Jul 21, 2009

ஞாபகங்கள் ...


சிற்றிடையில்
சின்னதாய்ச்
சீண்டினேன்.

காதருகில் வந்து
நாயே என்றாய்.

அய்யய்யோ ...
நாயளவு நன்றியெல்லாம்
என்னிடம் இல்லை என்றேன்.

முறைத்துச்
சிரித்தாய்.

மூவிரண்டு ஆண்டுகள்
முடிந்த பின்னும்
மங்காத பிம்பங்களாய்
மனக்கண்ணில்...!


5 comments:

  1. சத்ரியன்,நினைவின் நோக்காடு.

    கொஞ்சம் வெளியில் வந்தால் உலகம் பெரிசு.

    ReplyDelete
  2. வணக்கம் ஹேமா, நிச்சயம் வருகிறேன்.அதற்கு முன் நிம்மதியாய் சுவாசித்துக்கொள்கிறேன்.

    உங்களின் அழைப்பிற்கும், கருத்துரைக்கும் நன்றி.

    "உப்புமடச் சந்தி" உங்கள் என்பது பிறப்பிடமா?

    ReplyDelete
  3. சின்னச் சின்ன கவிதைகள்
    அழகான வரிகளுடனும்.....ஆழமான கருத்துக்களுடனும்
    மிக அழகான படங்களுடனும் ...உங்கள் மலரும் நினைவுகளுடனுமென நினைக்கிறேன்
    சரியா? ஹேமா உங்கள் ரசிகை ஆகிவிட்டார் போலும்....ஆனால் ஹேமாவின் கவிதைகளை ஒவ்வொருவரிகளையும் மிகவும் ரசிப்பவள் நான்


    கலா

    ReplyDelete
  4. //உங்கள் மலரும் நினைவுகளுடனுமென நினைக்கிறேன் //

    படிப்பவர்களின் நினைவுகளும் மலரட்டுமே என்ற நோக்கோடும்...

    ஹேமா எங்கள் ரசிகை ஆகிவிட்டார் என்பதால் நீங்கள் ஹேமா ரசிகை ஆகிவிட்டீர், அப்படித்தானே...? நானும் தான்.

    நன்றி கலா.

    ReplyDelete
  5. ஆமாம் சத்ரியன்.யாழ்ப்பாணம் >>> கோண்டாவில்>>> "உப்புமடச்சந்தி"
    நான் பிறந்து வளர்ந்த இடம்.

    தோழி கலா, ஏன் குழந்தை நிலாவுக்குள் நீங்கள் வந்த தடம் எனக்குத் தெரியாமல் போனது.இங்காவது அறிந்து சந்தோஷப்படுகிறேன்.இன்னும் வாங்கோ.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.