Aug 30, 2009

வழித்துணை



என்
வாழ்வின் உயர்விற்குக்
காரணியாய் நீயிருந்தாய் .
வாழ்வின் பயணத்திற்கும்
வழித்துணையாய் நீ வருவாய்

எனத் திளைத்திருந்த
மணித்துளியில்...
என்ன நிகழ்ந்ததோ ,
நஞ்சு என அறிந்தே
கஞ்சி போல் குடித்து
என்னை ஏங்க விட்டுத்
தூங்கி விட்டாய்
நிரந்தரமாய்....

மண் உண்டுப் போயிருக்கும்
என்னை மறைத்து வைத்த
உன் இதயத்தை.
என்னச்சொல்லி நான் தேற்ற
உன்னைச் சுமக்கும்
என் இதயத்தை ...?

ஆன்மா உன்னைத்
தேடும்போதெல்லாம்
துறவியாய் - உன்
துயிலறை வருகிறேன்.

உன்
மடிமீது அமரும் நினைவில்
நீ படுத்துறங்கும்
மண்மேடு மீதமர்ந்து
மாண்டு மீள்கிறேன் ...

உனைத் தனியாய்த்
தூங்கவிட்டு
திரும்பி
நான் வருகையில்
எனக்குத் துணையாய்
உன் துயர நினைவுகள்...
......... ...........!

இன்று ...நான்
இன்பமாய் வாழ்வதாய்
எல்லோரும் எண்ணுகிறார்கள்
என்றாலும்,

நான்
நடமாடும் கல்லறை
கண்ணே!

16 comments:

  1. உனைத் தனியாய்த்
    தூங்கவிட்டு திரும்பி
    நான் வருகையில்
    எனக்குத் துணையாய்
    உன் துயர நினைவுகள்]]


    காதலின் ஆழம்.

    அருமை நண்பரே!

    ReplyDelete
  2. சத்ரியன் முழுதுமாகவே கவிதை கலக்கமாய் இருக்கு.எப்பவும் போல இல்லை ஏன் ?

    ReplyDelete
  3. //என்
    வாழ்வின் உயர்விற்குக்
    காரணியாய் நீயிருந்தாய் .
    வாழ்வின் பயணத்திற்கும்
    வழித்துணையாய் நீ வருவாய்//


    //மண் உண்டுப் போயிருக்கும்
    என்னை மறைத்து வைத்த
    உன் இதயத்தை.
    என்னச்சொல்லி நான் தேற்ற
    உன்னைச் சுமக்கும்
    என் இதயத்தை ...?//


    //உனைத் தனியாய்த்
    தூங்கவிட்டு திரும்பி
    நான் வருகையில்
    எனக்குத் துணையாய்
    உன் துயர நினைவுகள்...//



    அற்புத‌மான‌ வ‌ரிக‌ள். உண்மையான‌ வேத‌னையை உண‌ர்த்தி நிற்கின்ற‌ன‌!

    ReplyDelete
  4. மண் உண்டுப் போயிருக்கும்
    என்னை மறைத்து வைத்த
    உன் இதயத்தை.
    என்னச்சொல்லி நான் தேற்ற
    உன்னைச் சுமக்கும்
    என் இதயத்தை ...?


    வலியுடனான வரிகள் என்றாலும் கவிதை அழகு மனவிழி

    ReplyDelete
  5. சத்ரியன்... என்ன ஆச்சு உங்க(ஆ)ளுக்கு. சோக கீதம் நல்லாயிருக்குன்னு எப்பிடி சொல்லுரது.

    அட என்னங்க...

    சிறு திருத்தம்
    --------------------
    காஞ்சி? கஞ்சி?

    ReplyDelete
  6. //உன்
    மடிமீது
    அமரும் நினைவில்
    மண்மேடு மீதமர்ந்து
    மாண்டு மீள்கிறேன் ...//

    நல்ல காதல் வரிகள் நண்பா..

    ReplyDelete
  7. //காதலின் ஆழம்.//

    ஜமால்,

    ஆமாம்.மீண்டு வர முடியாத அளவு....!

    ReplyDelete
  8. //சத்ரியன் முழுதுமாகவே கவிதை கலக்கமாய் இருக்கு.எப்பவும் போல இல்லை ஏன் ?//

    ரிலாக்ஸ் ஹேமா,

    சோகம்,சுகம்,கோபம்,விரக்தி....ஹேமாவிற்கு மட்டும் சொந்தமா என்ன? எனக்கும் தான்.

    படிச்சிட்டு ரொம்பவும் கலக்கமாயிட்டிங்கப் போல.

    வெறும் பா‍‍வனை மட்டுந்தான்.பயப்படாதீங்க...சரியா?

    ReplyDelete
  9. //என்
    வாழ்வின் உயர்விற்குக்....

    //மண் உண்டுப் போயிருக்கும்
    என்னை மறைத்து வைத்த....

    //உனைத் தனியாய்த்
    தூங்கவிட்டு திரும்பி
    நான் வருகையில்
    எனக்குத் துணையாய்
    உன் துயர நினைவுகள்...//

    அற்புத‌மான‌ வ‌ரிக‌ள். உண்மையான‌ வேத‌னையை உண‌ர்த்தி நிற்கின்ற‌ன‌!

    யாழினி,
    எனக்கு மிகவும் பிடித்த பெயர்.முதல்முறை வந்திருக்கிறீங்க.சோகக் கவிதையைப் படிச்சிட்டு ,என்னை ஆறுதல் படுத்த வந்தீங்களா?

    பாவனைக் கவிதை தான். காதல் எனக்கு அவ்வளவு பெரிய சோகத்தை இதுவரைத் தரவில்லை. கடவுள் அதைவிடவும் பெரிய சோகங்களை மட்டும் தந்திருக்கிறான்.சோதனைகள் அவனுக்குப் பிடிக்கும்.அவனை எனக்குப் பிடிக்கும்!

    தொடர்ந்து வந்து தட்டிக்கொடுங்கள்.தவறு கண்டால் சுட்டிக் காட்டுங்கள்.

    வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  10. //வலியுடனான வரிகள் என்றாலும் கவிதை அழகு மனவிழி//

    சக்தி,

    தனதான அனுபவம் இல்லையென்றாலும், காதல் உணர்வுகள் ஒருவகையில் அனைவரையும் சஞ்சலப்படுத்துவதில் சக்தி வாய்ந்ததாகவே இருக்கிறது.

    மனவிழி என்பது வலைப்பூத் தலைப்பு. சத்ரியன் எனக்குறிப்பிடுங்கள்.

    ReplyDelete
  11. //சத்ரியன்... என்ன ஆச்சு உங்க(ஆ)ளுக்கு. சோக கீதம் நல்லாயிருக்குன்னு எப்பிடி சொல்லுரது.

    அட என்னங்க...//

    அரங்க பெருமாள்,

    கவலைப்படாதீங்க. சத்ரியனுக்குச் சாவேயில்லன்னு ஒரு வசனம் இருக்கும். அதுபோல, சத்ரியனோட காதலுக்கும் அது இல்ல.

    ஹேமாவிற்கான பதில்தான் உங்களுக்கும்.அது வெறும் பாவனை.

    ReplyDelete
  12. வாங்க வசந்த்,

    பதிவுலகத்துல பேரன், பேத்தியெல்லாம் எடுத்திருப்பீங்க போல.
    அவ்வளவு பதிவுகள் இருக்கு உங்கள் வலைப்பூவில்!

    //உன்
    மடிமீது
    அமரும் நினைவில்
    மண்மேடு மீதமர்ந்து
    மாண்டு மீள்கிறேன் ...//

    நல்ல காதல் வரிகள் நண்பா..
    ...
    வரிகள் பாதித்திருக்கும் போல.
    எனக்கு வலிக்கலப்பா.(மறத்துப்போச்சி.)

    ReplyDelete
  13. உன்
    மடிமீது அமரும் நினைவில்
    நீ படுத்துறங்கும்
    மண்மேடு மீதமர்ந்து
    மாண்டு மீள்கிறேன் ...

    eaanpa evalavu songam kastama iruku pa

    ReplyDelete
  14. //உன்
    மடிமீது அமரும் நினைவில்
    நீ படுத்துறங்கும்
    மண்மேடு மீதமர்ந்து
    மாண்டு மீள்கிறேன் ...

    eaanpa evalavu sogam. kastama iruku pa
    (ஏன்ப்பா எவ்வளவு சோகம். கஷ்டமா இருக்குப்பா )///

    காயத்ரி,

    ஐய்ய்ய்யோ காயத்ரி... முதல்ல கண்ணத் தொடைச்சிக்குங்க. வெறும் கவிதை தானேப்பா. நிம்மதியாப் போய் தூங்குங்க. காலையில, நீங்க சந்தோஷிக்கறா மாதிரி ஒரு காதல் கவிதை பதிவிடறேன்.

    மேலேயுள்ளது நிஜமாகவே பாவனைக் கவிதைதான். ந‌ம்புங்க!

    ReplyDelete
  15. சத்ரியன் உங்களையும் காணல.
    கொஞ்சம் பயந்துதான் போய்ட்டேன்.இனி வேணாம் இப்பிடி !

    ReplyDelete
  16. //சத்ரியன் உங்களையும் காணல.
    கொஞ்சம் பயந்துதான் போய்ட்டேன்.இனி வேணாம் இப்பிடி !//

    ஹேமா,

    கொஞ்சமா? எக்கச்சக்கச்சக்கமா பயந்திருக்கீங்க.(இப்பவும் நீங்க ரொம்ப தைரியமானவங்கன்னு நம்புறேன்.) நீங்களே இப்பிடின்னா,பாவம் காயத்ரி உங்களைவிட ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பயந்திருப்பாங்க போல!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.