Aug 4, 2009

என்ன இது?



உன் பெயரையும்
என் பெயரையும்
ஒன்றாக்கி எழுதியிருந்தேன்
நாட்குறிப்பில்.


விருந்துக்கு வந்த - என்
அத்தைமகள்
விபத்தாய் அதைப்
பார்த்துவிட்டு
பற்றவைத்து விட்டாள் - அவள்
அத்தையிடம். (என் அம்மா)

முதலில் அக்கா,
பின் அம்மா, அண்ணா
ஏன் தம்பியுங்கூட !

என்னைச் சுற்றி
அரண் போல் நின்று
அரம் போல் அறுத்தார்கள்

"என்ன இது ?" ,எனக் கேட்டு.

'என்ன அது' , என்று
உண்மையாகவா தெரிந்திருக்காது...?




9 comments:

  1. சத்ரியா உங்க வீட்டு போன் நம்பர் தாங்க.நான் தெளிவா விளங்கப்படுத்தறேன் உங்க அம்மாவுக்கு.நான் இல்லாட்டி கலா கண்டிப்பா உங்களுக்கு உதவி பண்ணூவோம்.(கலா...OKயா)

    சத்ரி(பிரி)யா.எப்பிடி நான் உடனேயே கண்டுபிடிச்சிட்டேன்.சரியா?
    (வீட்ல யாராச்சும் பாக்கப்போறாங்க)

    ReplyDelete
  2. //சத்ரி(பிரி)யா.எப்பிடி நான் உடனேயே கண்டுபிடிச்சிட்டேன்.சரியா?
    (வீட்ல யாராச்சும் பாக்கப்போறாங்க)//

    ஹேமா,
    உலகமே பாக்குறா மாதிரி செய்துட்டு வீட்ல யாராவது பாத்துடப் போராங்கன்னு வேற பீதியக் கிளப்பாதீங்க.

    போன வாரத்துல "சரசுவதி",ன்னு ஒருத்தரு சொல்றாரு. இந்த வாரம் "ப்ரியா",வா?. அடுத்த வாரம் யாரோ மகராசி.?...எத்த்த்த்த்த்த்த்தன......?

    ReplyDelete
  3. நாட்குறிப்பில் பலபெயர்களையும்
    {பெண்கள்}எழுதி வைத்திருந்தால்
    அறுக்காமல்,அவர்கள்அணைக்கவா?
    முடியும்.

    உங்கள் தில்லுமுல்லு அவர்களுக்கு
    தெரிந்திருக்க முடியாதென நினைக்கின்றேன்.
    இனிமேலாவது சீ.ஐ.டி போடச் சொல்லலாமா?

    பாவம் ஹேமா {ரொம்ப சேவை மனப்பான்மை}
    கொடுக்கட்டுமா?.......தொலைபேசி இலக்கத்தை
    ஹேமா இதோ...இதோ...................................
    மறக்காம பற்ற வைக்கவேண்டும்.நன்றிம்மா.


    சத்ரியன் கவிதையின் முடிவு என்ன? ஆச்சு???
    நடந்ததா? நடந்துகொண்டிருக்கின்றதா??
    நடக்கப் போவதா???

    ReplyDelete
  4. //பாவம் ஹேமா {ரொம்ப சேவை மனப்பான்மை}
    கொடுக்கட்டுமா?.......தொலைபேசி இலக்கத்தை
    ஹேமா இதோ...இதோ...................................
    மறக்காம பற்ற வைக்கவேண்டும்.நன்றிம்மா.//

    கலா...எரியிற கொல்லியில மேற்கொண்டு எண்ணைய ஊத்தச் சொல்றீங்க.

    ஹேமா நல்லது செய்யிறதுன்னா நீங்க மட்டும் செய்யுங்க. கலாவ கூட சேக்காதீங்க.

    ReplyDelete
  5. //சத்ரியன்...ஹேமா நல்லது செய்யிறதுன்னா நீங்க மட்டும் செய்யுங்க. கலாவ கூட சேக்காதீங்க.//

    சத்ரியா,இரண்டு பேர்ம் சேர்ந்து ஒரு உருப்படியான அலுவல் செய்யலாம்ன்னா விடமாட்டீங்களே!

    ReplyDelete
  6. //இரண்டு பேர்ம் சேர்ந்து ஒரு உருப்படியான அலுவல் செய்யலாம்ன்னா விடமாட்டீங்களே!//

    ஹேமா,
    இரு பெண்கள் சேர்ந்து ஒரு நல்ல அலுவல்...ம்ம்ம்?...தங்காது.

    ReplyDelete
  7. பாவம் அப்பாவிகள்.. உங்கள் மேல் நம்பிக்கைக் கொண்டு இப்படி கேட்கிறார்கள்... உண்மை சொல்ல வேண்டிய தருணம் இது. உறங்க விடவேண்டாம்...

    ReplyDelete
  8. //உண்மை சொல்ல வேண்டிய தருணம் இது //

    நல்லா மாட்ட விட்ருவீங்கப் போலிருக்கே!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.