Jul 31, 2009

அவளுக்குத் திருமணம்



உனைச் சுமந்த
கருவறை
இனி என்னுள்
எதற்கு ?

உனைப்
பிரிதல் என்பதும்
இறப்பு தான்
எனக்கு.

உன்னால்
வேண்டுமானால் முடியலாம்
உள்ளே என்னையும்
கணவனாய் வேறொருவனையும்
சுமக்க .

என்னால் முடியாது
எடுத்துக் கொண்டுப் போ
உன்னை உன்னோடு .



12 comments:

  1. கவிதை நன்றாக இருக்கிறது. படம் தான் மனதை எதோ செய்கிறது

    ReplyDelete
  2. //படம் தான் மனதை எதோ செய்கிறது//

    படிப்பவரை ஏதாவது செய்தால் தானே நானும் எதோ செய்து கொண்டிருக்கிறேன் என்று பொருள்.?

    நன்றி மூர்த்தி.

    ReplyDelete
  3. வணக்கம் சத்ரியன்

    நல்லாதாங்க இருக்கு படமும், கவிதையும்.

    சுள்ளுனு முகத்தில் அடிக்குது, கருத்து

    இராஜராஜன்

    ReplyDelete
  4. //சுள்ளுனு முகத்தில் அடிக்குது, கருத்து//
    வணக்கம் ராஜராஜன்,

    ஒருவேளை கோபத்துல எழுதியிருப்பனோ...?

    வாடிக்கையாய் வந்து போங்கள்.வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  5. நல்லா இருக்கு...மூர்த்தி சார் சொன்ன மாதிரி,ஓவியம் கொஞ்சம் கலங்க அடிக்குது.

    என்ன சத்ரியன், இப்போதான் இப்போதான் இழப்பீடு கேட்டீங்க. என்னபன்னுறது யோசிக்கிறதுக்குள்ளே இப்பிடி ஆயிடுச்சே..

    ஆண் இதயத்தின் கறி தேடி அலைகின்ற பெண்ணுக்கு இபிகோ ஸெக்ஷ்ஸன் என்ன, இந்த பாட்டு ஞாபகம் வருது...

    அடுத்து, உருகி,காதலிக்கு ஒரு கவிதை எதிர்பார்க்கிறேன் உங்களிடம்...(செய்வீகளா?)

    ReplyDelete
  6. அரங்கபெருமாள் சொன்னது...

    //அடுத்து, உருகி,காதலிக்கு ஒரு கவிதை எதிர்பார்க்கிறேன் உங்களிடம்...(செய்வீகளா?) //

    இதுக்கெல்லாம் வருத்தப் படாதீங்க பெருமாள்( நீங்கதான் எனக்குச் சொல்லனும்).காதல் செய்வது மனதின் செயல். கவிதை சொல்வது எனது தொழில்...அதனால் எழுதிட்டாப் போச்சி.

    ReplyDelete
  7. சத்ரியன் படம் அருமை.
    எங்கே எடுத்தீர்கள்.காதலும் அன்புமாய் கவிதை கனத்து நிற்கிறது.

    ReplyDelete
  8. மன்னிக்கவும் நான் கருத்துரைக்க
    விரும்பவில்லை அந்தப் படத்தை
    பார்க்கவும் பிடிக்கவில்லை
    அருமையான கவிதைக்கு
    எப்படி? இப்படி! போட மனசு
    வந்தது?

    ReplyDelete
  9. உங்கள் தளத்திற்கு முதன் முறையாக வந்தேன். அனைத்துக் கவிதைகளுமே மிகவும் நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. //த்ரியன் படம் அருமை.
    எங்கே எடுத்தீர்கள்.காதலும் அன்புமாய் கவிதை கனத்து நிற்கிறது.//

    ஹேமா,
    படம் இணையத்தில் சுட்டதுதான்.கவிதை மனதில் பட்டது.

    ReplyDelete
  11. //படத்தை
    பார்க்கவும் பிடிக்கவில்லை
    அருமையான கவிதைக்கு
    எப்படி? இப்படி! போட மனசு
    வந்தது?//

    கலா,

    இந்த படத்தைப் பார்த்துதான் எனக்குள் அந்தக் கவிதையே வந்தது என்றால், என்ன சொல்வீர்கள். உண்மையில் படத்திற்காக எழுதப்பட்ட கவிதை தான் அது.

    "அடிக்கிற கைதான் அணைக்கும் இல்லையா?, அதேபோல் அன்பைத் தரும் காதல் ரணத்தையும் தரும்", உண்மைகள் சில நேரங்களில் வலியைத்தரும்.

    ReplyDelete
  12. மோகன்,

    நாள்தோறும் வாருங்கள். நன்றி.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.