Jul 27, 2009

பெண்



உளி வேண்டாம்
ஒரு
துளி மட்டும்
உன்னிடம்
தந்தால் போதும்

உயிர்ச்சிலை
செய்து தரும்
அதிசய சிற்பி நீ!

என்னிடம்
இறைவனை விடவும்
உயர்நிலை
உனக்குத்தான் .

உலகையும்
உயிர்களையும்
இறைவன் படைத்ததாய்
வெறும் நம்பிக்கை.

எந்த இறைவனும்
தன்னுள் இன்னுமொரு
உயிர் சுமந்ததாய்
சான்றுகளில்லை.

எல்லா சாமிகளும்
கருவறைக்குள்
அடைந்திருக்கும் போது
கருவறையே
உனக்குள்
அடைந்திருக்கிறதே

இப்போதாவது
ஒப்புக்கொள்

நீ

இறைவனை விடவும்
உயர்நிலையானவள்.

11 comments:

  1. கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

    நன்றி...

    ReplyDelete
  2. சத்ரியன்,அத்தனை வரிகளுமே அற்புதம்.ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன்.

    பெண்ணுக்கு இத்தனை சிறப்பு இருந்தும் பெண்ணைப் பெண்ணாய் மதிப்புக் கொடுப்பது என்பது இயல்பாகவே குறைவாகத்தானே இருக்கிறது.பாட்டிலும் பயனிலும் மட்டுமே பெண் மதிக்கப்படுகிறாள்.
    உண்மையா இல்லையா சத்ரியன் சொல்லுங்கள் நீங்களே !

    ReplyDelete
  3. //பாட்டிலும் பயனிலும் மட்டுமே பெண் மதிக்கப்படுகிறாள்.
    உண்மையா இல்லையா சத்ரியன் சொல்லுங்கள் நீங்களே !? //

    ஹேமா,
    நானும் ஓர் ஆண் என்பதால் இந்தக் கேள்வியா? பரவாயில்லை.

    உருவம் கடந்து, "உயிர்" என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை உறுதியாக நம்புபவன் நான். நாம் உணர்ந்ததை அடுத்தவருக்கு எடுத்துரைக்கலாம்.

    அனைவருமே நம்மைப் போல்...என்பது பேராசையும், முட்டாள்தனமும் இல்லையா?

    ReplyDelete
  4. வணக்கம் திரு.ஜகத், தொடர்ந்து வந்துச் செல்லுங்கள்.தங்கள் கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  5. சத்ரியன் கூறியது...
    //பாட்டிலும் பயனிலும் மட்டுமே பெண் மதிக்கப்படுகிறாள்.
    உண்மையா இல்லையா சத்ரியன் சொல்லுங்கள் நீங்களே !? //

    //ஹேமா,
    நானும் ஓர் ஆண் என்பதால் இந்தக் கேள்வியா? பரவாயில்லை.

    உருவம் கடந்து, "உயிர்" என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை உறுதியாக நம்புபவன் நான். நாம் உணர்ந்ததை அடுத்தவருக்கு எடுத்துரைக்கலாம்.

    அனைவருமே நம்மைப் போல்...என்பது பேராசையும், முட்டாள்தனமும் இல்லையா?//

    இதுக்குத்தான் சமாளிப்பு என்பாங்களோ !

    ReplyDelete
  6. //இதுக்குத்தான் சமாளிப்பு என்பாங்களோ !//

    ஹேமா முதலில் மன்னிக்க வேண்டும்.சமாளிப்பு என்று அதைச் சொல்லிவிடமுடியாது.
    1."ஆம்/இல்லை" என்ற ஒற்றைச் சொல்லில் பதில் சொல்லி விட்டால் எதைப்பற்றியும் புரிதல் இல்லாமல் போய்விடும்.
    2."ஆம் ‍‍" என்று ஒப்புக்கொள்வதாலோ, "இல்லை" என்று மறுப்பதாலோ நிச்சயமாக மனவருத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
    3.சில விடயங்களை "மயான அமைதி" என்று சொல்வார்களே அம்மாதிரி நிலையில் மனதை வைத்து பரிசீலிக்க வெண்டியிருக்கிறது.

    ReplyDelete
  7. பெண்ணை மதிப்பவர்களும் இருக்கின்றார்கள்,
    மிதிப்பவர்களும் இருக்கின்றார்கள் சத்திரியனுக்கு
    {வரப்போறவரோ,வந்திருப்பவரோ} கொடுத்து
    வைத்தவர்.நல்லெண்ணம்,நல்லசிந்தனை
    நல்லகவிதை
    ஹேமா நல்லெண்ணம் இருந்தால்தான்
    {பெண் மேல் மதிப்பு}இப்படி கவிதை
    வரும் அதனால்......சத்திரியன்
    தங்க....தங்க...தங்கமான பையன்.

    ReplyDelete
  8. //...தங்கமான பையன்//

    கலக்...கலா, நீங்கள் தங்கமான பையன் என்று சொல்லப் போய், உரசிப்பார்த்து உறுதி செய்து கொள்ளலாமா என யாராவது கேட்கப் போகிறார்கள். நான் தான் வதைப்பட போகிறேன்.

    தங்களின் கருத்துரைக்கு நன்றி கலா.

    ReplyDelete
  9. அழகான சிந்தனை! பூங்கொத்து!

    ReplyDelete
  10. இன்று தான் உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன். கவிதை ப்ட்மாதமாக இருக்கிறது

    ReplyDelete
  11. //இன்று தான் உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன். கவிதை ப்ரமாதமாக இருக்கிறது//

    வணக்கம் குரும்பையூர் மூர்த்தி,

    நாள்தோறும் வாருங்கள். வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.