Aug 24, 2009

மை


' முடிவென்பது
வேறொன்றின் தொடக்கமே '
என்பது நிஜம் தான் போல!

நம்மூர்
கோயில் திருவிழா நிறைவடைந்தது.
நம்மிடையே
காதல் திருவிழா ஆரம்பமானது.

திருவிழா முடிந்து
உறவுகளெல்லாம்
ஊருக்குப் புறப்படும்
பரபரப்புக் காலையில்...

என் அறைக்கு ஓடிவந்து
கண்ணாடிக்கு முன் நின்று
கண்ணுக்கு மையிட்டு
நுனிவிரலால் தொட்டெடுத்து
திருஷ்டியாய் கண்ணாடிக்கும்
வைத்துவிட்டுச் சென்றுவிட்டாய் .


அன்றிலிருந்துதான்.....

அடிக்கடி
கண்ணாடி பார்க்கத் தோனுது.
பார்த்தாலும்
உன் முகத்தை மட்டும் தான் காட்டுது.
பார்த்தபடியே
கண்டதையும் பேசத் தூண்டுது.
பேசினாலும்

பதிலுக்கு கண்ணைச் சிமிட்டுவதும்
உதட்டைச் சுழிப்பதுமாய்
கண்ணாடிக்குள் இருந்தபடியே ...நீ !

உண்'மை' யைச் சொல்லேன்.
அன்று நீ
' மை '
வைத்து போனது
கண்ணாடிக்கா...?
என் கண்ணுக்கா...?


பி. கு:-

ஆக்கம்- சத்ரியன்.
ஊக்கம் - ஹேமா .

13 comments:

  1. எனது வலைப்பக்கத்திற்கும் எனக்கும் சிறு பிணக்கு.அதனால், நண்பர்கள் சிலரின் கருத்துரைகளை என் மின்னஞ்சலிலிருந்து வெட்டி, ஒட்டி அவர்கள் சார்பாகவே வெளியிட்டுள்ளேன். குறித்த நபர்கள் மன்னித்துக் கொள்ளவும்.

    உங்கள் அன்பு,
    சத்ரியன்.

    ReplyDelete
  2. R.Gopi சொன்னது...

    // முடிவென்பது
    வேறொன்றின் தொடக்கமே '
    என்பது நிஜம் தான் போல!

    நம்மூர்
    கோயில் திருவிழா நிறைவடைந்தது.
    நம்மிடையே
    காதல் திருவிழா ஆரம்பமானது.//

    ஆஹா... அசத்தல் ஆரம்பம்...

    //என் அறைக்கு ஓடிவந்து
    கண்ணாடிக்கு முன் நின்று
    கண்ணுக்கு மையிட்டு
    நுனிவிரலால் தொட்டெடுத்து
    திருஷ்டியாய் கண்ணாடிக்கும்
    வைத்துவிட்டுச் சென்றுவிட்டாய் //

    மை வச்சாச்சா...இனிமே திண்டாட்டம்தான்...

    //அன்று நீ
    ' மை '
    வைத்து போனது
    கண்ணாடிக்கா...?
    என் கண்ணுக்கா...?//

    சூப்பர்...விடை தெரியா கேள்வி...அருமை...

    ReplyDelete
  3. //மை வச்சாச்சா...இனிமே திண்டாட்டம்தான்...//

    வாங்க கோபி,

    வச்சிருப்பாங்களோ...?

    ReplyDelete
  4. சத்ரியன்,இவ்ளோ விஷயத்தை மனசுக்குள்ள வச்சுக்கிட்டுத்தான் கவிதை கவிதையாக் கொட்டுறீங்களோ!

    கண்ணாடி முன்னாடி மட்டும் கதை பேசாம அவங்களுக்கும் உங்க மனசைக் கண்ணாடியாக் காட்டிட்டீங்களா !

    வாழ்த்துக்கள் இப்பவே.

    ReplyDelete
  5. //கண்ணாடி முன்னாடி மட்டும் கதை பேசாம அவங்களுக்கும் உங்க மனசைக் கண்ணாடியாக் காட்டிட்டீங்களா !

    வாழ்த்துக்கள் இப்பவே.//

    ஹேமா,

    வந்துட்டீங்களா...! கேட்டீங்கதானே, அதான்.

    மறுபடியும் கண்ணாடியா காட்டிக்கிட்டு நின்னா... உடைஞ்சி போயிடும், கை,கால்,மூஞ்சி, வாய் - ன்னு. அம்மாவிற்கும், ரெண்டு தங்கச்சிகளுக்கும் நான் ஒன்னே ஒன்னு; கண்ணே கண்ணு. அதனால என்னை ஆளை விடுங்கோ...

    ReplyDelete
  6. அப்போ மனசோட "மை"யலா !என்ன சத்ரியன் தைரியம் வேணும்.பிடிச்சா போராடணும்.சும்மா புலம்பிட்டு...!

    ReplyDelete
  7. நட்புடன் ஜமால் சொன்னது...

    உன் முகத்தை மட்டும் தான் காட்டுது.
    பார்த்தபடியே
    கண்டதையும் பேசத் தூண்டுது.

    ஆஹா! அருமை

    காதல் துவக்கம் ...

    ReplyDelete
  8. நட்புடன் ஜமால் சொன்னது...

    கண்ணைச் சிமிட்டுவதும்
    உதட்டைச் சுழிப்பதுமாய்
    கண்ணாடிக்குள் இருந்தபடியே ...நீ !

    அழகு அழகு...

    ReplyDelete
  9. நட்புடன் ஜமால் சொன்னது...

    அன்று நீ
    ' மை '
    வைத்து போனது
    கண்ணாடிக்கா...?
    என் கண்ணுக்கா...?

    அட!

    ஒரு வித்தியாசமான சிந்தனை தான்.
    கற்பனைதான்.

    'மை' வச்சிட்டாங்களோ ...

    August 24, 2009 4:37 AM

    ReplyDelete
  10. அவங்களோட கண்ணுக்குள் நீங்க இருக்கும் போது,

    //கண்ணாடிக்கா...?
    என் கண்ணுக்கா...?
    //

    இந்த கேள்விக் கேட்கலாமா?
    அருமையானக் கவிதை

    ReplyDelete
  11. //'மை' வச்சிட்டாங்களோ ...//

    ஜமால்,

    ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ...? எதுக்கும் , நம்மலும் ஒரு நல்ல இடத்துல போயி 'மை' போட்டு பார்த்துடனும்.

    ReplyDelete
  12. //அப்போ மனசோட "மை"யலா !என்ன சத்ரியன் தைரியம் வேணும்.பிடிச்சா போராடணும்.சும்மா புலம்பிட்டு...!//

    ஹேமா,

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டுத்தானே , மனுஷன் ரணமாகிக் கிடக்கிறேன்.

    ஹேமா,
    மறுபடியும் சொல்றேன். கலா கூட சேராதிங்க.

    ReplyDelete
  13. //அவங்களோட கண்ணுக்குள் நீங்க இருக்கும் போது,

    //கண்ணாடிக்கா...?
    என் கண்ணுக்கா...?
    //

    இந்த கேள்விக் கேட்கலாமா?
    அருமையானக் கவிதை//

    பெருமாள்,

    தப்புதான்.தப்புதான்.
    காதல் மயக்கம். வேறொன்னுமில்லை.!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.