Jul 18, 2009

நெடுங்காதல்



ஒதுக்கப்பட்ட நபர் போல்
ஊருக்கு வெளியே உள்ள
புங்க மரத்தடியில்
ஒற்றையாய் அமர்ந்திருந்தேன்.

சிறகு
உதிர்ந்த
ஈசல் போல்
சிதறிக் கிடந்தது
புங்க மரத்துப் பூக்களும்

எப்போதோ
நாம்
சிரித்துப் பேசியச் சொற்களும் ...!

2 comments:

  1. சத்ரியன்,படமும் கவிதையின் வலிக்கும் வரிகளும் அருமை.

    ReplyDelete
  2. //சிறகு உதிர்ந்த
    ஈசல் போல்!!!//
    அட!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.