Aug 3, 2009

அமுத கனி




காதல் தோல்வி

கசப்பானதொரு
அனுபவம் தான்.

ஆனாலும்

சுகமானது.

உண்ணும்போது
சிறிதாய்க் கசந்தாலும்,
எண்ணும்போது
இனிக்கும்
நெல்லிக்கனி போல...!


12 comments:

  1. நல்லதொரு கவிதை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம். துபாய் ராஜா,

    அப்போ அங்கேயும் அனுபவம் இருக்கு?

    அது சரி,அதென்ன "துபாய் ராஜா"?

    ReplyDelete
  3. வேறெதிலாவது தோல்வி
    ஏற்பட்டால் {அனுபவம் தேவை}
    என நினைத்து....
    ஆனாலும் சுகமானது
    என்று விட்டு விடலாம்
    இது காதல் ஐயா..காதல்
    காதலில் தோல்வி ஏற்பட்டால்
    இனிக்குமா?
    சிதறிய இதயத்தில்
    இனிப்பேது?கசப்பேது?
    {ஒன்றை நினைவில் வைக்க
    வேண்டும் அதாவது இருவரும்
    ஒரு மனதாய்,முழுமையாய்
    காதலித்திருந்தால்}
    ஆடை மாற்றுவது போல்
    ஆளை மாற்றுபவர்களுக்கு
    அவ்வளவு பாதிப்பு இருக்காதென
    நான் நினைக்கின்றேன்.

    “ஆனாலும் சுகமானது” {இவ் வரியை}
    இதை என்னால் ஏற்றுக்
    கொள்ளமுடியவில்லை

    ReplyDelete
  4. //“ஆனாலும் சுகமானது” {இவ் வரியை}
    இதை என்னால் ஏற்றுக்
    கொள்ளமுடியவில்லை//

    முயற்சிக்க வேண்டும் கலா.

    ReplyDelete
  5. சத்ரியன்,நல்லா வாங்குங்க கலாக்கிட்ட.கவிதைக்குப் பொய்யழகுன்னு சொல்லுங்க.
    (சரி எனக்கும் உதை விழப்போகுது)

    காதல் தோற்ற வேகத்தில் வேதனை.காலப்போக்கில் நினைவுகள் சிலசமயம் சுகமாயிருக்கலாம்.
    சரியா கலா.

    ReplyDelete
  6. என்ன சத்ரியன் நான் என்ன கேட்டேன், என்ன தாரீக.... ரொம்ப நொந்து போன மாதிரி தெரியுதே, என்ன விவரம்? நல்லா இருக்கு, வேறுவழியில்லை எனவே இந்த மாதிரி கவிதை கலா,,, என்ன சரிதானே?

    ReplyDelete
  7. //அரங்கபெருமாள் சொன்னது...நல்லா இருக்கு, வேறுவழியில்லை.//

    அரங்கபெருமாள்,அப்படியானதொரு முடிவிற்கு வந்துவிடாதீர்கள். சத்ரியனிடமிருந்து நிறைய வரவிருக்கிறது.

    ReplyDelete
  8. //சத்ரியன்,நல்லா வாங்குங்க கலாக்கிட்ட.//

    ஹேமா,
    இது உங்களுக்கே நல்லாயிருக்கா? நான் வாங்கி கட்டிக்கிறது உங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கு. ம்ம்ம்...ம்!

    //கவிதைக்குப் பொய்யழகுன்னு சொல்லுங்க.//

    அதான் நீங்களே சொல்லிட்டீங்களே. நடுவில நான் எதுக்கு? ( நீங்களும் கொஞ்சம் வாங்குங்க).

    ReplyDelete
  9. எடுத்துக் காட்டுக்குச் சொல்லப்போனால்...
    என்ன?எல்லோரும் நான் காதலில்
    தோற்றவள் என்றே முத்திரை
    குத்தி விட்டீர்கள்.இதுதான்
    நல்லதுக்கு காலம் இல்லை
    என்கிறதோ !
    கவிதைக்கு பொய்யழகுதான்,
    பொய்யே கவிதையாகக்
    கூடாது.
    எத்தனை வர்ணணைகள்,எத்தனை
    உவமானங்கள் ஒரு கவிதையில்
    உண்டு. ஆனால், அவைகள்
    ஏற்றுக்கொள்ளக் கூடியவை.
    தயவுசெய்து ஹேமாவோ,நீங்களோ
    {உணமையான,புனிதமான}காதல்
    தோல்வி அடைந்தவர்களிடம்
    உங்கள் காதல் தோல்வி சுகமானதா?
    இனிப்பானதா?என்று கேட்டு எனக்குச்
    சொல்லுங்கள் அவர்கள் சொல்வதை
    நான் ஏற்றுக் கொள்கிறேன.

    {ஹேமா..ஹேமா யானைக்கொரு காலம்
    வந்தால் பூனைக்கொரு காலம்.............}

    ReplyDelete
  10. //எடுத்துக் காட்டுக்குச் சொல்லப்போனால்...
    என்ன?எல்லோரும் நான் காதலில்
    தோற்றவள் என்றே முத்திரை
    குத்தி விட்டீர்கள்.இதுதான்
    நல்லதுக்கு காலம் இல்லை
    என்கிறதோ !//

    ச்சே...ச்சே...கலாவும் கவிதைகளின் ரசிகை. கொஞ்சம் கலாய்க்கலாமே என்றுதான்...!

    //தயவுசெய்து ஹேமாவோ,நீங்களோ
    {உணமையான,புனிதமான}காதல்
    தோல்வி அடைந்தவர்களிடம்
    உங்கள் காதல் தோல்வி சுகமானதா?
    இனிப்பானதா?என்று கேட்டு எனக்குச்
    சொல்லுங்கள்//

    கலா,
    உண்மயா (!?) நானே இருக்கும் போது, வேறு யாரை நான் தேடியலைய...?

    ஹேமா, நீங்க ஏதும் எனக்கு உதவிக்கு வாரீங்களா?

    ReplyDelete
  11. //சத்ரியன்...ஹேமா, நீங்க ஏதும் எனக்கு உதவிக்கு வாரீங்களா?//

    சத்ரியன்,பாருங்க உங்களுக்காக நான் கதைக்கப்போய் நான் கலாகிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டது போதாதா?கலா கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கா.
    எப்போ என்னைக் கவிழ்க்கிறதுன்னு.
    பயமா வேற இருக்கு.சத்ரியன் காதல் தோல்வி கஸ்டமானதுன்னு ஒத்துக்கிடுங்க.
    (கலா மெல்லச் சிரிக்கிறது தெரியுது)

    ReplyDelete
  12. //சத்ரியன் காதல் தோல்வி கஸ்டமானதுன்னு ஒத்துக்கிடுங்க.
    (கலா மெல்லச் சிரிக்கிறது தெரியுது)//

    சரி சரி. பெண்களெல்லாம் ஒன்னு சேந்துக்கிட்டாங்க. நாம அடுத்த கவிதைய கட்ட போவோம். சத்ரியா இனிமே தான்டா நீ தைரியமா இருக்கனும்...!

    (கலா மெல்லச் சிரிக்கிறது தெரியுது எனக்கும்.)

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.