Oct 12, 2009

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்




வாருங்கள் ,

சகோதர சகோதரிகளே,
மாமன் மச்சான்களே,
பாசமுள்ள மச்சினிகளே,(யாரும் இல்லையா?)


இனிப்பை எடுத்துக்கொள்ளுங்கள் .

இனிப்புச் சுவையுடன்,
எங்கள் ...ம்ம்ஹூம் .... நம் குட்டி தேவதைக்கு ,

பெயர்ச் சூட்டி விடலாம். சூட்டும் முன்,

அ). சாரலினியா, (சாரல் இனியா )
ஆ). சாரலின்பா (சாரல் இன்பா)



மேற்கண்ட இரண்டில் (உங்களுக்கு மிகவும் பிடித்த) ஒரு பெயரைக் குறிப்பிட்டு பின்னூட்டமிடவும்.



"எப்பதான் எனக்கு பேர் சூட்டப் போறீங்கப்பா?" -ன்னு நாள்தோறும் என்னைத் தூங்கவிடாமல் துவம்சம் செய்கிறாள்.

பெரும்பான்மையோருக்குப் பிடித்த பெயரைச் சூட்டலாம் என்று காத்திருக்கிறோம்.

பெயரினைத் தெரிவு செய்ய உதவிய இணையதளம் நம் விடுதலைப் புலிகளின் " நிதித்துறை.காம்" .

குறிப்பு:-
இதற்கு முன்னையப் பதிவிற்கு பின்னூட்டமாக ஏராளமான பெயர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறவினர்கள் அனைவருக்கும் நன்றி.

37 comments:

  1. நான் தான் முதலில் இனிப்பு எடுக்கிறேனா.
    நானும் ஒரு அத்தைதானே !

    சத்ரியன் சாரலின்பா (சாரல் இன்பா) இன்பமாய் இனிமையாய் இருக்கு என் செல்லத்துக்கு.

    ReplyDelete
  2. //நான் தான் முதலில் இனிப்பு எடுக்கிறேனா.
    நானும் ஒரு அத்தைதானே !//

    ஹேமா,
    எனக்கா?

    //சத்ரியன் , சாரலின்பா (சாரல் இன்பா) இன்பமாய் இனிமையாய் இருக்கு என் செல்லத்துக்கு.//
    (ஹேமவின் பேத்திக்கு)

    சற்றுமுன் கிடைத்த தகவல்படி, "சாரலின்பா" முதலிடத்தில் இருக்கிறது.

    ReplyDelete
  3. அண்ணே.. ஸ்வீட் எடுத்துக்கிட்டேன்.. ரெண்டும் நல்லா இருக்குண்ணே.. இப்டி நீஈளமா பேரு வைக்க உங்களுக்கெல்லாம் யார் ரைட் கொடுத்ததுன்னு மருமவப்புள்ள கேட்டா.. என் பேர சொல்லிடாதீங்கண்ணே... ஜூட்..

    ReplyDelete
  4. சாரலினியா - இது ரொம்ப பெட்டரா இனிமையா, மென்மையா இருக்கு நண்பா!

    ReplyDelete
  5. உதை.நான் சாரல் குட்டிக்குத்தான் அத்தை.
    வளரட்டும் சொல்லித் தரேன் உங்க சேட்டையெல்லாம்.
    என்னை இப்பிடி ஆக்கிட்டீங்களே சத்ரியன்.

    ReplyDelete
  6. //ரெண்டும் நல்லா இருக்குண்ணே.. இப்டி நீஈளமா பேரு வைக்க உங்களுக்கெல்லாம் யார் ரைட் கொடுத்ததுன்னு மருமவப்புள்ள கேட்டா.. என் பேர சொல்லிடாதீங்கண்ணே... ஜூட்..//

    லக்கலக்க,

    மருமவளிடம் சொல்லனும்னு சொல்றீங்க. கண்டிப்ப்ப்ப்ப்பா சொல்லிடறேம்ப்பா.
    (ரெண்டையுமா வெக்கலாம்?)

    ReplyDelete
  7. //சாரலினியா - இது ரொம்ப பெட்டரா இனிமையா, மென்மையா இருக்கு நண்பா!//

    நவாஸ்,

    அன்பா "சாரலினியா"‍ விற்கு வாக்களித்து (ஹேமாவிற்கு எதிராக) சமன் படுத்தியிருக்கிறார்.

    ReplyDelete
  8. //உதை.நான் சாரல் குட்டிக்குத்தான் அத்தை.
    வளரட்டும் சொல்லித் தரேன் உங்க சேட்டையெல்லாம்.
    என்னை இப்பிடி ஆக்கிட்டீங்களே சத்ரியன்.//

    ஹேமா,

    வீட்டிற்கு வந்தா குடுத்துட்டுப் போங்க.இப்படி வலை(வெளி)யில எல்லாமா சொல்றது?(படிக்கிறவங்க என்ன நெனைப்பாங்க? குறிப்பா கலா.!!!)

    சாரல் குட்டிக்குத்தானா? என்னை ரொம்ப நல்லவன்னு நம்பி வந்து எங்கள் வீட்டில் பொறந்திருக்கா. போட்டுக்குடுக்கிற வேலையெல்லாம் வேண்டாம்.

    ReplyDelete
  9. :) நன்றி !

    தங்கள் மகள் "சாதனை செல்வி" யாக வாழ்த்துகள்.
    நான் நினைத்திருந்தப் பெயர் இது தான். வெற்றி செல்வி போல சாதனை செல்வி.

    சாதனை என்ற அடைமொழியுடன் எந்த தமிழ் பெயரையும் சேர்க்கலாம்.

    சாதனையாள், சாதனை தேன்மொழி, சாதனை திருமகள் ...இப்படியாக

    ReplyDelete
  10. ரெண்டும் நல்லா இருக்கு சத்ரியன்!(இங்கிட்டு,சகோதரி.அங்கிட்டு நண்பன்.யாரை விடுவது?..)

    குட்டிம்மாவுக்கு என் அன்புடா!

    ReplyDelete
  11. முந்திகிட்டியே ஹேமா! முந்திகிட்டியே

    சரி சரி நானும் உன் கட்சி தான்

    இன்பமான சாரல் தான்.

    ReplyDelete
  12. சாரலின்பா

    எனக்கு இந்த பெயர் தான் ரொம்ப பிடிச்சி இருக்கு!

    குழந்தைக்கு இந்த அத்தையின் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. சாரலினியா நல்லா இருக்கு .!

    ReplyDelete
  14. //தங்கள் மகள் "சாதனை செல்வி" யாக வாழ்த்துகள்.//

    வாங்க கோவி,

    வாழ்த்துகளுக்கு "சாரலின்பா"‍ வின் நன்றிகள்.

    இனிப்பு எடுத்துக்கலையோ?

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நண்பரே!

    //நட்புடன் ஜமால் கூறியது...
    முந்திகிட்டியே ஹேமா! முந்திகிட்டியே

    சரி சரி நானும் உன் கட்சி தான்

    இன்பமான சாரல் தான்.//

    எனது ஓட்டும்!

    ReplyDelete
  16. //ரெண்டும் நல்லா இருக்கு சத்ரியன்!(இங்கிட்டு,சகோதரி.அங்கிட்டு நண்பன்.யாரை விடுவது?..)

    குட்டிம்மாவுக்கு என் அன்புடா!//

    வணக்கம் பா.ரா,

    ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....பப் பிடிச்சதுன்னு ஒன்னு இருக்கும் இல்லியா? அது வேணும். மறுபடியும் வந்துட்டுப் போங்க.( உங்க சகோதரிய விட்டுக்கொடுக்க மனசு வராதே.! அவிய்ங்க ப்ளாக்ல என்ன "கிழ"ன்னு சொல்றாங்க பாஸ்..!)

    ReplyDelete
  17. //முந்திகிட்டியே ஹேமா! முந்திகிட்டியே

    சரி சரி நானும் உன் கட்சி தான்

    இன்பமான சாரல் தான்.//

    யோவ் மாப்ஸ் ஜமால்,

    தாய்மாமன் வர்ற நேரமாய்யா இது?

    ReplyDelete
  18. சாரலினியா nalla iruku

    ReplyDelete
  19. //சாரலின்பா

    எனக்கு இந்த பெயர் தான் ரொம்ப பிடிச்சி இருக்கு!

    குழந்தைக்கு இந்த அத்தையின் வாழ்த்துக்கள்!//

    வண‌க்கம் ரம்,

    உங்களின் ஓட்டுக்கு நன்றிங்க அத்தை! (சாரலின்பா ...சொன்னதுப்பா....!)

    ReplyDelete
  20. //சாரலினியா நல்லா இருக்கு .!//

    வணக்கம் ஜீவன்,

    உங்களுடைய ஒட்டுக்கும் நன்றி. முதல்முறையா வந்திருக்கீங்க, இனிப்பு எடுத்துக்குங்க மாமா...! (இப்பவும் சாரலினியா சொறாங்கப்பா)

    ReplyDelete
  21. //இன்பமான சாரல் தான்.//

    எனது ஓட்டும்!//

    வாங்க ஷ:.பி,

    ஜமால் ஏதும் ...பயமுறுத்துனாரா?

    நன்றி.

    ReplyDelete
  22. திகழும் நம்ம கட்சி தான்

    மாற்று கருத்துகளுக்கு இடமில்லை

    மருமகளுக்கு ‘சாரலின்பா’ தான் ...

    ReplyDelete
  23. /சாரலின்பா//

    வணக்கம் திகழ்,

    நீண்ட பெயர்ப்பட்டியல் உங்களிடமிருந்து எதிர்ப்பார்த்திருந்தேன். ஏமாத்திட்டீங்க.
    ("சாரலின்பா" தூயத்தமிழ் தானே?.இல்லாம போச்சுன்னா, என்னை திட்றதுக்குன்னே ஒரு கூட்டம் மேடைப் போட்டுட்டு அலையுறாய்ங்க)

    ReplyDelete
  24. ("சாரலின்பா" தூயத்தமிழ் தானே?.இல்லாம போச்சுன்னா, என்னை திட்றதுக்குன்னே ஒரு கூட்டம் மேடைப் போட்டுட்டு அலையுறாய்ங்க)]]

    சும்மா விட்டுறவமா என்னா ....

    ReplyDelete
  25. //சாரலினியா nalla irukku.//

    வணக்கம் காயு,

    இன்னிக்கி முழு நாளும் எனக்கு பேர் தேடுவதும், தேர்ந்தெடுப்பதுமே வேலையாப் போச்சி.

    ஆனாலும் பலன் கிடைச்சிருச்சி....!(ஜமால் காயு சொல்றதையும் கொஞ்சம் கேட்டுக்கப்பா)

    ReplyDelete
  26. மறு பேச்சுக்கே வேலையில்லை

    பெயர் தெரிவு இத்துடன் முடிவடைந்தது

    வரும் அத்தைகளும் மாமர்களும்

    இனிப்பு எடுத்து கொண்டு பெயர் சொல்லி வாழ்த்திட்டு போகவும்

    சாரலின்பா

    ReplyDelete
  27. நான் தேர்ந்து
    கொடுத்த ஒரு பெயரையும் நீங்கள் தேர்ந்தெடுக்காததால் நான் வெளி நடப்பு
    செய்யவேண்டும் .ஆனால் என் மருமவளுகாக செய்யல .
    சாரலினியா நல்லா இருக்கே

    ReplyDelete
  28. சாரலினியா நல்லா இருக்கே]]

    அதுக்கு மேலே உள்ள கமெண்ட் பார்க்கலையா பாலா ...

    ReplyDelete
  29. இவ்வளவு கஷ்ரப்பட்டு பெயர்
    தெரிவுசெய்து கொடுத்தால்.........
    செய்தது நியாயமா?பரவாயில்லை
    ஏனென்றால்,...பெயர் கொடுத்துதவிய
    இணையத்தளத்துக்காக மரியாதை
    கொடுத்து மன்னிப்போமா!!ஆம்.

    எனக்கு படத்தில் காட்டி எடுக்கச்
    சொல்லும் இனிப்பெல்லாம் வேண்டாம்.
    நேரில் கொடுத்தால்தான் ஏற்றுக்கொள்வேன்
    ஆமா எங்கு?எப்படி?என்னைக் கண்டு
    பிடிப்பீர்கள் ?? அது உங்கள் வேலை உங்கள்
    திறமை .

    என்ன நினைத்திருக்கிறீகள் எங்க ஹேமாவைப்
    பற்றி பாவம் சின்னப் பொண்ணு அப்படியெல்லாம்
    பயமுறுத்த வேண்டாம்.
    ஹேமா நான் கறுப்பு பட்டிவரை எடுத்திருக்கின்றேன்
    அதனால் பயப்படாமல் இருவரும் ஒரு கை பார்க்கலாம்.
    நானிருக்க...பயமேன்!!

    அழகான பெயர் சாரலின்பா இத்தனை அன்பர்கள்,நண்பர்கள்
    வாழ்த்துகள் கிடைத்த உங்கள் மகள் ரொம்ப அதிஷ்ரசாலி
    என்னோட அன்பும்.பிராத்தனையும் வாழ்த்தும் எப்போதும்
    உண்டு. மிகமிக முக்கியமானதை மறந்துவிட்டேனே!
    நீங்களாவது சொல்லுங்கள்.........நான் செல்லத்துக்கு
    என்ன முறை?செல்லம் எனக்கு என்ன முறை??........???

    ReplyDelete
  30. //என்ன நினைத்திருக்கிறீகள் எங்க ஹேமாவைப்
    பற்றி பாவம் சின்னப் பொண்ணு ..//

    கலா,

    நானும் அப்படித்தான் நெனைச்சிருக்கேன்.
    (ஹேமா தான் என்னை "கிழம்"‍ன்னு சொல்லிட்டாங்க....அவ்வ்வ்வ்வ்)

    //ஹேமா நான் கறுப்பு பட்டிவரை எடுத்திருக்கின்றேன்
    அதனால் பயப்படாமல் இருவரும் ஒரு கை பார்க்கலாம்.
    நானிருக்க...பயமேன்!!//

    சரிசரி.அதென்ன அல்பத்தனமா ஒரு கை...? ரெண்டு கையுமே தாராளமா பாருங்க. ஆனா, கிரக சஞ்சாரங்களைச் சரியாச் சொல்லிறனும்.

    //அழகான பெயர் சாரலின்பா இத்தனை அன்பர்கள்,நண்பர்கள்
    வாழ்த்துகள் கிடைத்த உங்கள் மகள் ரொம்ப அதிஷ்ரசாலி
    என்னோட அன்பும்.பிராத்தனையும் வாழ்த்தும் எப்போதும்
    உண்டு.//

    நன்றி.

    // மிகமிக முக்கியமானதை மறந்துவிட்டேனே!
    நீங்களாவது சொல்லுங்கள்.........நான் செல்லத்துக்கு
    என்ன முறை?செல்லம் எனக்கு என்ன முறை??........???//

    ஹேமாவுக்குத்தானே துணைப்போறீங்க. அவங்களேச் சொல்லுவாங்க.

    ReplyDelete
  31. செல்லம் சாரலின்பா

    உங்கப்பாரு இன்னும் ஒரு முடிவெடுக்காம இருக்காப்ல அதான் இன்னிக்கே நல்ல நேரத்துல நானே பேர் வச்சுட்டேன்.... ஸ்வீட்டும் எடுத்துக்கிட்டேன்....வர்ட்டா

    ReplyDelete
  32. //செல்லம் சாரலின்பா

    உங்கப்பாரு இன்னும் ஒரு முடிவெடுக்காம இருக்காப்ல அதான் இன்னிக்கே நல்ல நேரத்துல நானே பேர் வச்சுட்டேன்.... ஸ்வீட்டும் எடுத்துக்கிட்டேன்....வர்ட்டா//

    வசந்த்,

    கடைசியா வந்தமா, கிடைச்சத எடுத்துக்கிட்டமா, போனோமா‍- ன்னு இருக்கப்பிடாது. முத ஆளா வந்திருந்து வர்ற போறவங்கள கவனிச்சி நிகழ்ச்சிய சிறப்பாக்கி விட்டு கடைசி ஆளா பொறப்படனும்.(உங்க வீட்டு நிக‌ழ்ச்சிக்கு சுடுதண்ணிய கால்ல ஊத்திக்கிட்டு வந்து நின்னா எப்படிங்கறேன்?)

    அந்த விசயத்துல ஹேமா தான் சிறப்பு.

    ReplyDelete
  33. என்னப்பா... நான்தான் கடைசி ஆளா?
    "சாரலினியா" நல்லயிருக்குனு தோனுது. வச்சுருங்கபா..... என்ன சரியா... வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  34. பெண்ணுக்கு பேர் வைக்க வாக்கெடுப்பு நடத்தறது நீங்க ஒருத்தராதான் இருக்குன்னு நினைக்கிறேன், 'சாரலினா' ன்ற பெயர நாமினேஷன் பண்ணுங்க, (சுயேச்சையா,,,?)

    இன்பாக்கு ஏற்கனவே காப்பி ரைட் வாங்கியாச்சு, அதனால ஒரு எழுத்த குறைச்சிட்டு 'சாரலினா' என்று செல்லமா வைங்க....நீளமாகவும் இல்லை அழகான பெண்ணுக்கு பொருத்தமாவும் இருக்கும் ...

    ReplyDelete
  35. //என்னப்பா... நான்தான் கடைசி ஆளா?
    "சாரலினியா" நல்லயிருக்குனு தோனுது. வச்சுருங்கபா..... //

    ஆ.ஞானசேகரன்,

    இன்னும் நம்ம சொந்தபந்தங்க வரவேண்டியிருக்கு.அதனால கடைசி ஆளு நீங்க இல்ல.கவலைய விடுங்க. (இன்பா புதுசா ஒரு பேரு சொல்லியிருக்காங்க...கவனிச்சிங்களா?)

    ReplyDelete
  36. //'சாரலினா' ன்ற பெயர நாமினேஷன் பண்ணுங்க, (சுயேச்சையா,,,?)

    இன்பாக்கு ஏற்கனவே காப்பி ரைட் வாங்கியாச்சு, அதனால ஒரு எழுத்த குறைச்சிட்டு 'சாரலினா' என்று செல்லமா வைங்க....நீளமாகவும் இல்லை அழகான பெண்ணுக்கு பொருத்தமாவும் இருக்கும் ..//

    இன்பா,

    நன்றிப்பா... புதுசா ஒரு பேரு சொன்னதுக்கு.

    முதல்லயே உங்கள கேட்டிருக்கனும் தான். "காப்பிரைட்" வேற வாங்கியாச்சுன்னு கலவரப்படுத்துறீங்க.

    சொந்தபந்தங்க எல்லாரும் திரும்பவும் வாங்க(ம்மா)ப்பா. இன்பா மட்டும் சுயேச்சையா நிக்கிறாய்ங்க. ஆதரவு கொடுங்கப்பா.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.