Jul 29, 2009

யாரேனும் சொல்லுங்கள் ...




எதிர்ப்பார்த்தே நிகழ்ந்ததுதான்
என்றாலும்,

விபத்தால் உறுப்பிழந்த
எனக்கு
இழப்பீடு தருவதுதானே
நியாயம்.?

அவளின் விழிகள்
வீசிய ஒளியால்
இழந்து தவிக்கிறேன்
இதயத்தை !

யாரேனும்
எடுத்துச் சொல்லுங்கள்
அவளிடம்.

நியாயத்தை !


15 comments:

  1. //அவள் விழிகள்
    வீசிய ஒளியில்
    இழந்து தவிக்கிறேன்
    இதயத்தை !//

    இதயத்திற்கும் மாற்று உண்டு ! கொஞ்சம் காஸ்ட்லி !

    ReplyDelete
  2. சத்ரியன்,நீங்க கேக்கிற இழப்பீடு சரிதான்.தருவாங்களான்னு தெரில்ல.சிலவேளை உங்க பக்கமும் தப்பு இருக்கலாம்.இழப்பீடு கிடைக்காது.

    ReplyDelete
  3. நல்ல கவிதை... அவளைக் காதலித்து,கல்யாணம் செய்து கொள்ளுங்கள். அவள்தான் அதற்கான இழப்பீடு.

    ReplyDelete
  4. ஜயோ ! பாவம் இதயமில்லாதவர்களா நீங்கள்
    எப்படி உயிர் வாழ்கிறீர்கள்?அதிசயம்தான் !
    நன்றாகப் பாருங்கள் அது விபத்து
    விளைவிக்கக் கூடிய கண்களா?
    நீங்களாகக் கற்பனை பண்ணினால்.........
    நன்றாகப் பாருங்கள் அது கொல்லும்
    கண்களா?இல்லை..இல்லை இல்லவேயால்லை
    அது காதலுடன் கண்கள்.
    “...........”??தெரியப்படுத்துங்கள்
    நிட்சயமாக நியாயம் கேட்கின்றேன்.

    ReplyDelete
  5. //இதயத்திற்கும் மாற்று உண்டு ! கொஞ்சம் காஸ்ட்லி !//

    வணக்கம் கோவியார்.
    நியாயம் கேட்டு வந்தால், பயமுறுத்துகின்றீர்களே.இந்த அநியாயத்தை நான் யாரிடம் சொல்ல...? தொடர்ந்து வந்து தட்டிக்கொடு(கேளு)ங்கள்.
    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  6. //நீங்க கேக்கிற இழப்பீடு சரிதான்.தருவாங்களான்னு தெரில்ல...இழப்பீடு கிடைக்காது.//

    ஹேமா, சரிதானென்று சொல்லுவியள், பிறகு தெரியாதென்று சொல்லுவியள்...இறுதியாய் கிடைக்கதென்றும் சொல்லி விடுவீர்கள். ம்ம்ம்...! என்னை இப்படி புலம்ப விட்டுட்டியள்...

    ந‌ன்றி ஹேமா.

    ReplyDelete
  7. //நன்றாகப் பாருங்கள் அது விபத்து
    விளைவிக்கக் கூடிய கண்களா?//

    கலா,
    நீங்களும் பெண் என்பதால், அவளது கண்கள் பற்றித் தெரியவில்லை உங்களுக்கு...!ஆனாலும், நீங்களாவது நியாயத்தைக் கேட்பதாய் சொன்னீங்களே.ஆறுதலாக இருக்கிறது எனக்கு.

    நன்றி கலா.

    ReplyDelete
  8. //அவளைக் காதலித்து,கல்யாணம் செய்து கொள்ளுங்கள். அவள்தான் அதற்கான இழப்பீடு.//

    வணக்கம் பெருமாள்,

    (பெயரிட்டு எழுதிய‌தற்கு மன்னிக்கவும்).ஒரு வார்த்தை அவளிடமும் சொல்லிடுங்களே...!

    தொடர்ந்து வந்து துணைப்புரியுங்கள். நான் பயந்த சுபாவம் கொண்டவன்.
    நன்றி.

    ReplyDelete
  9. டும் டும் டும் டுடும் டும் டுடும்...எல்லாத்தையும் நிறுத்தி கொள்வோம்...உங்க மனைவி சரசுவதி கோவித்துக்கொள்ள போகிறார்கள், இதனால் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் சத்திரியனுக்கு கல்யாணமாகி மூன்று குழந்தைகளும்...உண்டு. டும் டும் டும்

    ReplyDelete
  10. //இதனால் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் சத்திரியனுக்கு கல்யாணமாகி மூன்று குழந்தைகளும்...உண்டு. டும் டும் டும் ///

    நன்றி பெய‌ரில்லாதவரே...,
    எனக்கு மனைவி எத்தனைன்னு சொல்லிட்டிங்கன்னா ரொம்பவே மகிழ்ச்சியடைவேன். சண்டாளங்களா....

    ReplyDelete
  11. //சத்ரியன்...ஹேமா, சரிதானென்று சொல்லுவியள், பிறகு தெரியாதென்று சொல்லுவியள்...
    இறுதியாய் கிடைக்கதென்றும் சொல்லி விடுவீர்கள். ம்ம்ம்...! என்னை இப்படி புலம்ப விட்டுட்டியள்...//

    உண்மையாலும் அசத்திப்போட்டியள் சத்ரியன் என் மண் யாழ்ப்பாணத் தமிழில்.

    ம்ம்ம்...நீங்களாவே போய் மாட்டிக்கொள்ளுவியள்.பிறகு என்னடாவெண்டால் அந்தப் பெட்டை என்னை ஏமாத்திப்போட்டாள் என்பியள்.உங்களை....!

    அதென்ன ,உங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று குட்டிகளும் இருக்கென்று யாரோ உண்மையைச் சொல்லப் போக ,அவரைச் சண்டாளன் என்று திட்டியிருக்கீங்க.உங்க மனைவியின் பெயரையும் மிகச் சரியாச் சொல்லியிருக்காங்க பாவம்.

    ReplyDelete
  12. என்ன சத்ரியன் இப்பிடி சொல்லுரீங்க... தாரளமாக அப்பிடி கூப்பிடலாம்..அதுவுமில்லாம நான் ரொம்ப சிறியவன்.தொடர்ந்து வருவேன்.என் கருத்துக்களை பதிவேன்.

    சொல்லிட்டாப் போச்சு..(send me gaperumal_at_gmail_dot_com) நாம எதுக்கும் பயப்புடாத சிங்கம்ல.. (மனைவி தவிர... ஹி...ஹி..)

    ReplyDelete
  13. //அதென்ன ,உங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று குட்டிகளும் இருக்கென்று யாரோ உண்மையைச் சொல்லப் போக ,அவரைச் சண்டாளன் என்று திட்டியிருக்கீங்க.உங்க மனைவியின் பெயரையும் மிகச் சரியாச் சொல்லியிருக்காங்க பாவம்.//

    ஹேமா,

    "சரசுவதி" யார் பெத்த மகளென்டுத் தெரியல்லெ.அவுகளை என் மனைவியாக்கிப் பார்ப்பதில் " பெயரில்லாதவருக்கும், ஹேமாவிற்கும் " எல்லையில்லா மகிழ்ச்சி போல் தெரிகிறது. ஆனாலும், சரசு பாவம் இல்லியா?.
    இந்த ஆட்டத்திலிருந்து அவங்களை நீக்கிடுவோம்.

    நில்லுங்கோ...நில்லுங்கோ...சரசுவதியோட கணவர் சண்டைக்கு வந்தால் நான் தனியாளா என்ன செய்யிறது என்டும் கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ.

    ReplyDelete
  14. ithu... alaipaayuthey shalini kan thaane?

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.