
காற்றோடு பேசுகிறேன்
காற்றில் தேடுகிறேன்
இப்பொழுதெல்லாம்
புவிஈர்ப்பு விசைக்கு என்னை
பிடிப்பதில்லை
ஆகாச வானுக்கும்
அப்படித்தான் போலும்!
மரக்கிளையில் காகங்கள்
இலைமறைவில் குயில்கள்
அதனதன் மொழியில் - என்
அந்தரங்கம் பற்றியே
பேசுவது போல் ...
மாமர நிழலில்
நானிருந்தாலும்
தொலைதூரத் தென்னை
எனக்காய்
சாமரம் வீசுவது போல்...
உனைக்காண
காத்திருக்கும் நேரத்தில்
என் கடிகாரத்தின்
நொடிமுள் கூட
மணிமுள் வேகத்தில்
சுழல்வது போல்...
எல்லாம்
காதல்
வந்த நாள் முதல்...!
சத்ரியன்,சரி...சரி.ஆஹா வந்திருச்சு ஆசையில் ஒடி வந்தேன்னு பாட்டுக் கேக்குது உங்க பதிவில.
ReplyDelete//நொடிமுள் கூட
ReplyDeleteமணிமுள் வேகத்தில்
சுழல்வது போல்...//
நல்லாருக்கு!
அறக்கட்டளைக்கு இணைப்பு தந்தமைக்கு நன்றி. இன்றுதான் பார்த்தேன்.
ReplyDelete