu (a holy river)
    Sarbani (Goddess Durga)
    Sarika (a koel)
    Sarit (river)
    Sarjana (creative; creation)
    Saroj (lotus)

    ReplyDelete
  47. Saroja (lotus)
    Sarojini (lotus)
    Saruprani (beautiful woman)
    Sasmita (smiling)
    Sati (chaste woman)
    Satya (truth)
    Satyaki (one who is truthful)
    Satyarupa (truth; personified)
    Satyavati (truthful)
    Saudamini (lightning)
    Savita (the sun)
    Savitashri (lustre of the sun)
    Savitri (a river; Goddess Saraswati)
    Sawini (a river)
    Sayeeda (leader)
    Seema (boundary)
    Seemanti (parting line)
    Seemantini (woman)
    Seerat (inner beauty; fame)
    Sejal (river water)
    Selma (fair)
    Semanti (a white rose)
    Serena (quiet)
    Sevati (white rose)
    Sevita (cherished)
    Shabab (beauty)
    Shabana (decorated)
    Shabari (a tribal devotee of Lord Rama)
    Shabnum (sew)
    Shachi (wife of Lord Indra)
    Shagufta (flowering)
    Shaheena (tender)
    Shabalini (a mossy)
    Shaila (Goddess Parvati)
    Shaili (style)
    Shakambari (Goddess Parvati)
    Shakeel (handsome)
    Shakeela (beautiful)
    Shakti (Goddess Durga; power)
    Shakuntala (brought up by birds)
    Shalaka (Goddess Parvati)
    Shalin (silk-cottom tree)
    Shalini (modest)
    Shalmali (silk-cottom tree)
    Shama (a flame)
    Shambhavi (Goddess Parvati)
    Shamim (fire)

    ReplyDelete
  48. Shanta (peaceful; daughter of kind Dasarath)
    Shantala (Goddess Parvati)
    Shanti (peace)
    Sharadini (autumn)
    Sharanya (surrender)
    Sharmila (happy)
    Sharika(Goddess Durga)
    Sharmistha (wife of Yayat)
    Sharvani (Goddess Parvati)
    Sharvari (the night)
    Shashi (the moon)
    Shashibala (the moon)
    Shashirekha (moon's ray)
    Shaswati (eternal)
    Shatarupa (Lord Shiva)

    ReplyDelete
  49. Sheela (cool)
    Sheetal (cool)
    Shekhar (Lord Shiva)
    Shefali (a flower)
    Shefalika (a flower)
    Shejali (a fruit)
    Shinjini (anklebells)
    Shishirkana (particles of dew)
    Shevanti (a flower)
    Shibani (Goddess Durga)
    Shilavati(a river)
    Shilpa (well-proportioned)
    Shilpita (well- proportioned)
    Shipra (a river)
    Shirin (sweet)
    Shiuli(a flower)
    Shivangi (beautiful)
    Shivani (Goddess Parvati)
    Shobhita (splendid)
    Shobha (splendour)

    ReplyDelete
  50. Shobhana (splendid)
    Shorashi (young woman)
    Shraddha (veneration)
    Shravana, Shrabana (name of a star)
    Shravani (born in the month of Shravan)
    Shravanti (a name in Buddhist literature)
    Shravasti (an ancient Indian city)
    Shree (Goddess Lakshmi)
    Shreela (beautiful)
    Shreemayi (fortunate)
    Shreeparna (tree adorned with leaves)
    Shreya (better)
    Shreyashi (good)
    Shridevi (goddess)
    Shri (lustre)
    Shrilata (lustrious creeper)
    Shrilekha (lustrious essay)
    Shridula (blessing)
    Shrigauri (goddess Parvati)
    Shrigeeta (the sacred Geeta)
    Shrijani (creative)
    Shrikirti (lustrous fame)
    Shrikumari (lustrious)
    Shrimati (Goddess lakshmi; fortunate)
    Shrimayi (fortunate)
    Shrivalli (Goddess Lakshmi)
    Shruti (hearing; Veidc text)
    Shubhada (giver of luck)
    Shubhangi (handsome)
    Shubhra (white; the Ganga)
    Shuchismita (one who has a pure smile)
    Shuchita (purity)
    Shukla (Goddess Saraswati)
    Shukti (pearl-oyster)
    Shulka (Goddess Saraswati)

    ReplyDelete
  51. Shweta (white)
    Shyama (dark as cloud; Goddess kali)
    Shyamal (dusky)
    Shyamala (dusky)
    Shyamali (dusky)
    Shyamalika (dusky)
    Shyamalima (dusky)
    Shyamasri (dusky)
    Shyamari (dusky)
    Shyamlata (a creeper with dusky leaves)
    Shyla (Goddess parvati)
    Shyamangi (dark-complexioned)
    Sibani (goddess parvati)
    Siddheshwari (Lord Shiva)
    Siddhi (achievement)
    Siddhima (achievement)
    Sikata (sand)
    Sikta (wet)
    Simrit, Smrita (remembered)
    Simran, Smaram (remembrance)
    Sindhu (ocean; river)
    Sinsapa (Ashok tree)
    Sita (wife of Lord Rama)
    Sitara (a star)
    Siya (Sita)
    Smita (smiling)
    Smriti (memory)
    Sneha (affection)
    Snehal (friendly)
    Snehalata (creeper of love)
    Snigdha (soft)
    Sohalia (moon-glow)
    Sohni (beautiful)
    Soma (moon-rays)
    Somalakshmi (lustre of the moon)
    Somansh (half moon)
    Sona (gold)
    Sonal (golden)
    Sonali (golden)
    Sonakshi (golden-eyed)
    Sonika (golden)
    Soorat (beauty)
    Soumya (handsome)
    Sourabhi (fragrance; the celestial cow)
    Sristi (creation)
    Sridevi, Sreedevi (Goddess Lakshmi)
    Stavita (praised)
    Stuti (praise)
    Subarna (of the colour of gold)
    Subhadra (source of great welfare)
    Subhagya (lucky)
    Subhashini (well-spoken)
    Subrata (devoted to what is right)
    Suchandra (beautiful)
    Sucharita (of good character)
    Sucheta (with a beautiful mind)
    Suchi (radiant)
    Suchira (tasteful)
    Suchita (beautiful)
    Suchitra (beautiful)
    Sudakshima (wife of king Dilip)
    Sudarshana (handsome)
    Sudeepa (bright)
    Sudeepta (bright)
    Sudeshna (wife of king Virata)
    Sudha (nectar)
    Sudhamayi (full of nectar)
    Sudhira (calm)
    Sudipta (bright)
    Sudipti (brightness)
    Sugita (beautifully sung)
    Sugouri (Goddess Parvati)
    Suhag (love)
    Suhaila (moon-glow)
    Suhasini (ever-smiling)
    Suhina (beautiful)
    Suhrita (well-disposed)
    Sujala (affectionate)
    Sujata (well-bred)
    Sujaya (victory)
    Sukanya (comely)
    Sukeshi (with beautiful hari)
    Sukriti (good deed)
    Sukumari (soft; meritorious)
    Sulabha (easy; natural)
    Sulakshana (well brought up)
    Sulalita (very pleasing)
    Sulekh (beautifullY)
    Suloch (one with beautiful eyes)
    Sulochana (one with beautiful eyes)
    Sultana (queen)
    Sumana (flower)
    Sumanolata (flowery)
    Sumati (wisdom)
    Sumedha (wise)
    Sumita (a good friend)
    Sumitra (name of the mother of Lakshmana)
    Sunanda (very pleasing)
    Sunandini (happy)
    Sunandita (happy)
    Sunayana (a woman with lovely eyes)
    Sunayani (a woman with lovely eyes)
    Sundari (beautiful)
    Sundha (a character in Ramayana)
    Suneeti (mother of Dhruva)
    Sunetra (one with beautiful eyes)
    Sunila (blue)
    Suniti (good principles)
    Suparna (leafy)
    Suprabha (radiant)
    Supriti (true love)
    Supriya (beloved)
    Suraksha (protection)
    Surama (very pleasing)
    Surekha (beautifully drawn)
    Suranjana (pleasing)
    Surina (a goddess)
    Suruchi (good taste)
    Surina (a goddess)
    Suryakanti (suns's rays)
    Sushanti (peace)
    Sushila (well-behaved)
    Sushama (beauty)
    Sushobhana (very beautiful)
    Susita (white)
    Susmita (smiling)
    Sutanuka (beautiful)
    Sutapa (seeker of God)
    Suvarna (golden)
    Suvarnmala (golden necklace)
    Suvarnaprabha (lustre of gold)
    Suvarnarekha (ray of gold)
    Swagata (welcome)
    Swaha (wife of Agni; the lord of the fire)
    Swapna (dreamlike, dream)"
    Swapnali (dreamlike)
    Swapnasundari (dream girl, woman of dreams)
    Swarnalata (lustrous)
    Swarupa (truth)
    Swasti (name of a star)
    Swati (name of a star)


    intha namele ethavathu pudichi irukanu anni ketta kelunga pudikalanu sonna marupadium oru list anupuren ok

    ReplyDelete
  52. காயத்ரி,

    இவ்ளோ தானா?

    நான் இன்னும் எதிப்பார்க்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  53. nejama innum venumna solluga anupa naan ready padikka neenga readya

    ReplyDelete
  54. ஆஹா... குட்டி தேவதை அழகாக இருக்கிறார்கள் சத்ரியன்! :)

    வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள் புதிய வரவிற்கு....

    இனிமே எப்பவுமே வரவு தான்.....குடுத்து வச்சவரு....

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  56. //வாழ்த்துக்கள் புதிய வரவிற்கு....

    இனிமே எப்பவுமே வரவு தான்.....குடுத்து வச்சவரு....

    வாழ்த்துக்கள்//

    வாங்க ஆ.வி.,

    வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றி.

    (இந்திய அரசியல் கட்சிகளின் "கனவு" பற்றி உங்களின் கவிதைப் படித்தேன். சிறப்பான சுட்டிக்காட்டல் தான். நம் சொரணையற்ற மக்கள் தான் ரூ.500 ஐப் பெற்றுக்கொண்டு ஆட்சியைக் கொடுத்து விடுகிறார்களே.)

    ReplyDelete
  57. ம்ம்ம்...எப்படியோ மிஸ் பண்ணீட்டேன் இந்த வாய்ப்பை!

    ReplyDelete
  58. உங்கள் தேவதை நடக்கும் பாதை ஆசிர்வதிக்கப் பட்டதாகட்டும்.

    ReplyDelete
  59. அன்பின் சாரலின்பாவிற்கு வருகிற 13ம் நாள் பிறந்த நாள் விழா விமரிசையாகக் கொண்டாடவும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.